teachers Archives - Oruvan.com

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நாடளாவிய ரீதியில் திமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவிப்பின்படி, தற்போது பொது சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் பெப்ரவரி ஐந்தாம் திகதி காலை 9.00 மணி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி இரவு 9.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

பொது சேவையில் இல்லாத பட்டதாரிகள் பெப்ரவரி 20 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மார்ச் ஐந்தாம் திகதி காலை 9.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்கள வலைத்தளமான www.doenets.lk இல் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

The post பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! appeared first on Oruvan.com.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த சங்கம் நேற்று அறிவித்தது.

அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என கூறிய அவர், தற்போது அரச கல்வி

வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தற்போது கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும்

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி
அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஆண்டு முதல் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவுசெய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500 தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

The post அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு  வழங்க அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, மினுவங்கொடை மற்றும் கட்டான பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே

பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர்,

”எமது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்படுகிறது. ஆனால் இன்றுவரை, உள்ளூராட்சி அமைப்புகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட வழங்குவதற்கான அமைப்பு இல்லை.

நாங்கள் சரியான வழிமுறையைப் பின்பற்றி, மோசடி அல்லது ஊழல் இல்லாமல் கவனமாகவும், சிக்கனமாகவும் செயற்படுவோம். தேவைகளை அடையாளம் கண்டு, ஒரு முறையான வேலைத்திட்டத்தின் மூலம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு முக்கியமான தேர்தல்களில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தலைவராக நீங்கள் தலைவர் தோழர் அனுரவைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதிக சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் பாராளுமன்றம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக சென்றுசேர்வதற்கு, மக்களுக்கும் கிராமத்திற்கும் மிக நெருக்கமான உள்ளூராட்சி நிறுவனங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அது மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமே, மோசடி மற்றும் ஊழல் இல்லாத எமது அரசியல் கலாசாரத்தை கிராம மக்கள் உணர்வார்கள். கிராமத்திற்கு வரும் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் கிராமத்திற்கு வரும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், தமது நேசத்திற்குரியவர்களுக்கு வழங்கப்பட்ட காலகட்டத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

கல்வியின் மிக முக்கியமான பகுதியாக முன்பள்ளிப் பருவ வளர்ச்சி இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை எதுவும் இல்லை. இப்போது அதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்திக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

கல்வி அமைச்சுக்கு பில்லியன் கணக்கு பெறுமதியான திட்டங்கள் கிடைத்துள்ளது. ஆனால் சரியான வேலைத்திட்டம் எதுவும் இருந்ததில்லை. கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவர் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 1,500 ஸ்மார்ட் பலகைகளைக் கொண்டு வந்துள்ளார், ஆனால் அவற்றைப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான முறையான திட்டம் இல்லை.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆசிரியர் கல்லூரிகள் இன்னும் பழைய பாடத்திட்டத்தையே கொண்டுள்ளன. புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நாங்கள் இப்போது அதையெல்லாம் சரிசெய்து வருகிறோம்.

இந்த அனைத்து விடயங்களையும் கிராமத்திற்கு முறையாக வழங்க, கிராமத்திற்கு சரியான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள ஊழல் மோசடியற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ருவந்திலக ஜயக்கொடி, சமிந்த லலித் குமார மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம் appeared first on Oruvan.com.