Why not use the majority? Archives - Oruvan.com

பெரும்பான்மையை பயன்படுத்தாது ஏன்?
(ஒருவன் நாளிதழின் இன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கம்)

“நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காலத்தை செலவிடாமல் அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் ஈடுபடுகிறது” இது யோஷிதவின் கைது குறித்து நாமல் ராஜபக்சவின் குற்றச்சாட்டு.

நாட்டு மக்களுக்கு தீர்வு காண வேண்டிய பல பிரச்சிரனகள் இன்னுமும் அப்படியே இருக்கின்றமை உண்மைதான். சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிய அளவிற்கு கொண்டு செல்வதும் அரசாங்கம் தான். இது ஒரு அரசியல் நாடகம் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

யோஷித ராஜபக்சவின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமன்றி எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலும் சில கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இதைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்டமை ஆகிய விடயங்கள் தற்போதைய அரசாங்கம், அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகிறது என்பதற்கு இன்னுமும் வலுவான காரணியாக பார்க்கப்படுகிறது.

எனினும், இவ்விரு விடயங்களையும் அரசாங்கத்தின் சில்லறை செயலாக எடுத்துக் கொள்ளமுடியாது.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அப்போதைய தேர்தல் மேடைகளில் ஊழல்வாதிகள் தகுதி தராதிரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் எனவும் வாக்குறுதியளித்திருந்தார். ஆக, யோஷிதவின் கைதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு செயலாக நிச்சயம் நாம் கருத முடியும்.

அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்டமை கூட அரசாங்கத்தை பாராட்டக் கூடிய ஒரு விடயமாகும். மாதாந்தம் குறிப்பிட்ட ஒரு தொகையை முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு செலுத்துவதற்கு மக்கள் வரிப்பணமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெற்றுக் கொள்வதன் மூலம் அரச செலவீனமானது குறைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஊழலால் பெருத்துப்போன அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிக்கொண்டுவர முன்வந்திருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு பலரும் சேறு பூசி வரும் நிலையில் இன்னும் சில அரசியல்வாதிகள் அச்சத்தில் உலறிக் கொட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஜேவிபியின் முகத் தோற்றமுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை மக்கள் முன் நிறுத்தியமை உண்மைதான். சில வாக்குறுதிகள் தேர்தல் மேடைகளுக்கு இனித்தாலும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை அரசாங்கம் தற்போது புரிந்து கொண்டும் உள்ளது.

அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, நிறைவேற்றுமாறு நாம் கட்டாயப்படுத்துவதும் ஒரு வகையிலான முட்டாள்த்தனம் தான்.

இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பழிவாங்கல்களை மேற்கொண்டு வருகிறது என குற்றம் சுமத்தப்பட்டாலும் கூட கடந்த காலங்களில் ஜேவிபி மகிந்தவுடன் இணைந்தும் செயற்பட்டதை வரலாறு கூறுகின்றது.

2005ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு ஜேவிபி இருந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச சுனாமி நிதியை மோசடி செய்ததாக அப்போதிருந்த எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்த போதிலும் ஜேவிபியானது தனது அரசியல் மேடைகளில் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றி வந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.

எனினும், ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல இவ்விடயத்திலும் நாம் இரு விடயங்களை அவதானிக்க முடியும்.

உண்மையிலேயே, அரச செலவீனத்தை குறைப்பது தான் அநுரகுமார திஸாநாயக்கவின் நோக்கமாக இருந்தால் அதற்கான சரத்துக்களை அரசியலமைப்பில் திருத்தம் செய்து சலுகைகளை மீளப் பெற்றிருக்கலாம் அதற்கான பெரும்பான்மை அதிகாரமும் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது.

எனினும், மக்கள் சந்திப்புகளில் கலந்துக்கொண்டு பகிர்ஙகமாக மகிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி குற்றம் சுமத்துவது தற்புாதைய விமர்சனங்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் அதிகாரங்களை தாராளமாக பயன்படுத்த முடியும் எனினும், இவ்வாறு பொது இடங்களில் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு வகையிலான பிரசாரமாக இருக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.

மக்கள் ஆணையை காப்பாற்றுவோம் என உறுதி பூண்டுள்ள அரசாங்கம் ஊழல்வாதிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. அவை மக்களால் அவதானிக்கப்பட்டும் வருகின்றன. எனினும், அவை ஒருபோதும் சுய அரசியல் இலாபங்களை மையமாகக் கொணடவையாக இருந்துவிடக் கூடாது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அளவிற்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தினூடாக பல மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். எனினும், அதைத் தவிர்த்து விட்டு பொதுமக்கள் சந்திப்புகளில் மகிந்தவின் பாதுகாப்பை 60 ஆக குறைத்து விட்டோம், அதிகம் புலம்பினால் அதையும் நிறுத்தி விடுவோம்” என்றொரு அதிகாரத் தொனியில் கூறியிருந்தமையும் அனைவராலும் அவதானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் பல விடயங்களை முன்வைத்துள்ளனர்.

அதில் முக்கியமானது இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மக்கள் அது நிறைவேறும் வரை காத்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் போது மக்கள் நிலை தடுமாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அரிசி நெருக்கடி தீர்ந்து தற்போது அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவது அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆக, ஊழலை ஒழிக்கும் திட்டங்களில் காட்டும் அதீத ஆர்வத்தை அரசாங்கம் பொருளாதாரத்திலும் காட்ட வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கை.

The post பெரும்பான்மையை பயன்படுத்தாது ஏன்? appeared first on Oruvan.com.