Trade war Archives - Oruvan.com

அமெரிக்க வரிகளால் இலங்கை அதிகம் பாதிக்கும் – ஃபிட்ச் மதிப்பீடுகள்
அமெரிக்க வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளை பாதிக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன.

அமெரிக்கா அரசாங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாடு சார்ந்த பரஸ்பர வரிகள் இறுதியில் செயல்படுத்தப்படும்போது இலங்கை பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்றுமதிகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த முதலீடுகள் சுங்கவரிகளாலும், அதிக நிச்சயமற்ற தன்மையாலும் பாதிக்கப்படுவதால் ஆசிய பொருளாதார வளர்ச்சி மெதுவாகும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகப் போருக்கு பிராந்திய அரசாங்கங்களின் கொள்கை பதில்கள் ஆசிய-பசிபிக் இறையாண்மை மதிப்பீடுகளில் அதன் தாக்கத்திற்கு முக்கியமாக இருக்கும் என்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியது.

ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனத்தின்படி, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து மதிப்பு குறையும் சந்தை அழுத்தத்தை எதிர்கொண்டு அதிகாரிகள் தங்கள் நாணயங்களை ஆதரிக்க தலையிட்டால் அந்நிய செலாவணி இருப்புக்கள் குறையக்கூடும்..

பங்களாதேஷ், இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற இறையாண்மை நாடுகளுக்கு, குறிப்பாக அவர்களின் ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்பட்டால், கடன் எதிர்மறையாக இருக்கலாம் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் மேலும் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்க வரிகளால் இலங்கை அதிகம் பாதிக்கும் – ஃபிட்ச் மதிப்பீடுகள் appeared first on Oruvan.com.

வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது
சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது.

முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் மற்றும் சீன உற்பத்தியாளர் கோமாக் ஆகியவற்றை நம்பியிருக்க வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீனாவின் தடை அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கு விலை மூன்று சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளது.

எவ்வாறாயினும், சீனாவின் அறிவிப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களை வாங்குவதில் சிரமப்படும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன நிறுவனங்கள் தற்போது 100 போயிங் விமானங்களை வாங்குவதற்கு தயாராகியிருந்தது.

எனினும், சீனாவின் தடை காரணமாக அந்த விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவங்கள் வாங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ சீன விமான நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்களில் சில இந்திய நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படும் என்று விமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

The post வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது appeared first on Oruvan.com.