Vijitha Herath Archives - Oruvan.com

லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நன்றி தெரிவித்திருந்தார்.

இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி , ஐரிஸ் தேனா கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் என்று விவரித்து, அமைச்சர் அரக்சி  கண்டித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் 1949ம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகளின் கடுமையான மீறலாக அமைந்த இந்தத் தாக்குதலை ஈரான் ஒருபோதும் மறக்காது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்ய, ஈரான் அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிகளையும் பின்பற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஈரான் மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல் appeared first on Oruvan.com.

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!
2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மாறியுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆண்டில் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முந்தைய உச்சமான 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டில் 2,362,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வருவாய் ஈட்டப்பட்டதன் மூலம் சுற்றுலாத் துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் மாத்திரம் தனது அமைச்சின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களித்ததாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

The post அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு! appeared first on Oruvan.com.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

இதன்படி, புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆகையினால், எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்று நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எரிவாயு வழங்குவதற்கான டெண்டர், முந்தைய ஓமானி நிறுவனத்திற்குப் பதிலாக ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் முதல் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். எனவே, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எரிவாயு பற்றாக்குறை இருக்காது,” என்று அவர் கூறினார்.

The post எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்
பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் முடிந்த பின்னர் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.

சுமார் ஆறு முதல் ஏழு பில்லியன் டொலர் வரையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் மதிப்பிட்டுள்ளார்.

மறுகட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அரசாங்கம் ஏற்கனவே இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தை நிறுவியுள்ளது. அந்த நிதியத்திற்கு இதுவரை 3.4 பில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது.

பேரிடரின் போது, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம், மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உதவிகளை வழங்கியிருந்தன.

இந்நிலையில், சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம் appeared first on Oruvan.com.

விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்,

“இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என தூதர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” என்று தூதுர் தெரிவித்தார் என அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம் appeared first on Oruvan.com.

அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் சவுதி தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டியுள்ளார், மேலும் பலஸ்தீனத்திற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நினைவு முத்திரையையும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார்.

The post அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் appeared first on Oruvan.com.

இந்திய வெளிவிகார அமைச்சருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இந்தப் பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் இரு அமைச்சர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வுக்காக உலகத் தலைவர்கள் அமெரிக்காவில் கூடியிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கருக்கும் இடையே ஒரு சந்திப்பும் நடந்துள்ளது.

The post இந்திய வெளிவிகார அமைச்சருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு appeared first on Oruvan.com.

வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொள்வதற்கு முன்னர், நாட்டிலுள்ள தூதர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள அறிஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திரிகளுக்குத் தெரிவிக்க அமைச்சர் தயாராகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வு செப்டம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை மனித உரிமைகள் குறித்து முக்கிய அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடவுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை முன்வைக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளிநாட்டு தூதுவர்கள், மனித உரிமை ஆர்வளர்களை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர் appeared first on Oruvan.com.

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது
தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக இடத்திலிருந்து தூதரக சேவைகள் வழங்கப்படும் என்றும், இலங்கை மாணவர்கள் குழுவும் அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள நான்கு இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் இருபதாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும், 35 இலங்கையர்கள் ஈரானில் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அவர்களில் 8 பேர் ஈரானியர்களை மணந்தவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இலங்கையர்களை அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சு, தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இஸ்ரேலில் வேலைகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் வேலைக்கு இஸ்ரேலுக்குத் திரும்பத் திட்டமிடும் இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (அ) சரத்தின்படி, வேலை வாய்ப்பு பணியகத்தால் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்பிற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படாது.

அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழுவின் (PIBA) அறிவிப்பின் பேரில் எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

The post ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது appeared first on Oruvan.com.

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்
அடிப்படையற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை எதிர்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.

அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புவதாக” வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் appeared first on Oruvan.com.