violations Archives - Oruvan.com

பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலின் அமைதிக் காலத்தின் போது பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய அறிக்கையை பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்களிடம் நுட்பமான வழிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என  அமைதிக் காலம் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய, கூறியதை பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“இன்னும் 04 மணி நேரத்தில் அமைதி காலம் ஆரம்பமாகிறது. ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கத் தேவையில்லை.தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். சில வார்த்தைகளை உரக்கச் சொல்லலாம்” என்று பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைதி காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என சுட்டிக்காட்டிய பெப்ரல் அமைப்பு பிரதமரின் அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், சட்டத்தை புறக்கணிப்பதாகவும் கருதுகிறது.

பிரதமரின் அவ்வாறான அறிக்கை நாட்டின் சிறந்த அரசியல் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தல் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இந்த அறிக்கை அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால், விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

The post பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 30 முறைப்பாடுகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸ் இற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் 09 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறையுடன் தொடர்புடையவை என்றும் 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வேட்பாளர் ஒருவரும் ஆதரவாளர்கள் எழுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை இலங்கை பொலிஸ் இற்கு தேர்தல் தொடர்பான 398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 31 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

The post உள்ளூராட்சித் தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 30 முறைப்பாடுகள் appeared first on Oruvan.com.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் 26 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 237 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன,இவற்றில் 65 குற்றவியல் முறைப்பாடுகள் அடங்குகின்றன.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 170 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்

அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் வன்முறைச் செயல்கள் தொடர்பான 13 முறைப்பாடுகள் உட்பட மொத்தம் 2,623 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது appeared first on Oruvan.com.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்
கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தாமதமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

The post மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் appeared first on Oruvan.com.