weapons Archives - Oruvan.com

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. நேற்று மாலை வரை எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த பதுங்கு குழி  மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (10.07.2025) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி அமைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் போது குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் (09.07.2025) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விசேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நேற்றுமுன்தினம் (09) சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் நேற்று (10.07.2025) காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

The post விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி appeared first on Oruvan.com.

இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான்
இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் போருக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மிடம் உள்ள இராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைப்பதற்கு அல்ல.

நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது.

எம்மிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளன.

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டதுடன் விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும் அறிவித்திருந்தது.

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

The post இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் appeared first on Oruvan.com.