Tehran Archives - Oruvan.com

ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தெற்கு நகரமான பீர்ஷெபாவில் ஈரான் இஸ்ரேல் மீது பல ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இஸ்ரேலில் நால்வர் உயிரிழந்த பின்னர் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்றும், ஆனால் இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்தினால் தெஹ்ரான் தாக்குதல்களை நிறுத்தும் என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார்.

அமெரிக்கா தனது அணு ஆயுத தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, திங்கட்கிழமை மாலை அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் கத்தாரில் உள்ள ஒரு இராணுவ தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.

கடந்த 13 ஆம் திகதியன்று இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து 13 குழந்தைகள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 3,056 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேலில், ஈரானிய தாக்குதல்களால் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு –  தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு appeared first on Oruvan.com.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – இராணுவ வெற்றி என ட்ரம்ப் பெருமிதம்
ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்களை அற்புதமான இராணுவ வெற்றி  என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நிறைவு செய்துள்ளோம் என ட்ரம்ப்  ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது,

“ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பர்தவின் முக்கிய தளங்கள் மீது முழு அளவில் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.

அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் சமாதானத்திற்கு இணங்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை ஃபோர்டோ தளத்தின் ஒரு பகுதி எதிரி தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும்  சேதத்தின் அளவை இதுவரை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவின் ஈடுபாடு மிகவும் ஆபத்தாக அமையும் என கூறப்படுகிறது.

The post ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – இராணுவ வெற்றி என ட்ரம்ப் பெருமிதம் appeared first on Oruvan.com.