ukrain russia war Archives - Oruvan.com

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

உக்ரைன் முழுவதையும் இணைத்து, முன்னாள் சோவியத் பேரரசின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் தொடர புடின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையுடன் நன்கு அறிந்த ஆறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த அறிக்கைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைதி பேச்சுவார்த்தையாளர்களின் அறிக்கைகளுக்கு முரணாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்று டிரம்பின் குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், புடினின் நோக்கங்கள் அப்படியே இருப்பதாகவும், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதாகவும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறையின் இந்த தகவல்கள், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உளவுத்துறை நிறுவனங்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தற்போது உக்ரைனின் நிலப்பரப்பில் தோராயமாக 20 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் மாகாணங்களின் பெரும் பகுதிகள், சபோரிஜியா, கெர்சனின் சில பகுதிகள் மற்றும் கிரிமியா ஆகியவை அடங்கும்.

இவை அனைத்தையும் ரஷ்யாவின் ஒரு பகுதி ஆகும் என புடின் கூறுகிறார். இந்த ஆண்டு, ரஷ்ய இராணுவம் தோராயமாக 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, செர்னிஹிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய இராணுவம் உக்ரேனிய போக்குவரத்து வசதிகள், எரிபொருள் மற்றும் எரிசக்தி வசதிகளை குறிவைத்து தாக்குதல்களை முன்னெத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரெமென்சுக் நகரத்தின் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் எரிசக்தி மற்றும் நீர் வசதிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வேண்டுமென்றே எரிசக்தி நிறுவல்கள் மற்றும் நீர் வசதிகளை குறிவைத்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், ரஷ்யா குளிர் காலத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி போரை நடத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமைதி வெறும் 10 மீட்டர் தொலைவில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க அமைதித் திட்டத்தில் பாரிய மாற்றங்களை விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகமான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் அமெரிக்க பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உக்ரைன் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து பயனுள்ள தகவல்களைப் பெற்றதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் டான்பாஸின் 90 சதவீத பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது, தற்போது அந்த பகுதியை விட்டுக்கொடுக்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பின்னர், ரஷ்ய இராணுவம் சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் appeared first on Oruvan.com.

உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம் எனவும் அவ்வாறு இல்லையெனில் உக்ரேனிய துருப்புக்கள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற்றுவோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள சில திட்டங்களுடன்  உடன்படவில்லை எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள விளாடிமிர் புடின்  பயணத்திற்கு முன்னதாக இந்தியா டுடேவுடனான செவ்வியில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதற்கான அமைதி ஒப்பந்த திட்டத்தை முன்வைத்துள்ள அமெரிக்கா, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக சிறப்பு தூதுவர் அடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பு தூதுவர் இடம்பெற்றுள்ள அமெரிக்க குழு ரஷ்ய தரப்புடன் மொஸ்கோவில் சந்தித்துப் பேசியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர்,  ரஷ்ய ஜனாதிபதி “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின்  போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட தூதர்களுக்கும் இடையேயான சிறப்பு சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெற்றிருந்தது.

நள்ளிரவையும் தாண்டி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி ஒப்பந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சிறப்பு தூதுவர் குழுவொன்றை நியமித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்தம் அற்றம் அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இதன் ஒருபகுதியாகவே ரஷ்ய ஜனாதிபதியுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் குழு நேற்று இரவு சந்தித்துப் பேசியிருந்தது.  நள்ளிரவையும் தாண்டி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என புடினின் உயர் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மேலும், பல செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் சில திட்டங்களுக்கு புடின் எதிர்மறையாக பதிலளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு விளக்கமளிக்க சிறப்பு தூதுவர் குழு மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்றதாகவும் உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புடினுக்கும் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு தற்போது திட்டமிடப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் யூரி உஷாகோவ்  மேலும் தெரிவித்துள்ளார்.

The post அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு appeared first on Oruvan.com.

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று இராஜதந்திர நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரஷ்யாவின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்தால் அமெரிக்க முன்மொழிவு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முன்மொழிவுகள், டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மூலம் உக்ரைனுக்கு தெரிவிக்கப்பட்டன.

மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புத் தலைவர் ருஸ்தம் உமெரோவைச் சந்தித்த விட்காஃப், உக்ரைன் நீண்டகாலமாக நிராகரித்து வந்த விதிகள் உட்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய தூதரும் புடினின் நம்பிக்கைக்குரியவருமான கிரில் டிமிட்ரியேவ் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தைக் காட்ட டிரம்ப் நிர்வாகம் உக்ரைன் மீது ஒப்பந்தத்தைத் திணிப்பதாக விமர்சனங்கள் உள்ளன.

ஒப்பந்தத்தின் விதிமுறைகள் சமநிலையற்றவை என்றும், உக்ரைனின் இறையாண்மையைக் கூட கேள்விக்குள்ளாக்குகின்றன என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டான்பாஸ் பகுதியை ரஷ்யாவிற்கு முழுமையாக மாற்றுவது உள்ளிட்ட விதிகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக மூத்த இராஜதந்திரிகளை மேற்கோள் காட்டி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் உக்ரைன் இராணுவத்தின் ஆயுதத் திறன்களைக் குறைப்பது மற்றும் அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் உள்ளன.

ரஷ்யாவின் மூலோபாய இலக்குகளை குறிவைக்க நீண்ட தூர ஏவுகணைகளுக்கான உக்ரைனின் நீண்டகால கோரிக்கையை நிராகரிக்கும் இந்த ஒப்பந்தம், உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் மற்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் உள்ளூர் கிளையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் உள்ளடக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் appeared first on Oruvan.com.

340 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்திய ரஷ்யா – வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்
340 உக்ரேனிய ட்ரோன்களை தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது.

அதே காலகட்டத்தில் மூன்று HIMARS ரொக்கெட்டுகளை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, ரஷ்யப் படைகள் உக்ரேனிய கட்டளையிடும் நிலைகள், வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மற்றும் ட்ரோன் சேமிப்பு வசதிகள் மீதும் தாக்குதல்களை நடத்தியது.

கூடுதலாக, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நோவோனிகோலேவ்காவின் குடியேற்றத்தை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உக்ரைனின் ஆயுதப்படைகள் சமூக ஊடகங்களில் குபியன்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறின.

ரஷ்யப் படைகள் குபியன்ஸ்க்குக்கு பணியாளர்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் குழாய்வழியின் வெளியேறும் இடத்தையும் உக்ரைனியப் படைகள் பாதுகாத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

உக்ரேனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், உக்ரேனியப் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மீட்டெடுத்ததை உறுதிப்படுத்தினார்.

ரஷ்யாவின் பாஷ்கார்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைனிய இராணுவ புலனாய்வு அமைப்பின் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

உக்ரைன் தரப்பு, ட்ரோன்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டு முக்கியமான உற்பத்தி உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும் கூறியது.

பாஷ்கார்டோஸ்தான் குடியரசின் தலைவர் ராடி கபிரோவ், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

இதனால் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தடைபவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post 340 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்திய ரஷ்யா – வெளிநாட்டுப் படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல் appeared first on Oruvan.com.

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி ஊடாக பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார்.

இதன் போது பேசிய பிரித்தானிய பிரதமர்,

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னெப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்றுசேர்த்துள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்தே போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புடின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன.” என்றார்.

The post ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலையீடு மீண்டும் தொடங்கியுள்ளது.

பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதே விட்காஃப்பின் நோக்கமாகும்.

எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்வார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

மக்கள் இறப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைனுடன் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாகவும் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

ரஷ்யா அருகே இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், கப்பல்கள் எந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை டிரம்ப் வெளியிடவில்லை.

சோச்சியின் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலே காரணம் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சோச்சிக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையில், தெற்கு உக்ரைன் நகரமான மைக்கோலைவில் உள்ள வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பை ரஷ்யா ஏவுகணை மற்றும் ஷெல் தாக்குதல்களால் அழித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரத்தில் ரஷ்ய இராணுவம் மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதல் நடத்தியதில் ஏழு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

The post டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? appeared first on Oruvan.com.

50 நாட்களுக்குள் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – புடினை எச்சரிக்கும் டிரம்ப்
உக்ரைனுக்கு எதிரான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவை அவரது ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“50 நாட்களுக்குள் நாம் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அவர்கள் மீது மிக மிகக் கடுமையான வரிகளை விதிக்கப் போகிறோம். நான் பல விடயங்களுக்கு வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். போர்களைத் தீர்ப்பதற்கு இது சிறந்தது” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அடிக்கடி புடினுடனான தனது நட்புறவைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். உக்ரைனை விட ரஷ்யா அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கு அதிக விருப்பம் கொண்டுள்ளது என்று அவர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி போரை நீட்டிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இப்போது, ரஷ்ய ஜனாதிதி மீது தான் ஏமாற்றமடைந்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவின் தாக்குதலை அதிகரித்ததால் டிரம்ப் கோபமடைந்தார். பின்னர் டிரம்ப் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை அனுப்புவதாக அறிவித்தார்.

பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு அனுப்புவதாகக் கூறினார். புடின் அவர் நன்றாகப் பேசுவதாகவும் ஆனால் மாலையில் அனைவரையும் தாக்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ஆயுதங்களை அனுப்புவதை உக்ரைன் வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதியின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

The post 50 நாட்களுக்குள் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – புடினை எச்சரிக்கும் டிரம்ப் appeared first on Oruvan.com.

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா
போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவற்றில் 249 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 226 இலக்குகளைத் தவறவிட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைன் உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை போர் முனைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன.

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து போலந்தின் வான்வெளியைப் பாதுகாக்க போலந்தும் அதன் நட்பு நாடுகளும் போர் விமானங்களை பறக்கவிட்டன.

ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கெர்சன் ஆளுநர் ஒலெக்சாண்டர் புருகுடின் தெரிவித்தார். செர்காசியில் ஆறு பேர் காயமடைந்தனர். லிவிவ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதற்கிடையில், ரஷ்ய ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் போது உக்ரைனின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது, இதில் விமானி கொல்லப்பட்டார்.

ஏழு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கிய பின்னர் விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைனை் தரப்பினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

The post உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா appeared first on Oruvan.com.