weather Archives - Oruvan.com

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை
எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனிக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38-42 பாகை செல்சியஸ் ஆக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக்கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸை்விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் எதிர்வரும் நாட்களில் (02.04.2026 முதல் 15.04.2026)வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

-புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

The post சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பக் குறியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை (08) எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை

எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகரித்து வரும் வெப்ப அளவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், இந்தக் காலகட்டத்தில் வெப்பம்

தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே நாளை முதல் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில்/ இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையும் என்பதனால் இன்று முதல் எதிர்வரும் 27.01.2026 வரை குளிர் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 29.01.2026 முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post 27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்! appeared first on Oruvan.com.

இலங்கையில் நாளை முதல் கன மழை!
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்ந்து நாளை (08) இலங்கையின் கிழக்கு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், அடுத்த சில நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறும் மெரில் மெண்டிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இதற்கிடையில், இன்று முதல் காங்கன்சதுரை முதல் திருகோணமலை வரையிலும், மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் திரு. மெரில் மெண்டிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post இலங்கையில் நாளை முதல் கன மழை! appeared first on Oruvan.com.

தீவிரம் பெறும் தாழமுக்கம்!! மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது.

இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே( நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும்.

இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும்.

ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும்.

உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகககனமழை கிடைக்கும் என்பதனாலும் யாழ்ப்பாணம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி (மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு(மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா (மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் (மாவட்டத்தின் பல பகுதிகள்) பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம் (மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் (மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வடக்கு கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது.

இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம்.

தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்புத் தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம்.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post தீவிரம் பெறும் தாழமுக்கம்!! மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை appeared first on Oruvan.com.

கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மிதமான கொந்தளிப்பான நிலைமைகள் நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

The post கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கனமழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு appeared first on Oruvan.com.

கொழும்பில், பலத்த மழை பெய்யும் – பிபிசி வானிலை முன்னறிவிப்பு
அடுத்த சில நாட்களுக்கு இலங்கையில், குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளது.

பிபிசி வானிலை செய்தியாளரான லூயிஸ் லியர் கருத்துப்படி, வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.

“இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரவுள்ளதாகவும், திங்கள்கிழமை பிற்பகுதியிலும் செவ்வாய்க்கிழமையும் இலங்கையின் சில பகுதிகளில் சில தீவிர மழை பெய்யும்” என்று லூயிஸ் லியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மழை பெய்யும் வானிலை இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அவ்வப்போது சில நிலையற்ற கனமழையை நோக்கி நாடு நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கொழும்பில், பலத்த மழை பெய்யும் – பிபிசி வானிலை முன்னறிவிப்பு appeared first on Oruvan.com.

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும்
நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இதனால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும் appeared first on Oruvan.com.

வடக்கை நோக்கி நகரும் டிட்வா புயல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இது நாளை(29.11.2025) நண்பகலுடன் இலங்கையை குறிப்பாக வடக்கு மாகாணத்தை விட்டு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வட மேற்கு, கிழக்கின் சிலபகுதிகள், மேற்கு மத்திய மாகாணங்களுக்கு கிடைத்து வரும் கன மழை நாளை காலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு அதிக ஈரப்பதன் மிக்க மழை மேகங்கள் குவிக்கப்படுகின்றன. ஆகவே வடக்கு மாகாணத்திற்கு தொடர்ச்சியாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று மாலை முதல் காற்றும் வேகமாக வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஏற்கனவே மிகக்கனமழை கிடைத்துள்ளது. தற்போதும் கன மழை கிடைத்து வருகின்றது.

பல குளங்கள் வான் பாய்கின்றன. பல குளங்களுக்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் அருவியாற்றின்( மல்வத்து ஓயா) கீழ்ப்பகுதிகளுக்கு அதிக நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும்.

ஏனெனில் அதன் நீரேந்து பிரதேசங்களில் கன மழை கிடைத்து வருகிறது. எனவே வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும். இன்று இரவும் கனமழை தொடர்ச்சியாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான தயார்ப்படுத்தலோடும் எச்சரிக்கையோடும் இருப்பது அவசியம்.

கிழக்கு மாகாணத்திற்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும். எனினும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு இன்று மாலை முதல் மழை படிப்படியாக குறைவடையும். ஆனால் ஆறுகளின் நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும்.

நாளை பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாடு முழுவதும் இந்த அதி தீவிர வானிலை நிலைமை படிப்படியாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வடக்கை நோக்கி நகரும் டிட்வா புயல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on Oruvan.com.