Vijitha Archives - Oruvan.com

எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் பிரதி வெளியுறவு மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா அண்மையில் தளர்த்தியுள்ள சூழலில், அமைச்சரின் இந்தப் பயணம் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

The post எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித appeared first on Oruvan.com.

உள்நாட்டு பொறிமுறை ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது – விஜித
உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.

அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே, ​​வௌிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெளிப்புற தலையீடுகள் தேசிய ரீதியான முயற்சிகளைத் தடுக்கவும் மக்களை துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என்பதால், சர்வதேச நடவடிக்கை தொடர்பாக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இலங்கை, உள்நாட்டு பொறிமுறை மூலம் முன்னேறும்போது, சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்பதாகவும், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் பதிலறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று முன்வைக்கவுள்ள அறிக்கையானது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரம், மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்கள் குறித்து தனது அறிக்கையில் உள்ளடங்கியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

அதேபோன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயங்களில் மேலும் கால அவகாசத்தை கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, அமைச்சர் விஜித ஹேரத், பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உள்நாட்டு பொறிமுறை ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது – விஜித appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – விஜித
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்  விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளினால் சிலர் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – விஜித appeared first on Oruvan.com.