UK Tamil News Archives - Oruvan.com

பிரித்தானியாவின் கும்ப்ரியாவில் ரயில் தடம் புரண்டது – அவசர சேவைகளுக்கு அழைப்பு
கும்ப்ரியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர சேவைகளக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நகரின் வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

பென்ரித் மற்றும் ஆக்சென்ஹோம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்னர் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டதாக ரயில் நிறுவனமான Avanti West Coast தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில்,

பென்ரித் நார்த் லேக்ஸ் மற்றும் ஆக்ஸன்ஹோம் லேக் மாவட்டம் இடையே ரயில் தடம் புரண்டதால், அனைத்து வழித்தடங்களும் தடைபட்டுள்ளன.

அதனால், இன்று பிரஸ்டனுக்கு வடக்கே பயணிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வடமேற்கு அம்பியூலன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: “கம்ப்ரியாவில் உள்ள ஷாப் அருகே ரயில் தடம் புரண்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அம்பியூலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு பதிலளிப்பு குழுக்களை அனுப்பியுள்ளது.

நாங்கள் தற்போது நிலைமையை மதிப்பிட்டு, அவசர சேவைகளின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை விரைவில் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை – என்றும் தெரிவித்தது

The post பிரித்தானியாவின் கும்ப்ரியாவில் ரயில் தடம் புரண்டது  –  அவசர சேவைகளுக்கு அழைப்பு appeared first on Oruvan.com.

கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது
அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனிசனின் பொதுச் செயலாளர் கிறிஸ்டினா மெக்னீயா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்கள் பிரதமருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மே மாதத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என நினைக்கின்றேன். தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து என்ன நினைப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

தேர்தல் முடிவுகளின் பின்னர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கிறிஸ்டினா மெக்னீயா  சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மைய வாரங்களில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கிறிஸ்டினா மெக்னீயாவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இதனிடையே, மற்றொரு தொழிற்சங்கமான யுனைட், தொழிற்கட்சி தொழிலாளர்களின் பக்கம் இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, அடுத்த மே மாதம் நடைபெறும் வேல்ஸ் தேர்தல்களில் தொழிற்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே நேரத்தில், ஸ்காட்லாந்தில் அது தோல்வியடையக்கூடும் எனவும், இங்கிலாந்து முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை மெக்கனீயா கடுமையாக சாடியுள்ளார்.  தற்போதைய ஆட்சியில் “நடந்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை பாரிய விபரீத சம்பவமாக அறிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.39க்கு தாக்குதல் குறித்த முதல் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயில் ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டதாகவும், இதன் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், விரைந்து மீட்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று விமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை “திகிலூட்டும்” சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சம்பவம் குறித்து “ஆழ்ந்த” கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைந்து செயப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரச சேவை பிரிவுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பொலிஸாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்,” என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் கிழக்கு கடற்கரை பிரதான ரயில் சேவைகளை இயக்கும் லண்டன் வடகிழக்கு ரயில்வே, அதன் ரயில்களில் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியது.

The post பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.