vishal Archives - Oruvan.com

எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்
பிரபல நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதாரத்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் அவர்களின் நிச்சயதாரத்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது அவரது 35வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஓகஸ்டு 29ஆம் திகதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தனது திருமணம் என்று உறுதியாக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர்.

சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ‘ஆகஸ்ட் 29ஆம் திகதி நல்ல தகவலை சொல்லுவேன்’ என்று விஷால் பதில் அளித்து இருந்தார்.

அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த விழாவில் தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. விஷால் – சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

The post எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் appeared first on Oruvan.com.

மதகஜராஜா திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சுமார் 12 வருடங்களின் பின்னர் இத் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

இத் திரைப்படத்தில் நடித்துள்ள மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் உயிரிழந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post மதகஜராஜா திரைப்பட ட்ரெய்லர் வெளியானது appeared first on Oruvan.com.

கைகள் நடுங்கி பேச முடியாமல் திணறிய விஷால்…என்ன தான் ஆச்சு?
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மதகஜராஜா. இத் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவானது. சில காரணங்களினால் இப் படம் வெளிவராமல் இருந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளின் பின்னர் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பூ, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகன் விஷால் அனைவரும் வந்திருந்தனர்.

இதில் விஷால் வந்த நிலை அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது. வேட்டி சட்டையுடன் பெரிய கண்ணாடி அணிந்து மிகவும் சோர்வாக வந்திருந்தார். இதனைப் பார்த்த அனைவரும் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லை போல எனப் பேசிக்கொண்டனர்.

படம் குறித்து மேடையில் பேச ஆரம்பித்த விஷாலால் மைக்கைக் கூட பிடிக்க முடியாத அளவுக்கு கைகள் நடுங்கி, பேச்சில் தெளிவின்மை காணப்பட்டது.

நிலைமையை புரிந்துகொண்ட தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அவரை உட்காரும்படி கூறி அவருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பலவிதமான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

அதாவது, விஷால் அதிகமாக மதுப்பாவனையில் ஈடுபட்டதால் அவருக்கு கை,கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இன்னும் ஒரு சாரார் அவன் இவன் திரைப்படத்தில் விஷால் நடிக்கும்போது கண்களை மாலைக்கண் போல் வைத்துதான் முழுத் திரைப்படத்திலும் நடித்திருப்பார். அப்போதிலிருந்து அவருக்கு ஒருவித நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவுதான் தற்போது அவரது இந்த நிலைமைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற நிலையில், கட்டுமஸ்தான உடல்வாகு, கம்பீரமான தோற்றம் என திரையில் சூப்பர் ஹீரோவாக விஷாலைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த விஷால் மறுபடியும் திரும்பி வருவாரா? என்ற கவலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கைகள் நடுங்கி பேச முடியாமல் திணறிய விஷால்…என்ன தான் ஆச்சு? appeared first on Oruvan.com.

12 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் விஷாலின் மத கஜ ராஜா
சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் மத கஜ ராஜா.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப் படம் திரைக்கு வராமல் இருந்தது.

இப் படத்துக்கு விஜய் அண்டனி இசையைமத்துள்ள நிலையில், அண்மையில் இப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப் படம் எதிர்வரும் 12 ஆம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளின் பின்னர் இத் திரைப்படம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 12 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் விஷாலின் மத கஜ ராஜா appeared first on Oruvan.com.