USA Cricket Archives - Oruvan.com

மேட்ச் பிக்சிங் – ஆரோன் ஜோன்ஸுக்கு ஐசிசி தடை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) ஊழல் தடுப்பு குறியீட்டின் ஐந்து பிரிவுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அமெரிக்க துடுப்பாட்ட வீரர் ஆரோன் ஜோன்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஆரோன் ஜோன்ஸுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2026 டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற 18 அமெரிக்க வீரர்களில் 31 வயதான ஜோன்ஸ் ஒருவர் ஆவார்.

போட்டிக்கான அமெரிக்க அணி இன்னும் பெயரிடப்படவில்லை என்றாலும், பயிற்சி முகாமில் இருந்து 15 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்தத் தடை காரணமாக ஜோன்ஸ் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் படி, ஜோன்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக 2023-24 ஆம் ஆண்டு பார்படோஸில் நடந்த ‘பிம் 10’ போட்டியுடன் தொடர்புடையவை.

இது கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது, எனினும, அவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகள் சர்வதேச போட்டிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சங்க நடத்தை விதிகளின் பிரிவு 2.1.1 இன் மீறல்: 2023/24 ‘Bim10’ போட்டியில் ஒரு போட்டியின் முடிவுகள் அல்லது முன்னேற்றத்தை மாற்ற முயற்சிப்பது அல்லது பங்களிப்பது அல்லது மேட்ச் பிக்சிங்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் விதிகளின் பிரிவு 2.4.2 இன் மீறல்: ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட பெறப்பட்ட அழைப்புகள் அல்லது அணுகுமுறைகள் பற்றிய தகவல்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு வெளியிடத் தவறியமை.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் விதிகளின் பிரிவு 2.4.4 ஐ மீறுதல்: அங்கீகரிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அதிகாரியால் நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தமை.

ஐ.சி.சி விதிகளின் பிரிவு 2.4.4 ஐ மீறுதல்: சர்வதேச மட்டத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கத் தவறியமை.

ஐ.சி.சி. விதிகளின் பிரிவு 2.4.7 இன் மீறல்: ஆதாரங்களை மறைப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளைத் தடுப்பது.

இது ஒரு பரந்த விசாரணையின் ஒரு பகுதி என்றும், எதிர்காலத்தில் மற்ற வீரர்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஆரோன் ஜோன்ஸ், அமெரிக்க அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளிலும், 48 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியின் வரலாற்று வெற்றிகளுக்கு அவர் பெரும் பங்களிப்பைச் செய்தார், கனடாவுக்கு எதிராக 40 பந்துகளில் 94 ஓட்டங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களும் குவித்திருந்தமை குறிப்பிடத்தகப்பது.

The post மேட்ச் பிக்சிங் – ஆரோன் ஜோன்ஸுக்கு ஐசிசி தடை appeared first on Oruvan.com.

அமெரிக்க கிரிக்கெட் பேரவை உறுப்பினர் அந்தஸ்து நீக்கம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், சர்சதேச கிரிக்கெட் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பை செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்க நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமானது அதேநுரம் மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த நடவடிக்கையால் வீரர்களோ, விளையாட்டோ பாதிக்கப்படாது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

இதன்படி, அமெரிக்காவின் தேசிய அணிகள், சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கலாம்.

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்புகளிலும், அதில் பங்கேற்பதிலும் எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடைநீக்கம் நடைமுறையில் இருக்கும் வரை, அமெரிக்க தேசிய அணிகளின் நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேரடியாகவோ அல்லது அதன் பிரதிநிதிகள் மூலமாகவோ கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க கிரிக்கெட்  பேரவை உறுப்பினர் அந்தஸ்து நீக்கம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை appeared first on Oruvan.com.

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையர்
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புபுது தசநாயக்க 1993 முதல் 1994 வரை இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு திறமையான விக்கெட் காப்பாளர் ஆவார்.

குறித்த காலப்பகுதியில் அவர் இலங்கை அணிசார்பில் 11 டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் கனடா, நேபாளம் மற்றும் அமெரிக்கா அணிகளின் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்த அணிகளை 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கும் வழிநடத்தினார், மேலும் 2014 இல் நேபாளம் அணி முதல் ஐசிசி உலக இருபது20 போட்டிக்கு தகுதி பெறவும் உதவினார்.

அமெரிக்க கிரிக்கெட்டில் தனது முதல் பதவிக் காலத்தில், உலக கிரிக்கெட் லீக் பிரிவு நான்கில் இருந்து 2019 ஆம் ஆண்டில் ஒருநாள் அந்தஸ்தைப் பெறுவதற்கு புபுது தசநாயக்க குறிப்பிடத்தக்க பங்கை வழங்கியிருந்தார்.

மேலும் அணி கலாச்சாரம் மற்றும் நீண்டகால வளர்ச்சியில் அவர் கவனம் செலுத்தியது இன்று அணியின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு அடித்தளத்தை அமைக்க உதவியது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த புபுது தசநாயக்க,

“அமெரிக்க ஆண்கள் தேசிய அணிக்குத் திரும்பி வந்து தலைமை தாங்குவது ஒரு மரியாதை. எனது முந்தைய பதவிக்காலத்தில் நாங்கள் இங்கு சாதித்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

மேலும் இந்த அணியினர் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவதற்கான மகத்தான ஆற்றலைக் காண்கிறேன்.

அமெரிக்க கிரிக்கெட்டுக்கு அர்த்தமுள்ள ஒன்றைத் தொடர்ந்து உருவாக்க வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.” என்றார்.

The post அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையர் appeared first on Oruvan.com.