Volker Türk Archives - Oruvan.com

அநுர அரசங்கத்தின் மீது நம்பிக்கை!! உள்ளக விசாரணைக்கு ஐநா ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரை
எதிர்வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில், ஆணையாளரின் முன்னோடி அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 ஆம் திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி நேற்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை மையப்படுத்தி ஜெனிவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கவுள்ள பிரேணை பரிசீலிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக ஆணையாளர் கையளித்துள்ள எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து திருத்தங்ங்களை முன்வைக்க முடியும்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நீண்டகாலமாக இலங்கை உரிய முறையில் பொறுப்புக் கூறத் தயங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை மறுக்கவுள்ளதாகவும் இலங்கை சமர்பிக்கவுள்ள திருத்தங்களை மையப்படுத்தியே மனித உரிமைச் சபைத் தீர்மானம் அமையும் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஆணையாளர் அநுர அரசாங்கத்திடம் கைளித்துள்ள 16 பக்க அறிக்கையயில் உள்ளடக்கம் பின்வருமாறு அமைகிறது.

அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் – மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அறிக்கையின் ஆங்கில மொழிப் பிரயோகம் அவ்வாறுதான் காண்பிக்கிறது.

ஜேவிபி, என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக வடக்கு மாகாண மக்கள் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்களித்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தன் விளைவாக ஜெனிவா மனித உரிமைச் சபை அநுர அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து என்பது அறிக்கையில் தெரிகிறது.

அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது.

இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன.

ஆனால், கடந்தகால அறிக்கைகளின் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை.

மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது. ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.

புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

இதன் காரண – காரியமாக புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது.

பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது.

இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல. ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார்.

இதனாலேயே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன.

போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை.

விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை.

உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளதாக சில தமிழ் அரசியல் விமசகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று தரம் குறைக்கப்பட்டுள்தாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது.

ஆணையாளர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார். இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை.

ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்

The post அநுர அரசங்கத்தின் மீது நம்பிக்கை!! உள்ளக விசாரணைக்கு ஐநா ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரை appeared first on Oruvan.com.

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் எட்டாம் திகதி நிறைவடையவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இலங்ழகையில் தனது அவதானிப்புகளை அறிக்கையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தளத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா மற்றும் கனடா திட்டமிட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்க உள்ளார்.

The post ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை appeared first on Oruvan.com.

வடக்கில் இருந்து ஐநா ஆணையருக்குச் சென்ற மற்றுமொரு கடிதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வொல்க்கர் ரோக் அவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட பா. அரியநேத்திரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அண்மையில் தமிழ் தேசிய முன்னணியை மையப்படுத்திய தமிழ் தேசியப் பேரவை ஐ.நா ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு கடிதம் வடக்கில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

08 ஓகஸ்ட் 2025

திரு. வொல்க்கர் ரோக்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர்

மனித உரிமைகள் உயர் ஆணையாளர் பணிப்பகம்

பொருள்: 05 ஆம் திகதியிட்ட தங்கள் பதிலுக்கான செயல் முற்றுவிப்பு – இலங்கையில் இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் பணிப்பாணை மட்டுப்படுத்தலும் பற்றியது

மேதகையீர்,

மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள 60 ஆம் அமர்வை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள குடிசார் சமூகத்தினரும் அரசியல் தலைவர்களும் எழுப்பியுள்ள கரிசனைகள் தொடர்பான தங்கள் ஆதரவு காட்டலுக்கும், தங்கள் 05 ஆம் திகிதியிட்ட பதிலுக்கும் முதற்கண் நன்றிகள்.

இதுவரை மாறிமாறி அரச கட்டிலேறும் இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கேற்ற சுயாதீனமான, நியாயமான, செயலூக்கமான பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளன என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கும், யாழப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழியை நேரடியாகப் பார்வையிட்டமைக்கும் பாதிப்புற்றோர் சார்பாக நன்றிதெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

அதேவேளை, மன்னாரில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய், திருகோணமலையில் சம்பூர், மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை என்று வடக்கு-கிழக்கு எங்கணும் இன அழிப்பு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட மனிதப்புதைகள் பரவிக்கிடக்கின்றன என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இவற்றில் பெரும்பாலானவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உரோம நியதிச்சட்டம் நடைமுறைக்கு வந்த 2002 ஜூலை 01 ஆம் நாளுக்கு முன்னதாக நடந்தேறியுள்ளன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது.

இலங்கை தொடர்பாகத் தாங்கள் காட்டும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் கண்டுணரும் அதேவேளை தங்கள் அணுகுமுறை தொடர்பான கடுமையான ஒரு விசனத்தையும் இங்கே அழுத்தமாகப் பதியவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

தங்களது பதிற் கடிதத்தில் இலங்கை அரசே பரந்த ‘விரிவான விசாரணைச் செயல்முறையை’நடாத்த வேண்டும் என்றும், மனித உரிமைகள் செயலகமும் மனித உரிமைகள் பேரவையும் ‘குறைநிரப்பு மூலோ பாயங்களை’ மாத்திரமே கைக்கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் கருதும் நோக்குநிலையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

இலங்கை அரசு நீண்டகாலமாக தக்க பொறிமுறைகளை ஏற்படுத்தாது நீதியை நீர்த்துப் போகச் செய்து வந்துள்ள நிலையிலும், அதற்கும் மேல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலும் நடைபெற்றுள்ள கால விரயமும், அனைத்துக்கும் மேல் தற்போது தாங்கள் வெளிப்படுத்தியுள்ள மேற்குறித்த நோக்குநிலையும் மனித உரிமைப் பேரவை மீது பாதிக்கப்பட்ட மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதோடு பொறுப்புக்கூறல் விடயத்தில் பேரவை காட்டிவரும் நாட்டத்தின் நம்பகத்தன்மையையும் பலவீனப்படுத்தும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.

மேதகையீர், தாங்கள் குடிசார் சமூகத்தினருக்குத் தந்திருக்கின்ற பதிற்கடிதம் பாதிக்கப்பட்ட மக்களின் மூலக்கோரிக்கைகளில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பிரதான கேள்விக்கு (இன அழிப்புக்கான நீதி) விடையளிக்காது தவிர்த்துள்ளது.

சிலவேளை குடிசார் சமூகத்தினர் வரைந்திருந்த கடிதம் ஏதோ தெளிவற்ற மொழியில் எழுதப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆதலால், எனது இந்தச் செயல் முற்றுவிப்புக் கடிதம் எம்மிடையே எழுந்துள்ள முக்கிய கேள்விகளை ஐயந்திரிபறத் தெளிவாக முன்வைக்க முனைகிறது.

ஆக, பின்வரும் கேள்விகளைத் தங்கள் பார்வைக்கும் பதிவுக்கும் முன்வைப்பதென்ற நோக்கத்துக்கும் அப்பால், தற்போது மேலோங்கியிருக்கும் கேள்விகளுக்கான முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பதிலையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்:

1. இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் இரு வேறான அரசின் பொறுப்புக்கூறலும் தனிநபர்களின் குற்றவியற் பொறுப்புக்கூறலுமாகச் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டியவை. இதுதொடர்பில், தங்களது ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பொருத்தமற்ற ‘குறைநிரப்பு மூலோபாயம்’ என்பது குறித்த குற்றத்தின் கனதியையும் அதன் நம்பகமான சாத்தியக்கூற்றையும் கருத்திலெடுத்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

மானுடத்துக்கெதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன என்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கண்டறிதல்கள் அடுத்த கட்ட சர்வதேச வழக்கு நடவடிக்கைகளுக்கு அவற்றை நகர்த்தவேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் இத் தருணத்தில், இன அழிப்பு என்ற குற்றம் ஆராயப்படாமலே நீடிக்கும் குறை தொடர்கிறது.

சில தமிழ் அரசியற் பிரதிநிதிகளும் ஊடகங்களும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இதைச் சாதிக்கும் வலுவற்றது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் 2009 ஆம் ஆண்டின் பின் 16 ஆண்டுகளாகியும் இது நடைபெறவில்லையே என்கிறார்கள். எனினும் இக் கருத்தோடு நான் உடன்படவில்லை.

ஏனெனில், 2019 ஆம் ஆண்டில் வெளியான மியான்மாருக்கான சுயாதீனமான சர்வதேச கண்டறிதற் பணிக்குழுவின் (IIFFMM) அறிக்கை இன அழிப்புக்கான நோக்கம் மியான்மாரில் இருந்தமைக்கான சாத்தியக்கூறு சட்டரீதியாக ஆராயப்படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இலங்கையிலும் இதற்கு ஒப்பான மிக நீண்ட இன அழிப்பு நோக்கம் பற்றிய சாத்தியக்கூறுக்கும் குற்றங்களுக்குமான தடயங்கள் உள்ளன.

இருப்பினும், மனித உரிமைகள் அலுவலக விசாரணையின் (OISL) பணிப்பாணையானது A/HRC/25/1 என்ற தீர்மானத்தால் மிகவும் குறுகியதாய் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் குற்றத்தின் கருப்பொருள் தொடர்பாகவும், கால எல்லை தொடர்பாகவும் ஆய்வெல்லை கட்டுப்படுத்தப்பட்டு, போரின் இறுதிக்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, மிக முக்கியமான இன அழிப்பு நோக்கத்தை நிறுவுவதிற் சம்பந்தப்படும் காலத்தால் முந்திய சம்பவங்களை அவ் விசாரணை தவிர்த்துவிட்டது.

மியான்மாருக்கு தங்கள் அலுவலகத்தால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன விசாரணைப் பொறிமுறை (IIMM) போல் அல்லாமல் இலங்கை தொடர்பாகத் தங்கள் அலுவலகம் ஏற்படுத்தியுள்ள பொறுப்புக்கூறல் கருத்திட்டம் (OSLAP) சுயாதீனத்தன்மையிலும் ஆய்வெல்லையிலும் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

இக் குறையைப் போக்கவேண்டுமாயின் மீண்டுமொரு தீர்மானம் இயற்றப்பட்டு, உரிய கனதியும் ஆய்வெல்லையும் கொண்ட பணிப்பாணை வழங்கப்பட்டு புதிதாக கண்காணிக்கும், அறிக்கையிடும், கண்டறியும் (MRF) பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டுமா?

2. அன்றேல், மேற்குறிப்பிட்டதற்கு மாற்றீடாக, மேலதிக தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில்–பேரவையில் புதிய தீர்மானங்களை இயற்றுவதற்குப் பதிலாக–மேதகையீர் நேரடியாக ஐ.நா. செயலாளர் நாயகம், பொது அவை, அல்லது பாதுகாப்பு அவை ஆகிய உயர்மட்டங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் செய்யும் வாய்ப்பு ஏதேனும் உள்ளதா? ஐ.நா. கட்டுமானங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிவேறான அனுமதிப்புத் தன்மையும் நடைமுறை விதிகளும் உண்டு என்பதை நானறிவேன்.

இருப்பினும், மனித உரிமைப் பேரவை தனது ஈடுபாட்டை மேலே குறிப்பிட்டதைப் போலக் கெட்டிப்படுத்தி, தக்க வழிவரைபடத்தை வகுக்கும் அதேவேளை, அச் செயற்பாட்டுக்குச் சமாந்தரமாக, ஐ.நா. கட்டமைப்பின் ஏனைய படிமுறை வழிகளிலும் பொறுப்புக் கூறலை கால விரயமின்றி உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்க வாய்ப்புள்ளதா?

3. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கான பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்பு நடைமுறைச் சாத்திய மாவதற்கான வாய்ப்புகள் மிக அரிது என்பதைத் தற்போதைய சர்வதேச அரசியல் யதார்த்தங்களின் பின்னணியில் நாம் உய்த்துணர்கிறோம். அப்படி நடந்தாலும், மேலே குறிப்பிட்ட (இன அழிப்பு) குற்றநோக்குக்கான மனநிலைக்கூற்றைப் பகுப்பாய்வு செய்தல் தொடர்பிலும், 2002 ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களை உள்ளடக்கவல்ல கால நியாயாதிக்கம் தொடர்பாகவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று பொருத்தமாகச் செயலாற்றுமா என்பதையும் மேலதிக சவாலாக உய்த்துணர்கிறோம்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குச் செல்லும் அதே வழிவரைபடத்தின் ஊடாக இலங்கை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைக்குமாறு—அதிலும் குறிப்பாக மேற்குறித்த கால நியாயாதிக்கம் சார்ந்த குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் அதை அமைக்கவேண்டும் என்பதை—எமது கோரிக்கையாக முன்வைப்பதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கருதுகிறோம்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டோரிற் பெரும்பாலானவர்களிடையே நிலவும் சட்டவியற் கலைச்சொற்கள் பற்றிய தெளிவற்ற தன்மை மேலும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. குறித்த ஒரு நாட்டின் நிலைமை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியற் தீர்ப்பாயம் என்ற பொறிமுறையை 2002 ஆம் ஆண்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று தோன்றியபின் உருவாக்கவே இயலாது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

மேதகையீர், குறித்த இந்தப் பார்வை சரியானதா என்ற தெளிவுபடுத்தலையும், குறித்த குற்றங்களைச் சர்வதேச சட்டம் சார்ந்து விரிவான முறையிற் கையாள எவ்வாறான வழிமுறைகள் உள்ளன என்பதையும் எமக்கு அறியத்தரமுடியுமா?

4. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை (OSLAP) சிரியா நாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள முழுமையான சர்வதேச, பக்கச்சார்பற்ற சுயாதீனப் பொறிமுறைக்கு (IIIM) ஒப்பான பணிப்பாணையுடன் முழுத் தனித்துவத்தோடு இயங்கும் வகையில் தரமுயர்த்தவேண்டும்.

இதைச் சாத்தியமாக்க பாதிக்கப்பட்ட மக்களாக, எந்த மன்றில், எவ்விதத்தில், எதை நாம் முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றிய விதிமுறைகள் பற்றியும் அதற்கேற்ற அரசியற் படிமுறைகள் பற்றியுமான வழிவரைபடத்தைத் தயைகூர்ந்து கோடிகாட்டுவீர்களா?

முடிவாக, நான் இங்கு முன்வைத்துள்ள கேள்விகள் ஓர் அரசற்ற தேசமாகவும், முறையற்ற ஓர் அரச இறைமை தம்மீது தமது சுயவிருப்புக்கு அப்பால் திணிக்கப்பட்டுள்ள நிலையில் வாடுகின்ற ஒரு மக்களின் அரசியல் பணிப்பாணையையும் எதிர்பார்ப்பையும் பிரதிநிதித்துவம் செய்பவை என்ற அடிப்படையிலும் எழுப்பப்பட்டுள்ளன.

இவற்றை உரியவகையிற் பரிசீலித்து விடையிறுக்கும் தயவான பதிலைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் தமக்குரிய பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வழங்கியுள்ள விருப்புவாக்குகளில் இருந்து பிறந்த மக்களாணையின் பாற்பட்டும், அறக் கடப்பாட்டின் பாற்பட்டும் நான் இங்கு முன்வைத்துள்ளவற்றைக் கருத்திலெடுத்து இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான பேரவையின் எதிர்காலப் பாதை உற்றதாய் அமைந்திடவேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

The post வடக்கில் இருந்து ஐநா ஆணையருக்குச் சென்ற மற்றுமொரு கடிதம் appeared first on Oruvan.com.

இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார்.

தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, “இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.

செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை (Sinhalisation) நிறுத்த வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.”

போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

The post ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம் appeared first on Oruvan.com.

ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி தகவல்
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதனர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி,

“இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

முன்னதாக 2011ஆம் ஆண்டும், 2016ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு விரவிடாமல் செய்திருந்தனர்.

அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் கட்டயாம் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில், நாளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் சந்திக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிதரன் ஐயா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஐயா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை அவர்கள் மனித உரிமைகள் ஆணையரிடம் கூற உதவிசெய்ய வேண்டும்.

இதனிடையே, நாளைய தினம் என்னை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுக்க உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், நான் கண்டிப்பாக நாடாளுமன்றம் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன்.

இதன்போது தமிழர்களுக்கு எதிரான நடந்த அனைத்து இனப்படுகொலை சம்பவங்களும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதுடன், அதற்கான முழு ஆவணங்களும் தயார்ப்படுத்தக்கப்பட்டுள்ளன.

எனினும், அதை கொடுக்க கூடாது எனவும் இதனை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஐநா மனித உரிமைகள் ஆணையரை யாழ்ப்பாணம் வரவிடாமல் தடுக்க பெரும் முயற்சி – அர்ச்சுனா எம்.பி தகவல் appeared first on Oruvan.com.

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

The post இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் appeared first on Oruvan.com.