Thurairajah Raviharan Archives - Oruvan.com

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு!! சபையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ரவிகரன் எம்.பி
மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவுபெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு தமிழ் இனத்தின் இறைவனான மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று

காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு”

தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.

மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது. போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக்கூடிய நிலையிருந்தது.

தாயகப்பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர்.

அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ் இனத்தின் இறைவன் மேதகு!! சபையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ரவிகரன் எம்.பி appeared first on Oruvan.com.

சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதா – ரவிகரன் எம்.பி நேரில் வாழ்த்து
காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப்புரிந்திருந்தார்.

இந்நிலையில் சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் நேரில் சென்று வாழ்த்தியதுடன், உடல்நிலை குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் இணைந்துநடாத்திய 49வது தேசிய விளையாட்டுவிழாவானது கடந்த மாதம் காலிமாவட்டத்தில் இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில்பங்கேற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவின் பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப்புரிந்திருந்தார்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.09.2025 நேற்று சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவிற்கு நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு உடல் உபாதைகாரணமாக தற்போதே முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் சாதனைப் பெண்மணியான ஜெஸ்மிதாவின் உடல்நலன் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதா – ரவிகரன் எம்.பி நேரில் வாழ்த்து appeared first on Oruvan.com.

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 24 மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.

இதன்படி, குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க – ரவிகரன் எம்.பி
நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (01.03.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்தசுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த 2018இல் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிக்கிரியைக்கு கடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

இறுதிக்கிரியையினை முடித்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்தசுதாகர் ஏறச்சென்றவேளை அவரது பிள்ளை தந்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்கவைத்தது.

நீதிஅமைச்சரே, நீதியைத்தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் விடுதலை தாருங்கள் – என்றார்.

பாலநாதன் சதீசன்

The post ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க – ரவிகரன் எம்.பி appeared first on Oruvan.com.