un Archives - Oruvan.com

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
லெபனானில் நிலவும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

லெபனானின் லிட்டானி நதிக்கு (Litani) தெற்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போது போர் காரணமாக

பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகளை மேற்கோள்காட்டி ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெய்ரூட் (Beirut) நகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

அதிர்ச்சி மற்றும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்

சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே லெபனான் அரசாங்கத்தின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 7 இலட்சத்து 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

The post லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு appeared first on Oruvan.com.

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது .

பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“காசாவில் போர், படுகொலை மற்றும் மரணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. பாலஸ்தீன மக்களுக்கு நீதியைக் காட்ட வேண்டிய நேரம் இது.

காசா, மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் பாலஸ்தீனத்தின் நிலையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,” என்று ஐ.நா.வில் மக்ரோன் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பாலஸ்தீன அரசுக்கு ஐ.நா.வில் முழு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

திங்களன்று பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா கூட்டிய ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆறு நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்தை புதிய நாடாக அங்கீகரித்தன, இது இரு நாடுகள் தீர்வில் கவனம் செலுத்தியது.

மொனாக்கோ, பெல்ஜியம், அன்டோரா, மோல்டா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் அனைத்தும் பிரான்ஸூக்கு முழு ஒப்புதலை வழங்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கான மாநில அந்தஸ்து ஒரு வாய்ப்பு, ஒரு பரிசு அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார் .

கடந்த வாரம், பெஞ்சமின் நெதன்யாகு, பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தால் மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தினார்.

இருப்பினும், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை நிராயுதபாணியாக்கி ஒழித்து, பாலஸ்தீன அதிகாரசபைக்கு அதிகாரத்தை மாற்றும் திட்டத்தை வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீன பாதுகாப்புப் படைகளுக்குப் பாதுகாப்பை வழங்கவும் பயிற்சி அளிக்கவும் ஐ.நா. படைகளை அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் அரபு லீக் கூட காசாவில் ஹமாஸ் அல்லாத தலைமையிலான அரசாங்கத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்தது .

The post காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை appeared first on Oruvan.com.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார்.

ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா நடத்திய ஒரு நாள் உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, கனடா மற்றம் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தை தொடர்ந்து பிரான்ஸும் தற்போது அறிவித்துள்ளது.

பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, அன்டோரா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளன.

பலஸ்தீனத்தை தனிநாடாக 140 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. எவ்வாறாயினும் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

உலக நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

காசாவில் விரிவடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றக் கட்டுமானம் தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார் appeared first on Oruvan.com.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு கடும் ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை பதிவு செய்கிறோம்.

அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட எடுக்கப்படவில்லை.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்து.

எனினும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டத்தை நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளமையும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும், எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள.

இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை.

இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது.

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது.

மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது.

இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்திற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

The post இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழரசு கட்சி கண்டனம் appeared first on Oruvan.com.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள்
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது, அதை ரத்து செய்வது அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க புதிய வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் விடுவிக்கவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், குறித்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

மேலும் கருத்துச் சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் பேச்சு ஆகியவற்றை தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்களை முன்மொழிந்துள்ளார்.

இதற்கிடையில், மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு எதிர்வரும் எட்டாம் திகதி முதல் ஒக்டோபர் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள் appeared first on Oruvan.com.

இன அழிப்பு!!! சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா வுக்கு கடிதம்
இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இமானுவல், மன்னார் மறைமாவட்ட ஆயர, யாழ் மறைமவாட்ட குரு முதலவர் ஜோ.ஜெபரட்ணம், ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், அர்ச்சுனா ராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான மட்டக்களப்பை சேர்ந்த சீலன் சிவயோகநாதன், திருகோணமலையை சேர்ந்த சிறி ஞானேஸ்வரன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் உள்ளிட்ட 56 பேர் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கு  பொருத்தமான சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீலன் விளக்கமளித்துள்ளார். சிறி ஞானேஸ்வரன், அரியநேந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தனர்.

இலங்கை அரசாங்கம் காலத்துக்கு காலம் ஏமாற்றுவதாகவும் ஜெனீவா தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதாகவும் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன அழிப்புக்கான சர்வதேச விசாசரணை மாத்திரமே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்ட கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் பற்றியும் வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறிஞானேசன் செய்தியாளர் மாநாட்டில் விபரித்துள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு–

ஒகஸ்ட் 12, 2025

1.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம்

ஜெனீவா, சுவிட்சர்லாந்து.

2.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்கள்

மேன்மைமிகு ஐயா, அம்மணி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 60ஆவது அமர்வு – ஸ்ரீலங்கா அரசிற்கான பன்னாட்டு விசாரணையும் நடவடிக்கையும்

மிகத் தெளிவாக விடயங்களை வெளிப்படுத்தும் முகமாக எங்களால் எழுதப்படும் இந்தக் கடிதத்தை நீங்கள் இதற்கு முன் இதே விடயம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதங்களுடன் இணைத்தோ அல்லது தனித்தோ வாசிக்க முடியும் என்பதை தங்களின் கவனத்திற்குத் தருகிறோம்.

1. பன்னாட்டு விசாரணையை நிகழ்த்துவதற்காக 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை வரைபின்கீழ் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டவை நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பதையும் அக் குற்றங்களின் நோக்கத்தையும் மதிப்பீடு செய்யும் அதிகாரத்துடன் கூடிய, பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எந்தவொரு விசாரணைக்கும் அளிக்கப்படும் அதிகாரம், 1948 இனப்படுகொலை வரைபின்படி முழுக் காலவரையறையையும் உள்ளடக்க வேண்டும்.

ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமது தாயகத்தில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் சுயாதீன நீதிப்பொறிமுறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், இலங்கை அரசின் செயற்பாடுகள், முழுஅளவிலோ அல்லது பகுதியளவிலேனும் ஈழத்தமிழரை அழிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதுடன் அவ்வழிப்புத் தொடர்பான எந்தவொரு விசாரணையும் நடைபெறாதவாறு நுட்பமாகத் தடை செய்துவருவதும் இனப்படுகொலை வரைபின் அகவிதி 2இன் படி இனப்படுகொலையாகும்.

1956 ஜூன் மாதம் ஸ்ரீலங்கா அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்லோயாப் படுகொலைகள் என அறியப்படும் முதலாவது பாரிய இனவழிப்பு நடைபெற்ற நாளிலிருந்து, தம்மீது நடைபெற்ற பன்னாட்டுக் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) அமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளிடம் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பொறிமுறையின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீண்டநாளாகத் தொடரும் வேதனையினைத் தீர்க்கவும் காணாமலாக்கப்பட்டவர்களின் விதியை அறிந்துகொள்ளவும் முடியும்.

இந்த விசாரணையில் இலங்கை அரசின் பங்கு இருந்தால் அது பாரபட்சமானதாகும், ஏனெனில் இப்பன்னாட்டுக் குற்றங்களை நிகழ்த்தியவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அரசும் அரசுடன் தொடர்புடையவர்களும் ஆகும்.

இலங்கை அரசு, எந்தவொரு வகையிலும் பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவே இருப்பதுடன் ஈழத் தமிழர்களின் மீது தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை நிகழ்த்தும் இடைவிடாத திட்டமிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐ.நா. சாசனத்தின் அகவிதி 2(7)இல் குறிப்பிடும் “அரசிற்கிருக்கும் இறையாண்மையினை” இதற்கான பாதுகாப்புக் கவசமாக ஸ்ரீலங்கா பயன்படுத்தி வருகிறது.

ஆனால், இறையாண்மையைப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு எதிரான ஒரு கவசமாக பயன்படுத்த முடியாது என்பதே சட்ட ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உறுதி செய்யப்பட்டுள்ள நியதி ஆகும். இதனை, சிரியாவுக்கு விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையகம் ஏற்படுத்திய விசாரணைக் குழு போன்ற ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகியவை எடுத்த செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஈழத் தமிழர்கள் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவோர் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் இருக்கிறோம். இந்நம்பிக்கையின்படி பன்னாட்டு விசாரணையைக் கோருவதற்கு உரிமையும் எங்களுக்கு உள்ளது.

இவற்றினடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60வது கூட்டத் தீர்மானம்,

(அ) ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) அமைக்க அதிகாரம் அளிக்க வேண்டும், அல்லது

(ஆ) அத்தகைய பொறிமுறையை அமைக்க ஐ.நா. பொதுச் சபையிடம் கோரிக்கை விடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.

எனக் கவனமாக வலியுறுத்துகிறோம். இந்தப் பொறிமுறைக்கு 1948ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை வரைபின் கீழ் குற்றச் செயல்களின் வடிவமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரமும், சம்பந்தப்பட்ட முழு காலவரையறையையும் உள்ளடக்கும் அதிகாரமும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

2.    ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பை நிரூபிக்க, இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) அகவிதி IX ன் கீழ், முழுமையான காலவரையறையையும் உள்ளடக்கும் வகையில், ஸ்ரீலங்கா குடியரசுக்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர், பார்வையாளர் நாடுகள், வழக்குத் தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந் நாட்டின் சனாதிபதி உள்ள நிலையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகள் செய்த போர் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் அரசின் முழுமையான ஒத்துழைப்பின்றி சாத்தியமற்றவை எனவும் அரசின் நேரடி பொறுப்புடனேயே நிகழ்ந்ததாகவும் சுயாதீனமாக அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள்  கண்டறிந்துள்ளனர். இங்கு குறிப்பாக, ஐ.நா. பொதுச் செயலரின் நிபுணர் குழு (2011), இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் விசாரணை ( OISL அறிக்கை, 2015), மற்றும் 2007இல் சித்திரவதைகளுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் பயணம் ஆகிய அறிக்கைகளைக் கருத்திற்கொண்டாலே இக்குற்றங்கள் அரச பின்புலத்தில் நிகழ்த்தப்பட்டதற்குப் போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளன. இந்த உறுதியான ஆதாரத் தொகுப்பு, ஸ்ரீலங்காவிற்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆதாரமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இப்போது 16 ஆண்டுகள் கடந்தும், தங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலையின் உச்சத்தை இந்த உலகம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுடன், நுணுக்கமாக அவ் இனப்படுகொலையை  மறுப்பதும், அமைதியாக இருப்பதன் மூலம் புறக்கணிப்பதும் ஸ்ரீலங்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கு உலகம் ஆதரவு அளிப்பதாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வருகின்றனர்.

1948 இனப்படுகொலை வரைபின் அகவிதி IX இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உடன்படிக்கை அடிப்படையிலான அதிகாரப் பிரிவின் கீழ், அவ்வரைபில் பங்கேற்றிருக்கும் இரண்டு நாடுகளுள் ஒன்று, மற்றொரு நாடு மேற்கொள்ளும் மீறல்களைக் குற்றஞ்சாட்டி நேரடியாக வழக்குத் தொடங்கலாம். ஸ்ரீலங்கா 12 அக்டோபர் 1950 அன்று அவ்வரைபின் அகவிதி IX  உட்பட அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு அவ்வரைபில் இணைந்துள்ளது. இதனால், UNHRC இன்  எந்த ஒரு உறுப்பினர் அல்லது பார்வையாளர் நாடும், ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஸ்ரீலங்கா அரசுப் பொறுப்பை நிரூபிக்க நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

எனவே, குறைந்தபட்சம் ஒரு  உறுப்பினர் அல்லது பார்வையாளர் நாடு, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பை நிரூபிப்பதற்காக, இனப்படுகொலை வரைபில் அகவிதி  IX கீழ், ஸ்ரீலங்கா குடியரசுக்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

3.    இலங்கையின் வடபகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்காக, “மனிதப் புதைகுழி பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கான சர்வதேச நெறிமுறைகள் – போர்ன்மொத் நெறிமுறை” (The Bournemouth Protocol) கீழ் அதிகாரம் வழங்கப்பட்டு பன்னாட்டு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தல்.

வலியுறுத்தல் 1-இன் பந்திகள்; 3 மற்றும் 4-ஐ மேற்கோள் காட்டுகையில், ஸ்ரீலங்கா அரசின் ஆதரவோடு நடைபெறும் எந்தவொரு விசாரணையும் இயல்பாகவே பாகுபாடுடையதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. செம்மணி மனிதப் புதைகுழி, ஈழத் தமிழ் பொதுமக்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டதற்கான வெளிப்பட்ட சான்றாக திகழ்கிறது. எலும்புக் காவல்கள், பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், இளம் குழந்தைகள் கூட இருந்ததை வெளிப்படுத்துகின்றன.

முப்படை மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய அரசின் ஆதரவுடன் செயல்பட்ட அமைப்புகள், ஈழத் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்து, இரகசியமாக புதைத்தன என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. அரசின் ஆதரவுடன் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சமூகம்; தங்களைப் பாதுகாக்க முயன்ற போதிலும், “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற கோதாவில் ஈழத் தமிழ்மக்களின் மீது அழித்தொழிப்பு  நடத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, அடையாளம் காணப்பட்ட ஈழத்தமிழ் மக்களைப் பகுதியளவிலேனும் அழிக்கத் திட்டமிட்ட நோக்கம் இருந்ததை வெளிப்படுத்தும் உறுதியான சான்றாகும். இது, ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.

ஸ்ரீலங்காவின் நீதித்துறை வரலாற்றில், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. மொஹமட் தாஜுதீன் வழக்கு அவற்றில் ஒன்று. இத்தகைய அச்சுறுத்தும் முறை, உள்நாட்டு விசாரணைகளின் நேர்மையைப் பற்றித் தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய செயல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற எந்த அறிகுறியும் இல்லை, மேலும் செம்மணி வழக்கும் அதே நிலையை சந்திக்கும் என்ற நியாயமான அச்சம் ஈழத்தமிழ் மக்களிடம் உள்ளது. ஊடக அறிக்கைகளின் படி 2023 செப்டம்பரில், ஸ்ரீலங்காவின் வடபகுதியான முல்லைத்தீவில் பணியாற்றிய ஒரு தமிழ் நீதிபதி, உயிரச்சுறுத்தல் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக, தனது பதவியை விடுத்து ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினார். அவரின் ராஜினாமா, ஒரு தொல்பொருள் தள வழக்கை உள்ளடக்கிய சில நுணுக்கமான வழக்குகளுக்கான அழுத்தம் மற்றும் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்டது. இது, இங்கு பாதுகாப்பின்மையையும் நீதித்துறையின் சுயாதீனமின்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த உண்மைகளின் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மேற்பார்வை செய்து கண்காணிக்கவும், வழக்கு நடைமுறைகளில் பன்னாட்டுத் தலையீட்டை எளிதாக்கவும், “போர்ன்மொத் நெறிமுறை” (The Bournemouth Protocol ) பிரேரிக்கும் அதிகாரத்துடன் கூடிய சுயாதீன நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்ற முன்மொழிவை, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

4.    ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 60ஆவது தீர்மானத்தில், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு வரைபுகளுக்கு முரணான தற்போதுள்ள  மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் திருத்தச் சட்டங்கள் மற்றும் புதிய சட்டங்களை இயற்றுவதை நிறுத்துமாறு வலுவான அழைப்பைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

1983 ஆகஸ்ட் 8 அன்று இலங்கை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 6ஆவது திருத்தச் சட்டம், சமவாய மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (ICCPR – 23 மார்ச் 1976) ஐ வெளிப்படையாக மீறுகிறது. இது, சுயாட்சி அரசியல் நிலையைத் தீர்மானிக்கும் உரிமையை அமைதியான முறையில் வலியுறுத்துவதை குற்றமாக்குகிறது. இதன்மூலம் இவ்வரசியலமைப்புத்திருத்தமே பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் (PTA) முன்னோடியாகச் செயல்பட்டது. மேலும் இத்திருத்ததமானது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவியை பறித்தும், அரசியல் கருத்தொன்றை மட்டும் கொண்டதற்காக கடுமையான குடியுரிமைத் தடைகளையும் விதித்தும் வருகிறது.

இந்த திருத்தச் சட்டம், அகவிதி 1இன் கீழ் ஈழத்தமிழ் மக்களுக்கு தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாகத் தீர்மானிக்கும் உரிமையை மறுக்கிறது. அகவிதி 19இன் கீழ் பாதுகாக்கப்படும் ஜனநாயக கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது. அகவிதி 25 இன் கீழ் உறுதியளிக்கப்படும் அரசியல் பங்கேற்பைத் தடுக்கிறது. மேலும், அகவிதி 26 ஐ மீறி, ஒரேயொரு சமூகத்தை மட்டுமே குறிவைக்கிறது. இதனால், தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளால் தீர்வு காணும் அனைத்து வாயில்களையும் மூடியதன் ஊடாக ஸ்ரீலங்காவின் பன்னாட்டுக் கடப்பாடுகளுக்கு முரணான கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஸ்ரீலங்கா அரசு, இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளின் அடிப்படைக் காரணமான 6வது திருத்தச் சட்டத்தைத் தொடாமல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை நீக்குவதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினைப் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கும் வழி திறந்தேயிருக்கின்றது. மேலும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை நீக்குவதற்கான தெளிவான காலக்கெடு எதுவும் இல்லை. இதனால், பயங்கரவாதத் தடுப்பு சட்டமானது தொடர்ந்தும் அடக்குமுறை மற்றும் அச்சத்தின் கருவியாக இருந்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத் தடுப்பு சட்ட நடைமுறையில், ஈழத் தமிழ் குமுகாய மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவம் கைப்பற்றிய நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அச்சத்தில் வாழ்கிறார்கள்.

2007 ஆம் ஆண்டின் இலங்கை ICCPR சட்டமும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமும் பன்னாட்டு  ICCPR இன் கொள்கைகளை முழுமையாகவும் ஒருமைப்பாட்டுடனும் நடைமுறைப்படுத்தாததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அவற்றின் அமுலாக்கம் பெரும்பாலும் காவல்துறையின் கீழ் இருப்பதால், தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு எதிராக அச்சட்டங்கள் பிரயோகிக்கப்படும்போது பாகுபாடாகப் பொருள்கோருவதும் விளக்கமளிப்பதும் செயற்படுவதும் நிகழ்கிறது.

எனவே, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தில், 6வது திருத்தச் சட்டத்தை நிறுத்தவும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை ஒரு குறிப்பிட்ட மற்றும் அமுலாக்கக்கூடிய  காலக்கெடுவில் நீக்கவும் ஸ்ரீலங்காவிற்குத் தெளிவான, உறுதியான கோரிக்கையைச் சேர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், பயங்கரவாதத் தடுப்பு சட்ட விதிகளை இன்னும் ஆபத்தான பிரிவுகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் எந்தச் சட்ட முயற்சிகளையும் ரத்து செய்யவும் வலியுறத்த வேண்டும். மற்றும், 6வது திருத்தச் சட்டம் போன்ற, பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு முரணான எந்தவொரு சட்டத்தினையோ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களையோ எதிர்காலத்தில் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். மேலும், ஈழத் தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும், அமைதியான இணைந்த வாழ்வை அச்சுறுத்தும், மற்றும் நிலங்களை மறுபெயரிடல் அல்லது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நிறுத்துவதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்

முடிவாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு தனது தீர்மானத்தில் பின்வரும் நடவடிக்கைகளை சேர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது:

1.    1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் படி முழுக் காலஅளவு அதிகாரத்தை உள்ளடக்கிய பணி ஆணையுடன், பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவுதல்.

2.    பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளின் படி, உறுப்புநாடுகள் மற்றும்-அல்லது பார்வையாளர் நாடுகள் ஸ்ரீலங்காவிந்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) வழக்குத் தொடங்குதல்.

3.    செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீது சுயாதீன மேற்பார்வை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய போர்ன்மொத் நெறிமுறையை செயல்படுத்தக்கூடிய பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்தல்.

4.    பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பொறுப்புகளுக்கு முரணான தற்போதைய அல்லது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் இயற்றுதலை இடைநிறுத்தி, தடைசெய்தல்.

நன்றி.

இவ்வண்ணம்,

1.திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்.

2.மன்னார் மறைமாவட்ட ஆயர் அ.ஞானப்பிரகாசம்

3.யாழ்ப்பாணம் குரு முதலவர் ஜோ.ஜெபரட்ணம்.

4.திருகோணமலை தென்கயிலை ஆதீனம் தவத்திரு : அகத்தியர் அடிகளார்.

5.கிழக்கிழங்கை இந்துக் குருமார் ஒன்றியம் தலைவர்: கனேசலோகநாதகுருக்கள்.

அருட் தந்தையர்கள்

6. ளு.ஜெயவர்த்தன.

7. அ.சக்திவேல்

8.யு.கொன்பியூசியஸ்

9.கு.நந்தன

10.அ.லூக்ஜோன்.

11.வு.ஜீவராஜ்

12.பா.அரியநேத்திரன் ,

தமிழ் பொது வேட்பாளர்,

2024.

13. செல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்ற உறுப்பினர் வன்னி.

14. மருத்துவர் இராமநாதன் அருச்சுனா  பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம்.

15. நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்

முன்னாள் வட மாகாணசபை முதலமைச்சர், மு.பா.உறுப்பினர்.

16.சு. பிறேமச்சந்திரன்

மு.பா உறுப்பினர்.

17. ம.க.சிவாஜிலிங்கம்.

மு.பா உறுப்பினர்.

18. க.அருந்தபபாலன்

மு.மா.சபை உறுப்பினர்.

19. ச.அனந்தி

மு.மா.சபை உறுப்பிணர்

20. மா.நடராசா

மு.மா.சபை உறுப்பினர்

21.வி.மணிவண்ணன்

மு.முதல்வர் யாழ் மாநகரசபை.

22..தி.நிரோஸ், தவிசாளர்

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை.

23.பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் யாழ் பல்கலைக்கழகம்.

24.ஏ.பரந்தாமன்

மூத்த விரிவுரையாளர் யாழ் பல்கலைக் கழகம்.

25. கலாநிதி ளு .ஜீவசுதன்.

மூத்த விரிவுரையாளர்

யாழ் பல்கலைக் கழகம்.

26.பொ.தை.ய.ஜசோதன்

தலைவர், பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ் பல்கலைக் கழகம்.

27. வு.லஜிதர்

தலைவர்

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்.

28.ச.பிரகாஸ்

செயலாளர் கிழக்கு பல்கலைக்கழக கலைப் பீடம் மட்டக்களப்பு.

29. சி.ஜோதிலிங்கம் சட்டத்தரணி

யாழ்ப்பாணம்.

30.ச.வைஸ்னவி

சட்டத்தரணி

யாழ்ப்பாணம்.

31. செ.தேவி

தலைவர்

வலிந்து காணாமலாக்கப்பட்

டோர் சங்கம் திருகோணமலை.

32..ச.சிவயோகநாதன்

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் மட்டக்களப்பு.

33.ளு. சிவகரன்

குடிசார் அமைப்புக்களின் ஒன்றிம் மன்னார்.

34.மு.கோமகன் குரலற்றோரின் குரல் யாழ்ப்பாணம்.

3  ஜோ.அ.அலோஸியஸ்

தலைவர் மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கம்

யாழ்ப்பாணம்.

36.தெ.குமணன் மயிலிட்டி மீள்குடியேற்ற சங்கம் யாழ்ப்பாணம்.

37. ம.மரியநாயகம்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

38. சே.கலையமுதன்

மு.பி.சபை உறுப்பிணர்.

39. த.சுஜீவன்

சிறகுகள் அமையம் யாழ்ப்பாணம்

40. சி.த.காண்டீபன்

சமூக மாற்றத்திற்கான ஊடக மையம்.

41. ளு.கமலகாந்தன்

தலைவர், தமிழர் கலை பண்பாட்டு மையம், திருகோணமலை.

42. வ.சுப்பிரமணியம்.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டம், யாழ்ப்பாணம்.

43. வி.முரளிதரன்.

தலைவர் வடமராட்சி குழு யாழ்ப்பாணம்.

44.  கா. இராசலிங்கம்

இளம்பிளறை கலை மண்றம் கதிரவெலி மட்டக்களப்பு.

45. செ.மதியரசு செயலாளர் மக்கள் திட்ட வரைவு அம்பாறை.

46. வு.நேமீஸ்வரன் தலைவர்  கால்நடை கூட்டுறவு சமாசம் மட்டக்களப்பு.

47. கி.சிவபாலன்

செயலாளர் முதியோர் பிரஜைகள் சம்மேளனம். மட்டக்களப்பு.

48. T.நவஜோதி தலைவர்

வெண்மயில் நிறுவணம்  மட்டக்களப்பு .

49. T.தயானந்தன்

தலைவர் செடோலங்கா

மட்டக்களப்பு.

50. ஆ. பவானி

தலைவர்

சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவணம்

மட்டக்களப்பு.

51. கலாநிதி இ.நா.சிறிஞானேஸ்வரன்

அரசியல் செயற்பாட்டாளர்

திருகோணமலை.

52 .பி.அருள்வேந்தன்

சமூகசேவையாளர்

திருகோணமலை.

53.இ.ராஜீவ்காந்

அரசியல் செயற்பாட்டாளர்

திருகோணமலை

54. க.லவகுசராசா

அகம் மனிதாபிமான வள நிலையம்

திருகோணமலை.

55.மேரிரஞ்சினி வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் யாழ்ப்பாணம்.

56.N.அனந்தராஜ்

முன்னாள் செயலாளர் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு யாழ்ப்பாணம்.

The post இன அழிப்பு!!! சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா வுக்கு கடிதம் appeared first on Oruvan.com.

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

The post இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல் appeared first on Oruvan.com.

கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி
கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 ஒக்டோபரில் தாக்குதல் மேற்கொண்டர். இதன்போது சுமார் 1,200 பேர் உயிரிழந்ததுடன் 200 இற்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 02 வருடங்களாக காசா உள்ளிட்ட பலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன.

The post கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி appeared first on Oruvan.com.

இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்
காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் அர்த்தமுள்ள பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும், என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.

விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் இராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது.

பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதனிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்தது. எவ்வாறாயினும் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

The post இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல் appeared first on Oruvan.com.