Venezuela Archives - Oruvan.com

வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்!
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துக்கொண்டுள்ளார்.

இதன்படி, தனது பதவிக்காலம் ஜனவரி 2026 இல் தொடங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக ஊடகமான ட்ரூத்தில் திருத்தப்பட்ட விக்கிபீடியா பக்கத்தின் படத்தைப் பதிவேற்றி இந்தக் கூற்றை டிரம்ப் முன்வைத்தார்.

இந்த திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ படத்தில் அவர் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது ஜனாதிபதியாகவும், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளார்.

அசல் விக்கிபீடியா பக்கத்தில் டிரம்ப் வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக பட்டியலிடப்படவில்லை, மேலும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் இந்தக் கூற்றை அங்கீகரிக்கவில்லை.

கடந்த ஜனவரி மூன்றாம் திகதி வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றிய பின்னர் இந்தப் பதிவு வந்துள்ளது.

மதுரோ மற்றும் அவரது மனைவியுடன், கூட்டாட்சி போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நியூயார்க்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க நாட்டை குறிவைத்து பல மாதங்களாக அமெரிக்கா விதித்த அழுத்தம், தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தான் கடத்தப்பட்டதாக மதுரோ தெரிவித்துள்ளார்.

சீனா, ரஷ்யா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கையை சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கண்டித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு கவலைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கான தேவையை காரணம் காட்டி, அமெரிக்கா வெனிசுலாவை தற்காலிகமாகத் தடுக்கும் என்று டிரம்ப்

இதற்கிடையில், அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெயை நிர்வகித்து உலக சந்தையில் விற்பனை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரோவுக்குப் பிறகு வெனிசுலாவின் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அதிகாரக் கூற்றுக்களை நிராகரித்து மதுரோவை விடுவிக்கக் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், ரோட்ரிக்ஸ் அமெரிக்காவிற்கு உதவவில்லை என்றால், அவர் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மதுரோவுக்கு ஏற்பட்ட விளைவுகளை விட அவருக்கு ஏற்படும் விளைவுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்! appeared first on Oruvan.com.

வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth Social கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்பட்ட கச்சா எண்ணெயை வெனிசுலா இடைக்கால அரசாங்க அதிகாரிகள் வழங்குவார்கள் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் என்றும், அது வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் சேமிப்புக் கப்பல்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள கொள்கலன் துறைமுகங்களுக்கு நேரடியாகக் கொண்டு வரப்பட உள்ளன.

வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசிய மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த கச்சா எண்ணெய் ஏற்கனவே பீப்பாய்களில் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை தற்போது கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளதாகவம், அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

இருப்பினும், 30-50 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் என்பது ஒரு பெரிய தொகையாகத் தோன்றினாலும், கடந்த மாதத்தில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 20 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் விலைகளில் இந்த எண்ணெய் வெளியீட்டின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் அறிக்கை வெளியான பின்னர், அமெரிக்க எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு ஒரு டொலர் அல்லது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்து 56 டொலராக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவின் ஒரு பீப்பாய் எண்ணெய் தற்போது 55 டொலர் மதிப்புடையது என்றும், 50 மில்லியன் பீப்பாய்கள் விற்கப்பட்டால், 1.65 முதல் 2.75 பில்லியன் டொலர் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெய் விநியோகம் வெனிசுலாவின் சொந்த எண்ணெய் இருப்புக்களைக் குறைக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

The post வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட  அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றிலும் மறுத்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வெனிசுவெலா  ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியும் சிறைச்சாலை உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

தான் தற்போது வெனிசுலாவின் ஜனாதிபதி என்றும், தான் ஒரு நிரபராதி என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், முதல் பெண்மணி செலியா புளோரஸும் தனக்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இருப்பினும், வெனிசுலா ஜனாதிபதியோ அல்லது அவரது மனைவியோ பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்த பின்னர் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்-ஸ்டீன், இந்த வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி பாரி ஜோயல் பொல்லாக், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதரவாககும், எதிராகவும் நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ appeared first on Oruvan.com.

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை!! சீன ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
உலக வல்லரசுகள் “மற்ற நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை மதிக்க வேண்டும்” என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் அமெரிக்கா திடீரென அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் நாடு கடத்தியது தொடர்பிலான மறைமுகமான தாக்குதலாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனா நீண்ட காலமாக வெனிசுலாவின் கூட்டாளியாகவும் அதன் மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவராகவும் இருந்து வருகிறது.

“இன்று உலகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாற்றங்களையும் கொந்தளிப்பையும் சந்தித்து வருகிறது.

ஒருதலைப்பட்சமான மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன” என்று ஜின்பிங் கூறியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல்கள் குறித்த முந்தைய விமர்சனத்திற்குப் பின்னர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அறிக்கை வந்துள்ளது.

“மற்ற நாடுகளின் மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சிப் பாதைகளை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

குறிப்பாக பெரிய சக்திகள் அவ்வாறு செய்வதில் முன்னிலை வகிக்க வேண்டும்” என்று சீன ஜனாதிபதி ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக விவரிக்கப்பட்டது.

வெளிப்புற அழுத்தம் இல்லாமல் மற்ற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பில் ஈடுபட வெனிசுவெலாவிற்கு உரிமை உண்டு என்று சீனா பலமுறை கூறியுள்ளது.

முன்னதாக, மதுரோவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனாவும் கோரிக்கை விடுத்தது.

“ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு எதிராக அமெரிக்காவின் அப்பட்டமான பலாத்காரப் பயன்பாடு மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்” ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

‘இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை தெளிவாக மீறுவதாகும்’ என்று சீனா மேலும் தெரிவித்துள்ளது.

சீனா-வெனிசுலா உறவுகள்

மதுரோ அரசாங்கத்தின் வீழ்ச்சியும், அமெரிக்க நடவடிக்கையும் சீனாவிற்கு பெரும் அடியாகும், ஏனெனில் மதுரோவுக்கு முன்பு ஹ்யூகோ சாவேஸின் காலத்திலிருந்தே வெனிசுலாவுடன் சீனா நெருக்கமான மூலோபாய உறவுகளைக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக வெனிசுலாவுடனான சீனாவின் மூலோபாய கூட்டாண்மை, அரசியல் நல்லுறவு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய செல்வாக்கிற்கு பகிரப்பட்ட எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கிடையில், அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும், சீனா வெனிசுலா எண்ணெயை வாங்கும் ஒரு முக்கிய நாடாக மாறியது.

சீனா வெனிசுலாவின் முக்கிய முதலீட்டாளராகவும் கடன் வழங்குநராகவும் உள்ளது, எண்ணெய்க்கு ஈடாக பில்லியன் கணக்கான டாலர்களை கடன்களாக வழங்குகிறது.

The post வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை!! சீன ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!
வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து கப்பலை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க துருப்புக்களைப் பாராட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ​​டிரம்ப், “வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் ஒன்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

இதுவரை கைப்பற்றியதில் இதுவே மிகப்பெரிய கப்பல் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், டேங்கர் கப்பலின் உரிமையாளர் யார் என்பதைச் சொல்ல டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கப்பலின் எண்ணெய் பற்றி கேட்டபோது, ​​”அது எங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர், வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து வரும் எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றுவதற்கான ஆணையை நிறைவேற்றியதாக அரசாங்கம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (உள்ளூர் நேரம்), மத்திய புலனாய்வுப் பிரிவு, உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வுகள் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை ஆகியவை பாதுகாப்புத் துறையுடன் இணைந்து, வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை கைப்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் சட்டவிரோத எண்ணெய் கப்பல் வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக, இந்த எண்ணெய் டேங்கர் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.

வெனிசுலா கடற்கரையில் அமெரிக்கப் படைகளால் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது. தடைசெய்யப்பட்ட கப்பலின் போக்குவரத்தை நிறுத்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

The post அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்! appeared first on Oruvan.com.