USD Archives - Oruvan.com

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் கொள்முதல் விலை 311.76 ரூபாவாகவும், விற்கும் விலை 319.31 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

2026 பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட வெளிப்புற அழுத்தங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலும் ரூபாயின் இந்த மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

ரூபாயின் மதிப்பு சரிந்தபோதிலும், நவம்பர் 2025 முதல் காணப்படும் போக்கைத் தொடரும் வகையில், பெப்ரவரி 2026இல் நடப்புக் கணக்கு உபரி பதிவாகியுள்ளது.

அதன்படி, 2026 ஜனவரி-பெப்ரவரி காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த உபரி, 487 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இருப்பினும், 2026 பெப்ரவரி “வெளித்துறை செயல்திறன்” அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வர்த்தப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.1 பில்லியன் டொலராக இருந்த பற்றாக்குறை, 2026ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி appeared first on Oruvan.com.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றை தினம் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309 ரூபா 91 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 317 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

The post ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 313 ரூபா 09 சதமாக பதிவாகியுள்ளது.

The post ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு appeared first on Oruvan.com.

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில், கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக வருவாயாக கிடைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்றுவரை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 967.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா வருவாய் மூலம் 182.9 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் சாதனை அளவை எட்டியது
கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு 680.8 மில்லின் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையில் மொத்த 5.116 பில்லியன் அமெரிக்க டொலர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 4.28 பில்லியன் டொலரை விட 19.3 வீதம் அதிகமாகும்.

இதேபோல், இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பணம் அனுப்புதல் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முதல் காலாண்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரையான காலகட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 3,102.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஜனவரி – மே வரையான காலகட்டத்தில் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 115,022 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் பெறப்பட்ட மொத்த பண அனுப்பீடுகளின் மதிப்பு 1.8144 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெறப்பட்ட அதிகபட்ச பண அனுப்பீடுகள் குவைத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து பணம் அனுப்பீடுகள் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 69,682 என்பதுடன் மாத சராசரி 23,227 ஆகும்.

The post இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் சாதனை அளவை எட்டியது appeared first on Oruvan.com.

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது
போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மினுவாங்கொடை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை  பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபர் ஆறு போலி 100 டொலர்  தாள்களுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ரஸ்நாயக்கபுராவில் வசிக்கும் 45 வயதுடையவர்,  இந்நிலையில், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது appeared first on Oruvan.com.

வரி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் – IMF வலியுறுத்தல்
48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அதன் வரி வசூல் இலக்குகளை அடைவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

வரி இலக்குகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், இலங்கை 900 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருவாய் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது என்றும், ஏற்கனவே உள்ள வரிகள் திருத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த வருவாய் திரட்டும் கொள்கைகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், ஒரு வருடத்திற்குள் மேலும் இரண்டு நிவாரணப் பொதிகள் பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர் ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வரி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் – IMF வலியுறுத்தல் appeared first on Oruvan.com.