under Archives - Oruvan.com

சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகள் இணைய வேண்டும் என்பதே கட்சியின் யோசனை எனவும் இணையும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் கட்சியின் கருத்தாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை இணைவதாக பரவி வரும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தொடர்பில் குறித்த சிங்கள ஊடகம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேலாண்மைக் குழு கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், கட்சிக் குழுக்கள் சீர்திருத்த செயல்முறைக்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், “சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகளை இணைத்துக் கொள்ளும் அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும் பரந்த கூட்டணியாக இணைத்துக் கொள்ளும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் கலந்துரையாடி வருகிறோம்” என முஜூபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்து தொடர்பில் விமர்சிக்க “ஒருவன்” செய்திச் சேவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான் appeared first on Oruvan.com.

அரிசி இறக்குமதி எனும் போர்வையில் தானியங்கள் இறக்குமதி – முன்னாள் விவசாய அமைச்சர்
நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் அதிகளவில் பாஸ்மதி அரிசி, பயறு, வேர்கடலை மற்றும் உளுந்து ஆகியவை காணப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

திட்டமிட்ட குழுவொன்று அரிசி கொள்கலன்களுக்கு இடையே ஏனைய தானியங்களை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளதாகவும் தற்போது அவற்றை அவர்களின் தொகை களஞ்சியசாலைகளில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாஸ்மதி அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் அதிகளவு வரியை விதிப்பதால் நாட்டு அரிசியை இறக்குமதி செய்யும் பெயரில் 65 ரூபாய் வரியின் கீழ் பாரியளவு பாஸ்மதி அரிசியை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது சந்தையில் பாஸ்மதி அரிசி மாத்திரமன்றி பயறு, உளுந்து ஆகிய தானியங்களின் விலைகளில் சற்று வீழ்ச்சி காணப்படுவதற்கான காரணம் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தொகையானது சந்தைக்கு விடுவிக்கப்பட்டமையே என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையானது பாரிய அளவிலான வர்த்தகர்கள் மூலம் மீள பொதியிடப்பட்டு அதிக விலைக்கு சந்தைக்கு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் நாட்டில் அரிசி விநியோகத்தை அரசாங்கம் நிர்வகிக்கத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நாட்டினுள் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அந்த அரிசித் தொகை தற்போது நெல் ஆலைகளில் காணப்படுவதாகவும் அவற்றை அதிக விலைக்கு ரகசியமாக விற்பனை செய்து வருவதாவும் அவர் வெளிப்படுத்தினார்.

தான் விவசாய அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அரிசி கிலோ ஒன்றின் சாதாரண விலை 170 ரூபாயை விடவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் முந்தைய அரசாங்கம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரிசி விநியோகித்ததால் அரிசி நெருக்கடி ஏற்படவில்லை, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு சிவப்பு அரிசி மட்டுமல்ல, வெள்ளை அரிசியையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் விவசாய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிவப்பு பச்சையரிசி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் தொடர்பில் தனக்கு தெரியும் எனவும் அவசியமெனில் அவற்றை கண்டுபிடித்து தர முடியும் எனவும் அவர் விளக்கமளித்தார்.

The post அரிசி இறக்குமதி எனும் போர்வையில் தானியங்கள் இறக்குமதி – முன்னாள் விவசாய அமைச்சர் appeared first on Oruvan.com.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நேற்று (01) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைது நடவடிக்கை இதுவாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1057 சாரதிகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக 614 சாரதிகள், அதிக வேகத்தில் பயணித்த 54 சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on Oruvan.com.

எலிகாய்ச்சல் கட்டுக்குள் – ஏழு பேருக்கு காய்ச்சல் உறுதி
யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் பதிவான உயிரிழப்புகளில்

07 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி ஆகிய 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் லெப்டோபைரோசிஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11 பேருமாக மொத்தம் 39 பேர் எலிக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெறுவதாகவும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post எலிகாய்ச்சல் கட்டுக்குள் – ஏழு பேருக்கு காய்ச்சல் உறுதி appeared first on Oruvan.com.