The European Union Archives - Oruvan.com

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது
உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (ருசளரடய ஏழn னநச டுநலநn) இடையே ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 15வீத வரி விதிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

டிரம்ப் அரசாங்கம் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 30 வீத இறக்குமதி வரி விதிக்க திட்மிட்டிருந்த நிலையில் தற்போது 15 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்களிப்பதன் மூலம் தனது சந்தையை திறந்துள்ளது.

இந்த நடவடிக்கை பொருளாதார நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், உலக வர்த்தகத்திலும் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது appeared first on Oruvan.com.

இலங்கையில் இளம் தொழில்முனைவோரை குறிவைத்து மோசடி – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி நபர் ஒருவர் மோசடி செய்ததாக இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்ட நபர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி வருவதாக தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் மோசடி செய்பவர் காணாமல் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது.

“இது ஒரு மோசடி” என்று ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியது, அனைத்து ஐரோப்பிய ஒன்றியம் மானியங்களும் ஒப்பந்தங்களும் திட்டங்களின் சமர்ப்பிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நடைமுறைகள் மூலம் கண்டிப்பாக வழங்கப்படுகின்றன என்பதை வலியுறுத்தியது.

நிதியுதவியை எளிதாக்குவதற்கு மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல் டெண்டர்களைச் செயலாக்குவதற்கு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து ஒருபோதும் பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post இலங்கையில் இளம் தொழில்முனைவோரை குறிவைத்து மோசடி – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.