Vijay Deverakonda Archives - Oruvan.com

ஈழ தமிழர்களை தவாறாக சித்தரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – படத்திற்கு எதிராக போராட்டம்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்திற்கு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் திருச்சியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில் குறித்த படத்தில் இலங்கைத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதை தமிழ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.

தமிழ் ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியின் (NTK) நிர்வாகிகள், படத்தைத் திரையிட தடை விதிக்கக் கோரி திருச்சியில் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

“இந்த திரைப்படம் விடுதலைப் புலிகள் (தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்) போராளிகளையும் ஈழத் தமிழர்களையும் இழிவுபடுத்துகிறது. அவர்கள் 30 ஆண்டுகளாகப் போராடி உயிரிழந்தனர்.

எனினும், அவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்களாகக் காட்டப்படுகிறார்கள். இது வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் முயற்சி, இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஈழ தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, பலர் காணாமல் போயுள்ளனர்” “அவர்களைப் புண்படுத்தும் செயல்களைச் செய்ய முடியாது,” என்று அந்த கட்சியின் மாநில பிரச்சாரச் செயலாளர் சரவணன் கூறினார்.

மாவட்டத்தின் ஒரு முக்கிய திரையறங்கு மேலாளரையும் போராட்டக்காரர்கள் சந்தித்தனர், அதன் பிறகு ‘கிங்டம்’ படத்தின் பதாகைகள் அகற்றப்பட்டன.

திரையிடலை நிறுத்துவது குறித்து விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் படத்தின் விநியோகஸ்தர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

கௌதம் தின்னனுரி இயக்கிய ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம், விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இலங்கையிலும் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரியான இருந்து உளவாளியாக மாறி, இறுதியில் திவி பழங்குடியினரின் மீட்பராக மாறும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜூலை 31 அன்று வெளியானது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ‘கிங்டம்’ படத்தின் வசூல் படிப்படியாகக் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஈழ தமிழர்களை தவாறாக சித்தரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – படத்திற்கு எதிராக போராட்டம் appeared first on Oruvan.com.

சூர்யா படத்தில் நடிக்கும் விஜய் – வெளியான முக்கிய தகவல்!
சூர்யாவின் நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியானது ரெட்ரோ படம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது ரெட்ரோ. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் உள்ளார். நீண்ட நாட்களாக இது குறித்த தகவல்கள் வெளியாகி வந்தது.

ஹைதராபாதில் நடைபெற்ற ரெட்ரோ படத்தின் புரமோஷனல் நிகழ்வின் போது சூர்யா இதனை உறுதிப்படுத்தினார். இந்த புதிய படம் தொடர்பாக சூர்யா பேசுகையில், “உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெங்கி அட்லூரி படத்தில் நான் நடிக்க உள்ளேன்.

உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது ஒரு அழகான கூட்டணி. வெங்கி அட்லூரி படத்திற்காக ஹைதராபாத்தில் நீண்ட நாட்கள் செலவிட உள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துக்களும் நிச்சயம் தேவை” என்று மேடையில் பேசி இருந்தார்.

இயக்குனர் வெங்கி அட்லூரி பேசுகையில், “உங்களுடன் பணி புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு ஒரு சிறந்த தருணம். உங்களது 46வது படம் நிச்சயம் சிறப்பான படமாக அமையும்” என்று பேசி இருந்தார்.

கடைசியாக துல்கர் சல்மானை வைத்து வெங்கி அட்லூரி இயக்கி இருந்த லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி இணையும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் சூர்யாவிற்கு கடைசியாக திரையரங்கில் வெளியான எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. ரெட்ரோ படத்திற்கு முன்பு சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் வரலாற்று படமாக உருவாகி இருந்த கங்குவா 350 கோடி செலவில் எடுக்கப்பட்டு குறைந்த வசூலை மட்டுமே பெற்றது. இதனால் சூர்யாவின் ரசிகர்களும் இந்த கூட்டணிக்காக அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சூர்யாவின் 46 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கியவுடன் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா – வெங்கி அட்லூரி இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரெட்ரோ படத்தின் ஹைதராபாத் விழாவிலும் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டிருந்தார்.

அந்த மேடையில் தான் தனது 46வது படத்தை உறுதி செய்து இருந்தார் சூர்யா. இரண்டு ஹீரோக்கள் இருக்கும் படத்தில் சூர்யா நடித்து நீண்ட நாட்கள் ஆகிறது.

The post சூர்யா படத்தில் நடிக்கும் விஜய் – வெளியான முக்கிய தகவல்! appeared first on Oruvan.com.