Teacher Archives - Oruvan.com

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை

பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதுக்குட்பட்ட நபர்கள் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான வர்த்தமானியின் கீழ், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம்

30 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் பொது சேவையில் பணியாற்றி, முறையான அனுமதியுடன்

ராஜினாமா செய்த நபர்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு முன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தால்

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் சேவைத் தேர்வு –  பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம் appeared first on Oruvan.com.

ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, தேசிய கல்வி நிறுவனம் (NIE) பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டத்தில் முதல் தர ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிற்சியாளர்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த பின்னர், பயிற்சித் திட்டம் மாகாண மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆறாம் வகுப்பு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்களுக்கு இணங்க, கல்வி வெளியீட்டுத் துறை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புதிய பாட அலகுகளை (தொகுதிகள்) அச்சிடுவதையும் ஆரம்பித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாரம்பரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The post ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்
பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (14) பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “புலதிசிய தருனை” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

பிரதமர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஒரு கல்விக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவை. எமது அரசாங்கம் கல்விக்கு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியின் தரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் நாம் செய்யப்போகும் கல்விச் சீர்திருத்தம் ஒட்டுப் போடுகின்ற ஏற்கனவேயுள்ள ஒன்றை இழுத்துச்செல்கின்ற ஒரு முறைமையல்ல. இது ஒரு தரமான மற்றும் மனிதாபிமான மற்றும் நவீன உலகை வெற்றிகொள்ளக்கூடிய ஒரு நபரை உருவாக்கும் கல்வி சீர்திருத்தமாகும.

கல்வியின் தரம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது, நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். உலகில் சிறந்த கல்வியை நம்மால் கொண்டு வர முடியும், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர முடியும், ஆனால் அனைத்தின் இறுதி முடிவு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தரம் மற்றும் மனித உறவுகளின் வலிமையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

இதுவரை நடைமுறையில் இருந்த கல்விச் சீர்திருத்தங்களில் மறந்து போன விடயம் என்னவென்றால், ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அறிவும் அளிக்கும் திட்டம் எதுவும் அவற்றில் இருக்கவில்லை என்பதுதான்.

பயிற்சி மற்றும் அறிவு மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதே எங்கள் முதன்மையான கவனமாகும்.

இன்றைய சமூகத்தில் ஒரு ஆசிரியருக்கு உள்ள அங்கீகாரம் பற்றியோ அல்லது ஆசிரியர் தொழிலை நீங்கள் தேர்ந்தெடுத்ததை பற்றியோ நீங்கள் திருப்பதியடைய முடியுமான நிலை உள்ளதா?

ஆசிரியர் தொழில் என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை உருவாக்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, அத்தகைய சக்தியும், வலிமையும், பொறுப்பும் கொண்ட ஆசிரியர்கள் இந்த நாட்டில் பிறக்க வேண்டும். ஆனால் அத்தகைய கல்வியைப் பெறுவதற்கான சூழல், வளங்கள் அல்லது உட்கட்டமைப்பு கல்விக் கல்லூரிகளில் உள்ளதா?

கல்விக் கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்குவது பற்றி ஒரு கருத்தாடல் இருப்பது பற்றி நான் அறிவேன். அதனை பெயர் பலகையை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். கடந்த காலங்களில் இப்படி நடந்துள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கத்தின் தரம் உள்ளதா என்பதுதான் பிரச்சினை” என அவர் மேலும் தெரிவித்தார்.

The post கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக  மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர் appeared first on Oruvan.com.

வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இதன்படி, 06 மற்றும் 07ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த ஆசிரியர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

The post வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் –  ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் appeared first on Oruvan.com.