US Archives - Oruvan.com

வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேலின் தூதுவர்கள் இடையே வொஷிங்டனில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தூதரக உறவுகள் இல்லாத இந்த இரு நாடுகளின் அதிகாரிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் மார்கோ ரூபியோவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுகிறதென கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள்

குறித்து கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடைபெறும் மோதலை நிறுத்துவதற்கான முயற்சியில் லெபனான் ஈடுபட்டுள்ளது.

ஆனால், ஹிஸ்புல்லா நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் நிபந்தனை காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் உள்ளன.

மேலும், ஹிஸ்புல்லா இந்த முயற்சிகளை ஏற்க மறுத்துள்ளது.

அண்மைய மோதல்கள் லெபனானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

The post வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

பணிந்து போகுமா ஐரோப்பா? அல்லது சிதறுமா நேட்டோ? – டிரம்பின் ‘Petro-Politics’ ஆட்டம்
உலக அரசியல் களத்தில் ஒரு மகா பூகம்பம்! மேற்கத்திய நாடுகளின் இரும்பு அரணாகக் கருதப்படும் நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா?

‘காகிதப் புலி’ என நேட்டோவைச் சாடியுள்ள டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையும், அதனால் உலகப் பாதுகாப்பில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களும் குறித்த எமது செய்திப்பிரிவின் சிறப்புப் பார்வை:

‘போரின் விளிம்பில் உலகம்’ – இதோ, விசேட கள ஆய்வுத் தொகுப்பு

உலக அரசியல் வரைபடத்தில் ஒரு மாபெரும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது! இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் தூணாக விளங்கிய நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா? ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதைப் பற்றி இப்போது மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஈரானில் அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல்களுக்கு நேட்டோ நாடுகள் போதிய ஆதரவு வழங்காததே டிரம்பின் கோபத்திற்குத் தீப்பொறி. இந்த மாபெரும் கூட்டணியை அவர் “காகிதப் புலி” (Paper Tiger) என்று பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

1949-ஆம் ஆண்டு 12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த North Atlantic Treaty Organization, இன்று 32 நாடுகளைக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் தற்போதைய பொதுச்செயலாளராக Mark Rutte பொறுப்பு வகிக்கிறார்.

நேட்டோ அமைப்பின் உயிர்நாடியே அதன் 5-ஆம் பிரிவு (Article 5) தான். அதாவது, ஒரு உறுப்பினர் நாடு தாக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அனைவரும் இணைந்து போரிடுவார்கள் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் பலம்

இங்குதான் ரஷ்யாவின் நீண்டகாலக் கோபம் தொடங்குகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது? காரணம் தெளிவானது. நேட்டோ தனது எல்லை வரை விரிவடைவதை ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை. ஒருவேளை உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகளும், படைத்தளங்களும் ரஷ்யாவின் வீட்டு வாசலுக்கே வந்துவிடும். இது தனது பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் என்பதால் தான், ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடுத்தது.

நேட்டோ கூட்டணியில் அமெரிக்காவே சிம்ம சொப்பனம்! இக்கூட்டணியின் மொத்த இராணுவச் செலவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்காவே சுமக்கிறது. ஆனால், “ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புக்காகப் போதுமான நிதி செலவிடுவதில்லை” என்பது டிரம்பின் நீண்டகாலக் குற்றச்சாட்டு. “ஈரான் விவகாரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவவில்லை என்றால், உங்களைப் பாதுகாக்க நாங்கள் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பும் டிரம்ப், கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி ராய்ட்டர்ஸ் நேர்காணலில், “வெளியேறுவது பற்றி தான் தீவிரமாக யோசிக்கிறேன்” என அதிரடியாகப் போட்டு உடைத்துள்ளார்.

அமெரிக்கா விலகினால் நேட்டோ ஒரு செயலற்ற அமைப்பாக மாறிவிடும்.

முதலாவதாக, அமெரிக்காவின் “அணு ஆயுதக் குடை” (Nuclear Umbrella) பாதுகாப்பு இல்லாமல் போனால், ரஷ்யாவின் பலத்திற்கு முன்னால் ஐரோப்பா நிலைகுலைந்து போகும்.

இரண்டாவதாக, ஐரோப்பாவிலுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்பட்டால், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் சரிவடையும்.

மூன்றாவதாக, நேட்டோ நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதைக் கைவிட்டு, தங்களுக்குள்ளேயே உற்பத்தியைத் தொடங்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

டிரம்பின் இந்த மிரட்டல் ஐரோப்பிய நாடுகளை மிரட்டிப் பணம் பெறுவதற்கான ஒரு தந்திரமா? அல்லது உலக அரசியலின் புதிய தொடக்கமா? என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – ஒருவேளை அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறினால், அது உலகப் பாதுகாப்பில் ஒரு மீள முடியாத அதிர்ச்சியை உண்டாக்கும்.

ரஷ்மிலா

The post  பணிந்து போகுமா ஐரோப்பா? அல்லது சிதறுமா நேட்டோ? – டிரம்பின் ‘Petro-Politics’ ஆட்டம் appeared first on Oruvan.com.

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்
ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடத்தப்படும் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின்  50 மாநிலங்களிலும் 3,200 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மற்றும் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும்

போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இப்சோஸ் (Ipsos) கருத்துக் கணிப்பின்படி, தற்போது டொனால்ட் ட்ரம்பிற்கான ஆதரவு விகிதம் 36% ஆகக் குறைந்துள்ளது.

The post ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் appeared first on Oruvan.com.

அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய – அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் முறையான இலக்குகளாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க , ஈரான் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுத் தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்டனத்தை மார்ச் 30ஆம் திகதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் எனவும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .

The post அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC  எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி 80 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush அனுப்பப்பட உள்ளது.

இந்த கப்பல் மற்றும் அதன் குழு அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) செயல்பாடுகளுக்கு ஆதரவாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த கப்பலும் அதனுடன் இணைந்த தாக்குதல் குழுவும் சமீபத்தில் தங்களது முன்-பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

இதனால், அவை விரைவில் மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் இணையும் வாய்ப்பு காணப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, USS Donald Cook மற்றும் USS Mason ஆகிய ஏவுகணைத் தகர்ப்பு கப்பல்கள் இந்த வாரம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளன.

மேலும், USS Ross என்ற மற்றொரு போர் கப்பலும் பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், அதன் இறுதி இலக்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை பிரதிபலிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

The post மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் appeared first on Oruvan.com.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை
பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகின்றனர் என்று சபாநாயனர் முகமது பாகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எங்கள் படைகள் எதிரிகளின் அனைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றன.

அவர்கள் சிறிதளவு நடவடிக்கை எடுத்தாலும், அந்தப் பிராந்திய அரசின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகளும் இடைவிடாத, ஓயாத தாக்குதல்களால் குறிவைக்கப்படும் எனவும் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடாவில் உள்ள ஈரானிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஹர்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்காகவோ அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி தரைவழிப் படையெடுப்புக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான வீரர்களையும் வளைகுடாவில் நிலைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முழுவதையும் கையாளும் கார்க் தீவு, சாத்தியமான இலக்குகளில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவு, “முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஒரு சிறிய எண்ணெய் தீவு” என்று அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினம், தரைவழிப் படையெடுப்பு ஏற்பட்டால் செங்கடலில் உள்ள கப்பல் போக்குவரத்தை ஈரான் குறிவைக்கும் என்று பெயர் குறிப்பிடப்படாத ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது மோதலைப் பெருமளவில் விரிவுபடுத்தி உலகளாவிய வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணைக்கு வடமேற்குப் பகுதியில் கார்க் தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவ உட்கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலடியாக ஈரான் தற்போது இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே மத்திய கிழக்கிற்கு மேலும் அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானை தளமாகக் கொண்ட USS Tripoli (LHA-7) கப்பலை தலைமையாகக் கொண்டு, அமெரிக்க கடற்படையிலிருந்து கூடுதல் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து,

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு

இதனை அறிவித்துள்ளது.

பிராந்தியத்தின் தற்போதைய நிலையும், எதிர்கால மாற்றங்களும் ஈரானிய ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே

உள்ளது என்றும் அமெரிக்கப் படைகளால் போரை நிறுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இந்தப் பிராந்தியத்திலிருந்து “ஒரு லீற்றர் எண்ணெய்

கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரானின் இந்த அறிக்கை உலக நாடுகளிடையே குறிப்பாக எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி appeared first on Oruvan.com.

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால அரசியல் சதுரங்கம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என நகரும் இந்த மோதலின் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதல்கள்? விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கலாம். 1950-களில் ஈரானை ஆட்சி செய்த Mohammad Reza Shah Pahlavi, அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காதான் ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தையே வழங்கியது. ஆனால், இந்த இணக்கமான பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இந்த நட்பு 1979-ல் தலைகீழாக மாறியது. ஷா மன்னர் திணித்த மேற்கத்திய கலாசாரம் மற்றும் ‘SAVAK’ எனும் ரகசியப் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த ஈரானியப் புரட்சியால், மன்னர் பதவியிறக்கப்பட்டு, அயதுல்லா கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்தது.

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஷா மன்னரை மீண்டும் ஈரானிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு, 52 அதிகாரிகளை 444 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு ‘ஆறாத வடுவாக’ மாறி, இரு நாடுகளையும் பரம எதிரிகளாக்கியது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதே கடந்த 20 ஆண்டுகால உலக அரசியலின் மையப்புள்ளி. 2025-ஆம் ஆண்டு மே மாதம், ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இப்போது மீண்டும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அழித்துவிட்டதாகச் சொன்ன கிடங்குகள் ஓராண்டுக்குள் மீண்டும் எப்படி வந்தன? அன்று அமெரிக்கா சொன்னது பொய்க்கணக்கா அல்லது ஈரானின் இரகசிய தொழில்நுட்பம் அவ்வளவு வலிமையானதா?

இங்கேதான் அரசியல் சதுரங்கத்தின் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் அரங்கேறியது. 2026 பிப்ரவரி 26-ஆம் திகதி, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வைத்து இரு நாடுகளுக்கும் இடையே ரகசிய சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை வெற்றி என அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள், பிப்ரவரி 28 அதிகாலையில் அமெரிக்கா ஈரானின் முக்கிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. சமாதானம் பேசிக்கொண்டே ஈரானை ரகசியமாகச் சுற்றி வளைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஒரு திட்டமிட்ட ‘தந்திரோபாய ஏமாற்று வேலை‘ என்றே பார்க்கப்படுகிறது.

தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையிலும், அமெரிக்கா ஏன் இஸ்ரேலுக்காக ஈரானுடன் இத்தனை பெரிய மோதலில் ஈடுபட்டுள்ளது? இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன

பாதுகாப்பு ஒப்பந்தம்: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரே ஜனநாயகக் கூட்டாளி இஸ்ரேல் மட்டுமே. அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரிக்க முடியாத அங்கம்.

ஈரானின் அச்சுறுத்தல்: ‘இஸ்ரேல் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்பது ஈரானின் நிலைப்பாடு. ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஈரானிய ஆதரவு அமைப்புகளை முடக்க ஈரானை வீழ்த்துவது அமெரிக்காவின் வியூகம்.

அமெரிக்க உள்நாட்டு அரசியல்: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க ‘Jewish Lobby’ அமைப்புகளின் அழுத்தம், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க வைக்கிறது.

2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி முடங்கியதால் விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்புவதே அமெரிக்காவின் நோக்கம்.

உண்மையில், ஈரானில் உள்ள ஒருசாரார் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும், பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவின் இந்தத் தலையீடு தங்களது இறையாண்மைக்கு எதிரானது எனக் கருதி வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். அமெரிக்கா எதிர்பார்த்த உள்நாட்டுப் போர் ஏற்படவில்லை, மாறாக மக்கள் தேசப்பற்றுடன் அமெரிக்காவின் வியூகங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது பதுங்கு குழிகளுக்குச் செல்லாமல், தனது அலுவலகத்திலிருந்தே தாக்குதல்களை எதிர்கொண்டு அங்கேயே உயிர்நீத்தார். கமேனியின் மறைவுக்குப் பின் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா போட்ட கணக்கு பொய்த்துப் போனது. மாறாக, கமேனியின் மரணம் ஈரானிய மக்களிடையே ஒரு புதிய அக்னியை மூட்டியுள்ளது.

இலங்கைக்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS Dena‘ மீதான அமெரிக்கத் தாக்குதல், இந்தப் போரை இந்தியப் பெருங்கடலுக்கும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 60 சதவீத எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கடல்சார் காப்பீட்டுத் தொகைகள் 500 சதவீதம் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவின் பலமும் ஈரானின் விடாப்பிடித் தனமும் இன்று மத்திய கிழக்கை ஒரு எரிமலையாக மாற்றியுள்ளது. 47 ஆண்டுகாலப் பகை இன்று ஒரு புதிய உலகப் போருக்கு வித்திடுமா அல்லது அமைதியில் முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா

The post போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS FITZGERALD’ (DDG 62) கப்பல், விநியோகம் மற்றும் சேவை தேவை கருதி நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள Destroyer வகையைச் சேர்ந்த குறித்த கப்பல் 154 மீற்றர் நீளமுடையது.

கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக போல் ரிச்சட்சன் செயற்படுகின்றார்.

The post கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல் appeared first on Oruvan.com.