University of Jaffna Archives - Oruvan.com

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்குள் நான்காம் வருட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அறையொன்றில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டுக்கமைய நடவடிக்கைகளை எடுக்காமல், முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியே செல்லும் நேரம் முடிவடைந்த பின்னர் இரவு வேளையில் வீதி வழியாக வேறொரு வீடுதிக்கு அழைத்துச் சென்று, அறை ஒன்றில் வைத்துப் பூட்டிய பின்னர் அங்கு வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டதாகவும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவுமே மூன்று மாணவர்களும் தமது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபத்துக்கமைவாகத் துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல், சட்டத்துக்கு மாறாக மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது முதல் விசாரணை நடைமுறைகள் உட்பட சட்டத்துக்கு முரணாகச் செய்யப்படும் விசாரணைகள் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்யும் மாணவர்களுக்கெதிராகவே விசாரணைகள் மேறகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on Oruvan.com.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவர் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம்.

சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்” என்றார்.

The post யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை appeared first on Oruvan.com.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், முறைபாடு செய்தவரின் மகனை ஹெல்மெட்டால் தாக்கியதாகவும், இதனால் அந்த மாணவனின் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்ட பின்னர், கூகிள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

The post யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற தேரர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பௌத்த தேரர் ஒருவர் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், வணக்கத்திற்குரிய சன்னஸ்கம இந்தரதன தேரர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் தனது முதுகலை பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜாவிடமிருந்து தொடர்புடைய சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

பட்டம் பெற்ற பிறகு ஊடகங்களுக்குப் பேசிய வணக்கத்திற்குரிய சன்னஸ்கம இந்தரதன தேரர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற வேண்டும் என்பது தனது கனவு என்று கூறினார்.

தமிழ் மொழி ஒரு பரந்த கடல் போன்றது. அது மிகவும் ஆழமானது. கற்றுக்கொள்ள ஆயிரம் விடயங்கள் உள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என் கனவை நனவாக்க மிகவும் கடினமாக உழைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் நான் கவனித்த ஒரு விடயம் என்னவென்றால், தமிழ் ஆசிரியர்களிடையே சிங்கள மொழி அறிவு இல்லாதது ஒரு பெரிய தடையாக உள்ளது.

நான் முன்பு திருக்குறள், மணிமேகலை, மதுரைகாஞ்சி போன்ற தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்த புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் அது எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது.” என்று குறிப்பிட்டார்.

The post யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற தேரர் appeared first on Oruvan.com.

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுப்பிடிப்பு
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain Tumors Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology)பிரிவின் இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

The post மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுப்பிடிப்பு appeared first on Oruvan.com.