Vavuniya News Archives - Oruvan.com

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று (19.01) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பௌத்ததுறவி ஒருவருக்கு சிலைஅமைக்க இடம் தாருங்கள்! சபை உறுப்பினர் கோரிக்கை
மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சபையின் உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றைஅமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார்.

அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது எழுந்த துணை முதல்வர் கார்த்தீபன் அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத்தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே நான் கோரியுள்ளேன்.

தற்போது பள்ளி அமைந்துள்ள பகுதியானது மதராசா பாடசாலை ஒன்றுக்காவே அந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டது.

தற்போது பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அதனை சுற்றியுள்ள இடங்களை நீங்கள் உரிமை கோர முடியாது என தெரிவித்தார்.

இதன்போது எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்தபிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும்.

எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன்இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வேண்டாம்.

ஏற்கனவே எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை அங்கு வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு அது தடுக்கப்பட்டிருந்தது.

எனவே விண்ணப்பங்களை கோருவோர் முழுமையான தகவல்களை வழங்கி அதனை சபைக்கு சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.

The post பௌத்ததுறவி ஒருவருக்கு சிலைஅமைக்க இடம் தாருங்கள்! சபை உறுப்பினர் கோரிக்கை appeared first on Oruvan.com.

வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (18) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுளளன. பூட்டப்பட்டுள்ள ஒரு சில கடைகளை சிலர் அச்சுறுத்தி திறக்க வைப்பதையும் காணலாம்.

சுயமாகவே மக்கள் கடைகளைப பூட்டி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற போது அதனை மாற்றியமைக்கும் முகமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் கடைகள் அனைத்தும் வவுனியா பசார் வீதியில் மூடப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு கிடைத்துள்ளது.

வவுனியா போன்று யாழ்ப்பாண வார்த்தக சங்கமும் செயற்பட்டதால் நகரில் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

எமது கோரிக்கையை ஏற்று வியாபார நிலையங்களை மூடி ஆதரவு தந்தவர்களுக்கு நன்றிகள். பலத்த அழுத்தத்திற்கு மத்தியிலும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும் எனவும் அதற்கு எதிரான போராட்டம் 29 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார்.

எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம். மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.

வர்த்தக சங்க தலைவர் கேட்கும் போராட்ட முறைகளுக்கு பதில சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

The post வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை appeared first on Oruvan.com.

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.

The post வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(4) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது வவுனிய, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது appeared first on Oruvan.com.

வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா நகரசபையாக இருந்து மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்ப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் புதிய ஆணையாளராக வடமாகாண மகளீர்விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகத்தினால் குறித்த நியமனம் நேற்றயதினம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

The post வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! appeared first on Oruvan.com.

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி
வவுனியா புகையிரத நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இம்மரணம் தற்கொலையா அல்லது விபத்தாக என்ற மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி appeared first on Oruvan.com.

ஓமந்தையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து
வவுனியா ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று (02.07.2025) காலை 9.30மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்கள் ஏ9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் 20 நிமிடங்கள் தாமதத்துடன் புகையிரம் கொழும்பு நோக்கி பயணித்தது.

விபத்து இடம்பெற்ற இவ் புகையிரத கடவை ஒர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும் என்பதுடன் எச்சரிக்கை பாதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

The post ஓமந்தையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து appeared first on Oruvan.com.

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக வவுனியாவில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் தீப்பிடித்தது
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கிடங்கில் நேற்று (30) தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வீடும் தீப்பிடித்து எரிந்து, வீட்டிலிருந்த அனைத்து சொத்துக்களும் எரிந்து நாசமாகியதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்ததால், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் வீட்டில் எரிபொருளை சேமித்து வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் எரிபொருள் இருப்புகளும் தீப்பிடித்து, வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிஸார், வீட்டு உரிமையாளர் தவறுதலாக வீட்டில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சேமித்து வைத்திருந்த பெட்ரோலைக் கொண்டு தீயை ஏற்றி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

பெட்ரோல் பாட்டிலை உரிமையாளர் தூக்கி எறிந்துவிட்டு வீட்டை விட்டு ஓடியபோது தீப்பிடித்தது. இதனால் தீ மற்ற எரிபொருள் இருப்புகளுக்கும் பரவி தீ மேலும் பரவியது.

இருப்பினும், அப்பகுதிவாசிகளால் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும், அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து சொத்துக்களும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டன. வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக வவுனியாவில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் தீப்பிடித்தது appeared first on Oruvan.com.

வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல்
வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொதுமகனொருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் உள்ளமையினாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதினால் அக்கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையினை கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின் அடையாள அட்டையினை காட்டுமாறு கோரியுள்ளார். எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையினை காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிண்ணணியில் குறித்த பொதுமகன் அன்றைய தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமகன் மீது தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் , துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பொதுமகனின் நலனை கேட்டறிந்தமையுடன் சம்பவத்தினையும் கேட்டறிந்தனர்.

மேலும் அவ்விடத்திலிருந்தே சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தொலைபேசியூடாக கதைத்ததுடன் உரிய நடவடிக்கைகளுக்கு ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்குவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமகனின் கண் மற்றும் முதுகு பகுதி என்பவற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

The post வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல் appeared first on Oruvan.com.