Thaiyiddy Buddhist Temple Archives - Oruvan.com

இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு!! நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு.

அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று, தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தினையும் , திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தையிட்டி திஸ்ஸ விகாரை இப்போது அமைந்துள்ள பகுதி தனியாருக்கு சொந்தமான காணிகள்.

திஸ்ஸ விகாரைக்கு என சொந்தமாக காணிகள் இருக்கும் போது இராணுவத்தினருடன் இணைந்து தனியார் காணிகளை அபகரித்து விகாரையை கட்டியுள்ளனர்.

இது மகா தவறு, பௌத்த பிக்குகள் அவ்வாறு செய்திருக்க கூடாது. மற்றவர்களுக்கு போதனை செய்யும் நாங்கள் , பிறர் பொருட்களை எடுக்க கூடாது என புத்தரே சொல்லி இருக்கிறார்

தற்போது விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை நான்கு கட்டமாக விடுவிப்பதாக கூறி இருப்பதும் ஏமாற்று வேலையே. நான்கு கட்டம் என கூறுவார்கள்.

பிறகு ஒவ்வொரு கட்டத்திற்கு இடையில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேலாகும். எனவே விடுவிப்பதனை ஒரு தடவையில் தர வேண்டும் என கோரி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. இதனால் தான் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என நான் குரல் கொடுத்தேன்.

அதன் பிறகு யாழ்ப்பாண நாக விகாரை விகாரதிபதியும் எனது கருத்தோடு ஒத்த கருத்தை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்தே தையிட்டி விகாரதிபதியும் ஊடக சந்திப்பினை மேற்கொண்டு , புதிய கட்டுமானங்களை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது. காணியை இழந்த இந்த மக்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடுவதனை நிறுத்த வேண்டும்.

இந்த மக்கள் தமது காணிகளை இழந்து வீதிகளில் நின்று போராடுகிறார்கள்.

அவர்களுக்கு காணிகளை கையளித்தால் , அவர்கள் போராட மாட்டார்கள் எனவே பொலிஸார் போராட்டங்களுக்கு தடை செய்யாது. போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு!! நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி appeared first on Oruvan.com.

தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் விரிவாக கலந்துரையாடினார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இக்கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

யாழில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினமும் ஆர்ப்பாட்டம்
யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றய தினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

The post யாழில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினமும் ஆர்ப்பாட்டம் appeared first on Oruvan.com.

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் appeared first on Oruvan.com.