us tariffs list Archives - Oruvan.com

இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.

எனினும், இந்த வரி விகிதம் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நிவாரணம் பெற இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக 20 வீதமாக வரி குறைக்கப்பட்டது. இந்த புதிய வரிக் கொள்கை கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி அதை இன்று வரை ஒத்திவைத்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா விதித்த கட்டண விகிதத்தை மேலும் குறைப்பதற்கான விவாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத் தலைவர் மங்கள விஜேசிங்க கூறுகிறார்.

அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

The post இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது appeared first on Oruvan.com.

வரி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு பல சலுகைகளை வழங்கியது இலங்கை
இலங்கைக்கு அமெரிக்கா 20 வீத இறக்குமதியை விதித்துள்ள நிலையில், அதில் இன்னும் அமெரிக்கா திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் போலவே, இலங்கைக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கையின் இறக்குமதிக்கான வரியை 20 சதவீதமாகக் குறைத்ததற்கு ஈடாக, இலங்கை அமெரிக்காவிற்கு பரந்த அளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சலுகைகள் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்கள் இரண்டிற்கும் பொருந்தும்.

அதேவேளையில், இலங்கையிலிருந்து 1,161 தொழில்துறை மற்றும் 42 விவசாயப் பொருட்களுக்கும் அமெரிக்கா சலுகைகளை வழங்கியுள்ளது.

அதேநேரம் இலங்கை சுமார் அமெரிக்காவின் 2000 தொழில்துறை பொருட்களுக்கும், குறைந்த அளவிற்கு விவசாயப் பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளது.

இதன்படி, கட்டணங்கள் இல்லாமல் அமெரிக்கப் பொருட்களில் மிக அதிக சதவீதப்பொருட்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

அதேநேரம் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மசகு எண்ணெய் மற்றும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எரிவாயுவையும் அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளது.

இதேவேளை இலங்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட நாட்டிற்கு கணிசமாக அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் நலனுக்காக இதுபோன்ற பற்றாக்குறைகளைக் குறைக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று அமெரிக்க தரப்பு வலியுறுத்தி வருகிறது.

The post வரி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு பல சலுகைகளை வழங்கியது இலங்கை appeared first on Oruvan.com.

இலங்கைக்கான வரியை 20 வீதமாக குறைத்தது அமெரிக்கா
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா 20 வீதமாக குறைத்துள்ளது.

முன்னதாக இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, இலங்கை உட்பட பல நாடுகளில் கட்டண விகிதங்கள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷூக்கு 20 வீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 வீதமாகவும் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டண விகிதத்தை அமெரிக்கா மாற்றவில்லை, இதன்படி, இந்தியாவிற்கு 25 வீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம் 15 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிரியா மீது 41 வீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. லாவோஸ் மற்றும் மியான்மர் மீது தலா 40 வீத வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை மேலும் கூறுகிறது.

The post இலங்கைக்கான வரியை 20 வீதமாக குறைத்தது அமெரிக்கா appeared first on Oruvan.com.

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் 44 வீதமாக இருந்த கட்டண விகிதம் ஜூலை மாதத்திற்குள் 30 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க வரி பட்டியலில் உள்ள மற்ற அனைத்து நாடுகளிலும் இலங்கை பெற்ற மிக உயர்ந்த வரி குறைப்பு இது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இந்த வெற்றி, இருதரப்பு உறவுகளிலும், அமைதியான, உறுதியான இராஜதந்திரத்திலும் அரசாங்கத்தின் முன்னேற்றத்தின் விளைவாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க நிர்வாகத்தின் பயனுள்ள தலையீடு மற்றும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்ற இலங்கைக் குழுவின் தொழில்முறைத் தன்மைக்கு அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இதேவேளை, 30 வீத வரி தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த வரி குறைப்பு சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

எவ்வாறாயினும், 30 வீத வரி தொடர்பில் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை அமெரிக்காவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர் appeared first on Oruvan.com.