traveling abroad Archives - Oruvan.com

தொடரும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு- வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல்
இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கடவுச்சீட்டுகள் 7,50,000க்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்ப்பார்த்துள்ள காரணத்தினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, வெளிநாட்டிற்கு வேலை தேடும் இலங்கையர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி கடவுச்சீட்டு கிடைப்பதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் சிரமம் ஏற்படின், இந்நாட்டில் கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தொடரும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு- வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் appeared first on Oruvan.com.