Vavuni News Archives - Oruvan.com

ஆதனவரியில் மாற்றமில்லை! வவுனியா மாநகர சபையின் விசேட அமர்வில் தீர்மானம்
மாநகரசபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் 8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு இன்று காலை இடம்பெற்றிருந்தது.

கடந்த அமர்வில் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆதனவரியினை குறைக்குமாறு தேசிய மக்கள் சக்தி, தொழிலாளர் கட்சி, இரு சுயேட்சை குழு என எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனால் அந்த அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட அமர்வு ஒன்று நடாத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கமைய இன்றைய அமர்வு குழுநிலை விவாதமாக இடம்பெற்றது.

குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ப்படுத்தக்கூடாது என்றும், சில வட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மாநகரசபையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை சுட்டிக்காட்டி ஆதனவரியை குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 8:10 என்ற அடிப்படையிலேயே ஆதனவரியை அறவிடுவதுடன் அடுத்த வருடம் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என ஆராயலாம் என குழுநிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதனவரியில் மாற்றமில்லை! வவுனியா மாநகர சபையின் விசேட அமர்வில் தீர்மானம் appeared first on Oruvan.com.

வவுனியாவில் தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் 1985 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது

The post வவுனியாவில் தனியார் காணியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு! appeared first on Oruvan.com.

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – சங்கு, தமிழரசு கட்சி உடன்பாடு
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும்.

அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை.

சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக்கொள்வோம். அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும்.

எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது. அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சிமன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த இணக்கப்பபாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவிற்கு வருவார்கள் என எதிர்பார்கிறோம்” என்றார்.

The post கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – சங்கு, தமிழரசு கட்சி உடன்பாடு appeared first on Oruvan.com.

மேயர் பதவியை நான் கோரவில்லை: மாநகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்
வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. எனினும், ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் சு.காணடீபன் மாநகர மேயர் பதவியை கோருவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாநகர சபையின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்ட நான் அதி கூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளேன்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் அதி கூடிய வாக்குகளைப் பெற்று வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராக எனது வட்டாரத்தில் நான் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக மீண்டும் அதி கூடிய வாக்குகளால் சங்கு சின்னத்தில் வெற்றி பெற்றேன்.

தேர்தல் முடிந்த பின்னரே மேயர், பிரதி மேயர் யார் என தீர்மானிப்பதாக கட்சி தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது.

அந்தவகையில், அதி கூடிய வாக்குளைப் பெற்று நான் வென்ற நிலையில் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட் அமைப்பும், எனது ஆதரவாளர்களும் எனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். நான் கோரவில்லை.

ஜனநாயக முறைப்படி எனக்கு மேயர் பதவி தந்தால் நான் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து இந்த மாநகரத்தை முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன்.

அடுத்த முறையும் சங்கு சின்னத்தில் அதி கூடிய வாக்குளைப் பெற்று வெல்லும் நிலையை உருவாக்குவேன். மக்களின் விருப்பதிற்கு கட்சி தலைமைகள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

The post மேயர் பதவியை நான் கோரவில்லை: மாநகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் appeared first on Oruvan.com.

வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.

அதற்கு ஆட்சேபனை வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தினர் பிணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைவாக நேற்றைய தினம் (28.04) குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஓம்பதாம் இலக்க சந்தேக நபர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை அதிலும் ஒரு பிணையாளி மனுதரராக இருக்க வேண்டும் என்பதுடன், இரு பிணையாளிகளும் கிராம அலுவலர் மூலம் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், எல்லா சந்தேக நபர்களும் மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணிக்கு இடையில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தமது வரவை பதிவு செய்ய வேண்டும் எனவும், சந்தேக நபர்களுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் வவுனியா நீதிவான் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கும் படியும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

The post வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை appeared first on Oruvan.com.

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

வவுனியாவில் 29 கோடி ரூபா செலவில் விசேட பொருளாதார நிலையம் – ஆறு வருடங்களாக மூடிவைக்கப்பட்டுள்ளது
வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம், கடந்த 2018ஆம் ஆண்டு கட்டிடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள நிலையில், இதுவரை அதிகாரிகள் திறக்கவில்லை.

இந்நிலைமை காரணமாக வவுனியாவில் உள்ள மொத்த மரக்கறி நிலையம் மற்றும் ஏனைய மொத்த வியாபார நிலையங்கள் வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

பிரதான சாலையின் ஓரத்தில் மொத்த விற்பனை மையங்களும் இயங்கி வருகின்றன.

கோவிட் தொற்று பரவலின் போது, ​​இந்த வணிக வளாகத்தின் கட்டிடங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பிரிவு நிறுவப்பட்டதுடன் சில நாட்களுக்கு வடக்கிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை பரிமாறும் மையமாகவும் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், தற்போது கட்டிட வளாகம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டங்களின் போது, ​​வவுனியா தொழிற்சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் இந்த விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த போதும், கட்டிடத் தொகுதி இது வரை திறக்கப்படவில்லை.

The post வவுனியாவில் 29 கோடி ரூபா செலவில் விசேட பொருளாதார நிலையம் – ஆறு வருடங்களாக மூடிவைக்கப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.