usa news Archives - Oruvan.com

நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்து நிலைமை ஏற்படக்கூடும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை சுட்டுக் கொல்ல முயன்ற ஒருவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேக நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்படி, டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 59 வயதான ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Oruvan.com.

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் ஆர்வம்: நேட்டோ நாடுகள் கடுதம் எதிர்ப்பு
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேவைப்பட்டால் ராணுவ வலிமையைப் பயன்படுத்தியும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற நிர்வாகத்தின் மிரட்டலுக்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து வியாழக்கிழமை ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் ரூபன் காலெகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள இந்தத் தீர்மானத்தில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு நாட்டின் பகுதியை வலுக்கட்டாயமாகப் பறிப்பது என்பது நட்பு நாடுகளிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், ஆர்டிக் பகுதியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களைக் காக்க ஒத்துழைப்பே சிறந்தது, மிரட்டல் அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கிற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் நார்வே உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் தங்களின் சிறிய அளவிலான ராணுவக் குழுக்களை கிரீன்லாந்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.

இது அமெரிக்காவிற்கு எதிரான நேரடிப் போர் அல்ல என்றாலும், டென்மார்க்கின் இறையாண்மையைக் காப்பதற்கான ஒரு குறியீட்டு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் தங்களது வீரர்கள் ஏற்கனவே அங்கு பயிற்சிக்காகச் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வெளியுறவு அமைச்சர்கள், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதையும், அமெரிக்காவுடன் இணைய விரும்பவில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அமெரிக்காவின் பாதுகாப்பு கவலைகளை ஆராய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க டென்மார்க் ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த மோதலைக் கூர்ந்து கவனித்து வருவதுடன், மேற்கு நாடுகளின் இந்த ராணுவ நகர்வுகள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாக விமர்சித்துள்ளன

The post கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் ஆர்வம்: நேட்டோ நாடுகள் கடுதம் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்!
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துக்கொண்டுள்ளார்.

இதன்படி, தனது பதவிக்காலம் ஜனவரி 2026 இல் தொடங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக ஊடகமான ட்ரூத்தில் திருத்தப்பட்ட விக்கிபீடியா பக்கத்தின் படத்தைப் பதிவேற்றி இந்தக் கூற்றை டிரம்ப் முன்வைத்தார்.

இந்த திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ படத்தில் அவர் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது ஜனாதிபதியாகவும், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளார்.

அசல் விக்கிபீடியா பக்கத்தில் டிரம்ப் வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக பட்டியலிடப்படவில்லை, மேலும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் இந்தக் கூற்றை அங்கீகரிக்கவில்லை.

கடந்த ஜனவரி மூன்றாம் திகதி வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றிய பின்னர் இந்தப் பதிவு வந்துள்ளது.

மதுரோ மற்றும் அவரது மனைவியுடன், கூட்டாட்சி போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நியூயார்க்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க நாட்டை குறிவைத்து பல மாதங்களாக அமெரிக்கா விதித்த அழுத்தம், தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தான் கடத்தப்பட்டதாக மதுரோ தெரிவித்துள்ளார்.

சீனா, ரஷ்யா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கையை சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கண்டித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு கவலைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கான தேவையை காரணம் காட்டி, அமெரிக்கா வெனிசுலாவை தற்காலிகமாகத் தடுக்கும் என்று டிரம்ப்

இதற்கிடையில், அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெயை நிர்வகித்து உலக சந்தையில் விற்பனை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரோவுக்குப் பிறகு வெனிசுலாவின் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அதிகாரக் கூற்றுக்களை நிராகரித்து மதுரோவை விடுவிக்கக் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், ரோட்ரிக்ஸ் அமெரிக்காவிற்கு உதவவில்லை என்றால், அவர் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மதுரோவுக்கு ஏற்பட்ட விளைவுகளை விட அவருக்கு ஏற்படும் விளைவுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்! appeared first on Oruvan.com.

ஈரானின் அதியுச்ச தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக ஈரானை ஆக்கிரமித்துள்ள அமைதியின்மைக்கு மத்தியில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உரை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

கமேனியின் உரை தெஹ்ரான் உட்பட அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

ஈரானில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு தனது முதல் உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சொந்த நாட்டின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு கமேனி கேட்டுக் கொண்டார்.

டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தனது உரையில், ஈரானில் வெளிநாட்டு ஆதரவு பெற்ற செயல்பாட்டாளர்களையோ அல்லது பயங்கரவாத முகவர்களையோ ஈரான் பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார்.

சில கலவரக்காரர்கள் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவதன் மூலம் டிரம்பை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

‘டிரம்ப் சொந்த நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டும், ஈரான் வெளிநாட்டு அழுத்தத்திற்கு அடிபணியப் போவதில்லை’ என்று டிரம்பை கமேனி எச்சரித்துள்ளார்.

ஒற்றுமையைப் பேணுமாறு ஈரானிய இளைஞர்களிடம் கோரிக்கை

தனது உரையில், ஈரானிய இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்று கமேனி வலியுறுத்தினார்.

“ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள், எப்போதும் தயாராக இருங்கள், ஏனென்றால் ஒரு ஐக்கிய தேசம் எந்த எதிரி நாட்டையும் தோற்கடிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது” என்று கமேனி கூறினார்.

“அமெரிக்க ஜனாதிபதியின் கைகள் 1,000க்கும் மேற்பட்ட ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கா தாக்குதல்கள் பற்றியது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் ஒருபோதும் பின்வாங்காது

‘இஸ்லாமியக் குடியரசு லட்சக்கணக்கான கௌரவ மக்களின் இரத்தத்தால் ஆட்சிக்கு வந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் அது நாசகாரர்களுக்கு முன்னால் பின்வாங்காது’ என்று கமேனி கூறினார்.

தலைநகரில் நிலவும் அமைதியின்மையைக் குறிப்பிட்டு, போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியை மகிழ்விக்க இதைச் செய்கிறார்கள் என்றும், அவரை மகிழ்விக்க அவர்கள் விரும்பினர் என்றும் அவர் கூறினார்.

“ஒரு நாட்டை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டையும் நடத்துவார்கள்.” என அயதுல்லா அலி கமேனி மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஈரானின் அதியுச்ச தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை appeared first on Oruvan.com.

டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
வெனிசுலா மீது மேலதிக இராணுவத் தாக்குதல்களை நடத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க செனட் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்ட செனட் சபையில், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஐந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் 52-47 என்ற வாக்குக் கணக்கில் இந்த ‘போர் அதிகாரத் தீர்மானம்’ (War Powers Resolution) வெற்றி பெற்றுள்ளது.

கடந்த வார இறுதியில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிசிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகள் குறித்து செனட் உறுப்பினர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.

குறிப்பாக, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கம் மற்றும் டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை இராணுவ பலம் கொண்டு இணைக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்து வரும் எச்சரிக்கைகள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போர் தொடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், இது சட்டமாவதற்கு அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட வேண்டும். ஆனால், ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், கிரீன்லாந்து மீது ட்ரம்ப் படையெடுப்பதைத் தடுக்க மற்றுமொரு தீர்மானத்தைக் கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

“ட்ரம்ப் தனது விருப்பத்திற்கு ஏற்ப மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதைத் தடுக்க வேண்டும்” என்று செனட்டர் ரூபன் காலேகோ தெரிவித்துள்ளார்.

எனினும், ட்ரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “அதிபர் தான் தலைமைத் தளபதி, அவர் இராணுவத்தைப் பயன்படுத்த முழு அதிகாரம் உள்ளது” என ட்ரம்ப்பிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்

The post டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Oruvan.com.

அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

இதன்படி,  திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் விமான நிறுவனங்கள் தங்கள் வழமையான அட்டவணையின் கீழ் விமானங்களை இயக்க முடியும் என மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 40 முக்கிய விமான நிலையங்களில் விமானங்களைக் குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், எண்ணற்ற விமானங்கள் தாமதமாவதற்கும் வழிவகுத்தன.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்ட மூலத்தில் கையெழுத்திட்டார்.

இதன் மூலம் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஆறு வாரங்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பணியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின appeared first on Oruvan.com.

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு
அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 40 நாள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈடாக சுகாதாரத் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக குடியரசுக் கட்சி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், மூன்று முன்னாள் ஆளுநர்கள் உட்பட எட்டு செனட்டர்கள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஒக்டோபர்முதலாம் திகதி தொடங்கிய பொது முடக்கம், 40 நாளாக தொடர்ந்தும் நீடித்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக, 700,000 பேர் ஊதியமின்றி பணியில் ஈடுபட்டுள்ளனர்.  670,000 பேர் வேலை இழந்துள்ளனர். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை  அணுக முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு புரேமா வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு appeared first on Oruvan.com.