Test Cricket Archives - Oruvan.com

தொடர் தோல்வியால் தடுமாறும் இங்கிலாந்து அணி!! ரவி சாஸ்திரி பக்கம் திரும்பும் கவனம்
ஆஷஸ் தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்துப் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த தொடரில் ஏற்கனவே மூன்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணியின் இந்த தொடர் தோல்விக்கு பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமே காரணம் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் பேஸ்பால் முறையை கையில் எடுத்தார். இந்த உத்தியால் முதல் 11 போட்டிகளில் 10 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

எனினும், அந்த உத்தியே தற்போது இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய எதிரியாக மாறியுள்ளது. எதிரணிகள் சுதாகரித்துக்கொண்ட நிலையில், இங்கிலாந்து கையில் எடுத்த உத்தி தோல்வியடைந்தது.

இதன் காரணமாக அடுத்த 33 போட்டிகளில் 16 வெற்றிகளை மட்டுமே பெற்றது இங்கிலாந்து அணி.

முன்னாள் வீரர்கள் முதல் பலரும் இந்த முறையை கைவிட வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும், இதனை அணி நிர்வாகம் காதில் வாங்கியதாக தெரியவில்லை. தற்போது ஆஷஸ் தொடரையும் இழந்துள்ளது.

இந்நிலையிலேயே, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் வலுபெற்றுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர், அவுஸ்திரேலியாவின் பலவீனத்தை அறிந்த ஒருவருக்குதான் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

அவரது தலைமையில்தான் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது என மாண்டி பனேசர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தொடர் தோல்வியால் தடுமாறும் இங்கிலாந்து அணி!! ரவி சாஸ்திரி பக்கம் திரும்பும் கவனம் appeared first on Oruvan.com.

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் போது  இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்கின் பிடியெடுப்பை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்மித் இதுவரை 62 பிடியெடுப்புகளை பிடித்துள்ளார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பிடியெடுப்புகளை செய்திருந்த கிரெக் சாப்பலின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் அதிக பிடியெடுப்புகளை பிடித்தவர் என்ற சாதனையை தன்வசப்படுத்தும் வாய்ப்பும் ஸ்மித்துக்கு கிட்டியுள்ளது.

அவர் இதுவரை 121 போட்டிகளில் 206 பிடியெடுப்புகளை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 213 பிடியெடுப்புகளுடன் முதலிடத்திலும்,  இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 210 பிடியெடுப்புகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, ஸ்டீவ் ஸ்மித் தனது வாழ்க்கையில் இதுவரை 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த காலகட்டத்தில், அவர் 214 இன்னிங்ஸ்களில் 55.82 சராசரியுடன் 10,496 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் 36 சதங்களும், 43 அரைசதங்களும் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக 239 ஓட்டங்களை ஸ்மித் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித் appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நேற்று (14) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

கிங்ஸ்டனில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி, டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வேகமான பந்து வீச்சாளர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். அவர் 7.3 ஓவர்களில் நான்கு ஓட்டமற்ற ஓவர்களாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்போது அவர் வெறும் ஒன்பது ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கூடுதலாக, தனது டெஸ்ட் வாழ்க்கையில் 400 விக்கெட்டுகளை கடந்த மிட்செல் ஸ்டார்க், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இரண்டாவது அணியாக மாறி மேற்கிந்திய தீவுகள் வரலாறு படைத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்படி, நேற்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸி. அணியின் தலைவராக ஸ்மித்
இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கமின்ஸ்க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒற்றை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றது.

முதலில் இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இவ்விரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றிருக்க இத்தொடர் அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு பயிற்சி தொடராக இருக்கும் என கருதலாம்.

மேலும் அவுஸ்திரேலிய அணி இறுதியாக இந்திய அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இலகுவாக கைப்பற்றியே இறுதிப் போட்டிக்கான தமது வரவை உறுதி செய்யதிருந்தது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் இன்று (9) அறிவிக்கப்பட்டது. இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கமின்ஸிற்கு ஓய்வு வழங்கியுள்ளது.

அதற்கேற்ப இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியை தலைமைப் பெறுப்பேற்று வழிநடாத்துகின்றார்.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியைப் பொறுத்தவரையில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களான ஸ்மித்துடன் உஸ்மான் கவாஜா, லபுச்சேன், அலெக்ஸ் கெரி மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் பந்துவீச்சாளர்களில் மிச்சல் ஸ்டார்க், நேதன் லயன், போலன்ட் ஆகியோருடன் அறிமுக வீரர்களான வெப்ஸ்ட்டர் அத்துடன் இளம் வீரரான நேதன் மெக்சீவனி, இளம் சுழல்பந்துவீச்சாளர்களான டொட் மேர்பி, மேட் குஹ்னமேன் ஆகியோருக்கும் அவுஸ்திரேலிய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஜோஷ் ஹேசல்வூட், மிச்சல் மார்ஷ் ஆகியோருக்கு உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

(அரபாத் பஹர்தீன்)

The post இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸி. அணியின் தலைவராக ஸ்மித் appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தொடர் முழுவதும் அதிகளவாக ரசிகர்கள் கூடியிருந்ததுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவருக்கொருவர் இரண்டு முறை விளையாடுகின்றன.

ஆனால் டெஸ்ட் போட்டியை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை பலனளித்தால், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது என கூறப்படுகின்றது.

அந்த வகையில், 2027ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இதேஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.

உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றலம் என கூறப்படுகின்றது.

அதேபோல், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது.

இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

The post டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா? appeared first on Oruvan.com.