Washington Archives - Oruvan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ்
வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் அமெரிக்க விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவை சென்றடைகின்றனர்.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமின்றி தப்பிய நிலையில், மன்னரின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என வெள்ளை மாளிகையும் பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள மன்னர், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

ஈரான் போர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

The post பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ் appeared first on Oruvan.com.

வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களிலும் நகர்ப்புற மையங்களிலும் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுமார் 800 தேசிய காவல்படை உறுப்பினர்கள் மற்றும் 500 கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகள நகரத்தில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் சர்வாதிகாரம் என வொஷிங்டன் டி.சி. மேயர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வொஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக அமையலாம் என கூறப்படுகிறது.

The post வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம் appeared first on Oruvan.com.

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த தீர்வை வரி தொடர்பில் வொஷிங்டனில் இன்று கலந்துரையாடல்
அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் இன்றும் நாளையும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்வதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின்(USTR) அழைப்பிற்கிணங்க இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

The post அமெரிக்கா, இலங்கை மீது விதித்த தீர்வை வரி தொடர்பில் வொஷிங்டனில் இன்று கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது?
இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) கடந்த 22ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியது.

அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் முதல் பிரதிகள் நிதியமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பிரதிநிதிகளால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் முகம்கொடுத்த சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முகம்கொடுக்ககூடிய சவால்களை வெற்றிகொள்ளவும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக வழமை நிலைக்கு திருப்பவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தூதுக்குழுவினரால் தூதுவர் கிரீயருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வர்த்தக பற்றாக்குறை தொடர்பாகவும், தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை மட்டுப்படுத்த அமெரிக்காவுடன் செயலாற்ற இலங்கை கொண்டிருக்கும் துரித மற்றும் முன்னேற்றகரமான அர்ப்பணிப்பு குறித்தும் இலங்கை தூதுக்குழு இதன்போது தௌிவுபடுத்தியது.

இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலங்கை முன்வைத்திருக்கும் முன்மொழிவுகளை வரவேற்ற தூதுவர் கிரீயர் இரு நாடுகளுக்கும் இடையில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் தூதுவர் கிரீயரினால் நியமிக்கப்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லின்ச் (Brendan Lynch) தலைமையிலான (USTR) தூதுக்குழுவுடன் தெற்காசியாவிற்கு பொறுப்பான பணிப்பாளர் எமிலி ஏஷ்பியையும் (Emily Ashby) அன்றைய தினத்திலேயே சந்தித்து கலந்துரையாடிய இலங்கைத் தூதுக்குழுவினர், இலங்கையினால் அமெரிக்காவிற்கு எழுத்து மூலம் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்தனர்.

அதன்போது இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியதோடு, மிக விரைவில் குறித்த ஒப்பந்தத்திற்கு செல்வதற்கும் இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், வர்த்தக பொருட்கள்,நேரடி முதலீட்டுக் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அமெரிக்க முகவர் அலுவலகத்தை (USTR) சார்ந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியும் அந்நாட்டு ஜனாதிபதியின் தலைமை வர்த்தக ஆலோசகரும், இணக்கப்பாட்டாளர் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் தொடர்பிலான அறிவிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகிக்கும் கெபினட் உறுப்பினர் ஒருவரே மேற்படி அலுவலகத்தின் பிரதானியாவார்.

The post தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது? appeared first on Oruvan.com.