water Archives - Oruvan.com

ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை
நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவில வத்தை, நியந்தகல, மாகம்மன, மஹகடுவான, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,நாளை முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 08.00 மணி வரை இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை appeared first on Oruvan.com.

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள நீர்வெட்டு நேரம் நாளை முதல் தினசரி 08 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை எந்தவொரு பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

The post கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு appeared first on Oruvan.com.

குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள்

கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதால் வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட சுட்டிக்காட்டியுள்ளார்.

The post குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டனுக்கான நீர் விநியோகம் நிறுத்தம்
ஹட்டன் நகருக்கு சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயனாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் நீர் விநியோகச் சபையின் பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

ஹட்டன் நகருக்கு விநியோகிக்கப்படும் நீர் சிங்கமலை ஆற்றிலிருந்து பெறப்படும் நிலையில் குறித்த ஆற்றில் 17 வயது மாணவன் தவறி வீழ்ந்து சடலமாக நேற்று (09.07)  மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, சிங்கமலை ஆற்றிலிருந்தான நீர் விநியோகத்தினை ஹட்டன் நீர் விநியோகச் சபை நிறுத்தியிருந்தது.

அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர் சௌந்தர்ராகவன் மற்றும் நீர் விநியோகச் சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிங்கமலை ஆற்றில் இன்று வியாழக்கிழமை (10) கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ஆற்றின் நீர் மாதிரி பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டதுடன், ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

அதுவரை, ஹட்டன் நகருக்கு 08 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டு, ஆறு மணி நேரமாக விநியோகிக்கப்படும் எனவும், ஆய்வறிக்கை கிடைக்கும் வரை சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் பெறப்படாது எனவும் அவர் கூறினார்.

The post சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டனுக்கான நீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Oruvan.com.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

The post கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை appeared first on Oruvan.com.

மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வன்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப்

பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்மித்த சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு appeared first on Oruvan.com.

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை அடைவதற்கு 20 அடி உயரமும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்

மொத்த கொள்ளளவை அடைவதற்கு 30 அடி உயரமும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு appeared first on Oruvan.com.

கண்டியில் பல பகுதிகளில் 36 மணி நேர நீர்வெட்டு
கண்டி நகர எல்லைக்குள் உள்ள பல பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 2 மணி வரை 36 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.

கண்டி கூட்ஸ் ஷெட் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட குழாய் அமைப்பின் கோளாறு காரணமாக இந்த நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

அதன்படி, பேராதனை சாலை, வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் நீதிமன்ற வளாகப் பகுதியிலிருந்து நகர மண்டப சந்திப்பு வரையிலான பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த காலகட்டத்தில் பின்வரும் பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகராட்சி சபை தெரிவித்துள்ளது:

அஸ்கிரிய

ஏரி சுற்று

ராஜாபிஹில்ல மாவத்தை

புவேலிகட

தென்னேகும்புர

குருதெனிய

ஆம்பிட்டிய

கண்டி நகரத்திற்குள் உள்ள அனைத்து வீதிகளும்

இந்நிலையில், குறித்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் விநியோகம் தடைப்படும் காலத்தில் நிர்வகிக்க தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யுமாறு கண்டி மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

The post கண்டியில் பல பகுதிகளில் 36 மணி நேர நீர்வெட்டு appeared first on Oruvan.com.

நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் செய்யப்படாது என்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போது (மே 23) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக போசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுவது போலவே நீர்க் கட்டணங்களும் திருத்தப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கூறியதாக எதிர்க்கட்சி தலைவரை நோக்கிய கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் என்று அறிவிப்பதற்கு முன்னர் மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து தனது கட்சி கூறியது போலவே, நீர்க் கட்டண திருத்தம் தொடர்பாக கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

The post நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு appeared first on Oruvan.com.

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா தெரிவித்திருப்பதாவது,

“சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை முட்டாள்தனமானவை. ஏனெனில் இந்த விடயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மாத்திரமே செயல்பட்டது.

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தராக மட்டுமே செயற்பட்டோம்.

அதில் தலையீடு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

அஜய் பங்காவின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அத்துடன் உலக வங்கி இந்தியாவிடம் இருந்து சிந்து நதிநீரை பெற்று தரும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

The post சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு appeared first on Oruvan.com.