Trincomalee Archives - Oruvan.com

புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு பௌத்த பிக்குகளும், ஆறு பொது மக்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை டச்பே கடற்கரை மற்றும் போதிராஜ விகாரை சூழலில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், புத்தர் சிலை ஒன்றை வலுக்கட்டாயமாக நிறுவ முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் சட்டங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரொக்கெட் பாகம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இவை இருக்கலாமா என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றன.

The post திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்! appeared first on Oruvan.com.

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு
திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கோமரங்கடவல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு
திருகோணமலையில் புத்தர் சிலை குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு அரசாங்கமே நேரடி பொறுப்பு கூற வேண்டும் என மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர், அரசாங்கத்தை கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, புத்த சாசனத்திற்கு ஏற்படும் சேதம் குறித்து நாங்கள் எச்சரித்தோம்.

அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் இப்போது நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களைப் பற்றி வருத்தப்பட வேண்டும்,” என்று தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அமரபுர மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விஹாரை 1951 முதல் குறித்த இடத்தில் இருந்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணையின் மூலம் 2014 ஆம் ஆண்டு நில உரிமை விஹாரை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தால் தேரர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பது வருந்தத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை
திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட அந்தக் கட்சியின் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி கோரியுள்ளது.

இது குறித்து தமிழரசு கட்சியின் பொது செயலாளர் சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.

நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.

ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.

தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.

அக்கட்சியை சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.

The post திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை appeared first on Oruvan.com.

திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்
திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.

குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.” எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.

பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.

எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம் appeared first on Oruvan.com.

திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார்-ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் என தெரியவருகிறது.

ரிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது – காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

திருகோணமலையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி தீர்ப்பளித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் தனது மனைவியான முஹம்மது பௌஸ் ரஷ்மியா (29வயது) என்பவரை கூறிய கத்தி கொண்ட ஆயுதத்தினால் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த கணவரான கந்தளாய்-பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் சுபியான் இன்சான் (38வயது) என்பவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை அரச சட்டத்தரணி டி தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் 296 ம் இலக்க குற்றச்சாட்டின் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் தீர்ப்பு எனவும் குறிப்பிடத்தக்கது.

The post திருகோணமலையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை appeared first on Oruvan.com.

திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டடிருந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமை இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், குறித்த பகுதியில் மிகவும் நுட்பமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாகவும், சூரிய சக்தி மூலும் மின்சாரம் பெறப்பட்டு நீர் பாய்ச்சி இந்த கஞ்சா தோட்டம் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு appeared first on Oruvan.com.

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு
மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை இன்று 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவுக்ககு எதிராக கடற்கரையோர பகுதியில் MAG எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (18) மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடந்த 20ஆம் திக்தி அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக குறித்த பகுதியில் ஆய்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மூதூர் நீதிமன்ற பிரதம நீதிபதி தஸ்நீம் பௌசானா சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியில் பொலிஸார், பூகோள பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே குறித்த மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

The post திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு appeared first on Oruvan.com.