Tariff Archives - Oruvan.com

மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

மார்ச் 18 ஆம் திகதி வரை கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவை மதிப்பாய்வு செய்த பின்னரான ஆலோசனைக் குறிப்பை www.pucsl.gov.lk இல் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின்சார கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியது

The post மின் கட்டண முன்மொழிவு –  பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் appeared first on Oruvan.com.

சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்து உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நிலையில்

இந்தியாவை மட்டும் அமெரிக்கா இலக்கு வைப்பதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது சீனா மீதும் அதிகளவான வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப் appeared first on Oruvan.com.

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்
இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் சேர்ந்து 45%-58% வரை அதிகமாக உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை ஏற்றுமதிகளுக்கு இவ்வளவு அதிக வரி விகிதம் விதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 17% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, உள்ளூர் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 37% ஆக அதிகரிக்க வேண்டும் என்று சங்கம் கருதுகிறது.

உள்ளூர் நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ளூர் வணிகங்களுக்கு இருபது சதவீத ஒதுக்கீட்டை வழங்கவும் சங்கம் முன்மொழிகிறது.

The post அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும் appeared first on Oruvan.com.

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44 வீதம் ஆகும்.

அதன்படி, இந்த முறை அமெரிக்கா அறிவித்த வரி விகிதம் முன்னர் அறிவிக்கப்பட்ட வரி விகிதத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (09) அறிவித்தார்.

இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25 வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20 வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஏற்றுமதிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவித்த 30 வீத வரி விகிதம் “பலவீனமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நாம் செலுத்த வேண்டிய விலை” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், அதன் ஈகோ காரணமாக, பேச்சுவார்த்தைகளில் இலங்கையர்களின் ஆதரவை நாடவில்லை என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர், இது தான் செலுத்த வேண்டிய இழப்பீடு என்று வலியுறுத்துகிறார்.

The post இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மின் கட்டணங்களில் 18.3% அதிகரிப்பை இலங்கை மின்சார முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட வீதம் இந்த ஆண்டு ஜனவரியில் செயற்படுத்தப்பட்ட கட்டணத்தை விட 5.4% குறைவு எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

The post மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் appeared first on Oruvan.com.

இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பு – வோஷிங்டனில் உயர் மட்ட கலந்துரையாடல்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன்

டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் இடம்பெற்றதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ், இலங்கைப் பொருட்களுக்கு 44% வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் குறிப்பாக இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான ஆடைத் துறையைப் பெரிதும் பாதிக்கிறது.

வோஷிங்டனில் இடம்பெற்று வரும் கலந்துரையாடல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

The post இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பு – வோஷிங்டனில் உயர் மட்ட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிகள் காரணமாக உலகளாவிய உற்பத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரி மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு (தென்னாப்பிரிக்க பொருட்களுக்கு 88 சதவீதம் போன்றவை) அதிக வரிகள் உள்ளிட்ட புதிய வர்த்தக தடைகள், உலகளாவிய சந்தைகளை சீர்குலைத்து, நுகர்வோரை கடுமையாக பாதித்துள்ளது.

குறிப்பாக ஆப்பிளின் ஐபோன் போன்ற பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான விலை உயர்வுகளால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீனா மற்றும் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்காக தயாரிக்கப்படும் கூறுகளுக்கான வரிகள் இறுதி தயாரிப்பின் விலையில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி சந்தையில் ஆப்பிள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவில், கட்டணங்கள் ஐபோன் விலையில் வியத்தகு அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

தற்போது அமெரிக்காவில் சுமார் 1,600 டொலர் விற்பனையில் உள்ள ஒரு உயர்நிலை ஐபோன், ஆப்பிள் கட்டணச் செலவுகளை நுகர்வோருக்கு மாற்றினால் கிட்டத்தட்ட 2,300 டொலராக உயரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் சீன இறக்குமதிகளுக்கு 54 சதவீத வரியை விதித்துள்ளது, பெரும்பாலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் சீனா, ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு 20 சதவீத வரியுடன், பிராந்தியங்கள் முழுவதும் ஆப்பிளின் விநியோகச் சங்கிலியைப் பாதித்தது.

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்கனவே வியத்தகு முறையில் எதிர்வினையாற்றியுள்ளது, ஆப்பிளின் பங்குகள் ஒன்பது சதவீதமும், நாஸ்டாக் சுமார் ஆறு சதவீதமும் சரிந்துள்ளது. ஐரோப்பாவும் இதேபோன்ற அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகளில் 20 சதவீத வரியை சமாளிக்க வேண்டியுள்ளது, இது பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தூண்டுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்காவில் ஐரோப்பிய முதலீட்டை நிறுத்தி வைக்க அழைப்பு விடுத்துள்ளார், இது ஆழமடைந்து வரும் வர்த்தகப் போரை குறிக்கிறது.

ஐரோப்பிய நுகர்வோருக்கு, இந்த கட்டணங்களின் அலை விளைவு ஐபோன் விலைகளையும் உயர்த்தக்கூடும்.

குறிப்பாக ஆப்பிள் அதன் ஆசிய உற்பத்தி மையங்களிலிருந்து அதிகரித்த இறக்குமதி செலவுகளை ஈடுசெய்ய அதன் விலை நிர்ணய உத்தியை கையாள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம் appeared first on Oruvan.com.

அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான தனது கார்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆண்டு உற்பத்தியில் கால் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடுமையான வரிகளுக்கு நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்படும் வரை, குறுகிய கால நடவடிக்கையாக ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் எட்டு கார்களில் ஒன்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், டிரம்ப் விதித்த புதிய வர்த்தக விதிகள் காரணமாக வாகன உற்பத்தித் துறையில் 25,000க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர் appeared first on Oruvan.com.

அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே இந்த வரி எடுத்துக் காண்பிக்கிறது.

ஜனபதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள் இந்த வரி தெற்காசியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டாலும், இந்திய – சீன முரண்பாடுகள் அதற்குச் சாத்தியமானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே பிறிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொது நாணயத்தை உருவாக்குவது பற்றிய பேச்சுகள் வெற்றிபெறவில்லை.

ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அத்துடன் ஒற்றுமையாகச் செயற்படும் நாடுகள். இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான யூரோ நாணயம் வெற்றிபெற்றது. ஆனால் பிறிக்ஸில் அங்கம் வகிக்கும் நாடுகள் மத்தியில் அவ்வாறன ஒற்றுமை ஒல்லை.

இந்த நிலையில், சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற ‘பிறிக்ஸ் பிரேசில் 2025’ என்ற இணையவழி பேட்டியில் பிரேசியல் நிதி அமைச்சின் சர்வதேச விவகாங்களுக்கான செயலாளர் டாட்டியான ரோசிட்டோ, ‘பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தேசிய நாணயங்களை பயன்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளார். பிரேசிலின் பொருளாதார அமைச்சு அதற்கான திட்டங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பிறிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யும்போது அமெரிக்க டொலரின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிக்கு பிரேசில் ஆதரவளிக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை ரசிய ஊடகமான டாஸ் (TASS) வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி அறிவிப்புக்கு மத்தியில், தேசிய நாணயங்களை பயன்படுத்துவது பற்றி பேசியிருப்பது டொனல்ட் ட்ரம்ப்புக்கு சவாலாக இருக்கும் என்றும், தேசிய நாணயம் மட்டுமல்லாது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக, ”புதிய வளர்ச்சி வங்கி”

(New Development Bank – NDB) என்ற வங்கி ஒன்றை உருவாக்கவும் பிறிக்ஸ் நாடுகள் தீவிரமாக முயன்று வருவதாக இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இப் பின்னணியிலேதான் தேசிய நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்குவது பற்றி பிறிக்ஸ் நாடுகள் ஏற்கெனவே பேசி வந்த நிலையில், இதற்கான சரியான தருணம் இதுதான் என்று டாட்டியானா ரோசிட்டோ கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என ரசிய ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால் பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்புக்கான ”பொது நாணயம்” பற்றிய பேச்சுக்கள் எழுந்த 2020 இல் இந்தியா அமைதி காத்தது. அது மாத்திரமல்ல பிறிக்ஸ் நாணயம் சாத்தியப்படக்கூடியதல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் உறுதியாகக் கூறியிருந்தார்.

இப் பின்புலத்தில் இந்திய வர்த்தகச் செயற்பாடுகளில் தம்முடன் இணைந்திருக்கும் என்று நியுயோர்க் டைம்ஸ் செய்தி அப்போது வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிடம் பிறிக்ஸ் நாணயம் பற்றிய பேச்சில் இந்திய பங்கெடுக்காது என்று உறுதியளித்திருந்தார்.

இப் பின்னணியில் அதுவும் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னரான நிலையில், பிறிக்ஸ் நாடுகளின் தேசிய நாணயங்களை வர்த்தகச் செயற்பாட்டில் பயன்படுத்தலாம் என்ற யோசனை எவ்வளவு தூரம் சாதியமாகும் என்ற கேள்விகள் இல்லாமில்லை.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச வர்த்தகம் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான குளோபல் ரேட் றிசேச் இனிவேற்றீவ் (Global Trade Research Initiative) தரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல துறைகளிலும் உற்பத்திகளை வேகப்படுத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்க வரி விதிப்பு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அறிவுரை வழங்கியுள்ளது.

சீனா 32 வீதம், தைவான், 32வீதம் ஐரோப்பிய ஒன்றியம், 20 வீதம் இந்தியா 26வீதம், ஜப்பான் 24 வீதம், வியட்நாம் 46 வீதம், தாய்லாந்து 26 வீதம் பிரிட்டன் 10 விதம், இலங்கை 44 வீதம் என்ற அடிப்படையில் பெருமளவு வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடபட்டுக் கொண்டிருக்கும் இந்தியா உள்ளூர் உற்பதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை அமெரிக்க வரி தூண்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனாலும் இதற்காக இந்தியா மிகக் கடுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், முக்கியமான துறைகளிலும் சொந்த உற்பத்தி என்பது மிகச் சுலபமானது அல்ல என்றும் இந்த நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

ஓட்டோ மொபைல் பாகங்கள் மற்றும் பொம்மை உற்பத்தி துறைகளில் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. ஆனாலும் இந்த உற்பதிகளுக்கு இந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கிறது.

இதனைச் சாதமாக்கி இந்தியா அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்தால் வரியின் பாதிப்பிலிருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியும் என்று மற்றொரு இந்திய பொருளியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை போன்ற சிறிய நாடுகளுடன் வா்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியங்கள் குறித்தும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் மிகவும் சிறிய அயல்நாடான இலங்கை 44 வீத விரியை எதிர் கொண்டிலுருக்கிறது.

ஆடை உறப்த்தி மாத்திரமே இலங்கையின் ஏற்றுமதியாகும். முன்னர் 12 வீதம் என்றிருந்த வரியை டொனால்ட் ட்ரம்ப் 44 வீதமாக உயர்த்தியதன் மூலம் இலங்கையின் ஆடை ஏற்றுமதி பாதிப்படையும் என பெருளாதார நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சா டி சில்வா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்திய மற்றும் பங்களாதேஸ் ஆடைகள் அமெரிக்க ஏற்றுமதியில் கூடுதல் பங்காற்றியிருந்தன. இலங்கையின் தைத்த ஆடைகளைவிடவும் இந்த நாடுகளின் தைத்த ஆடைகள் அமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியிருந்த நிலையில் இந்த வரி அதிகரிப்பு இலங்கையைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்திய முதலீட்டாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தைத்த அடைகளுக்கு வேறு சர்வதேச் சந்தைகளை இலங்கை பெற முடியாத சூழல் இருப்பதாகவும் இந்திய ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை, குறிப்பாக சர்வதேசக் கடன்களை செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியிருக்கும் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி பெரும் பாதிப்பைச் செலுத்தும் என்பது பகிரங்கமான உண்மை.

இந்த நிலையில், கொழும்புக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேறு பொருளாதார சலுகைகளுக்கான உறுதிமொழி வழங்குவார் என அரசாங்கம் நம்புகின்றது.

ஏற்கனவே இந்தியாவுடன் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தாமல் தாமதிக்கப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

அதேநேரம் இலங்கை மீதான வரியைக் குறைப்பதானால் இலங்கையின் சில முக்கிய தளங்களை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டிய ஆபத்துகள் நேரலாம் என்ற அச்சங்களும் உண்டு.

எவ்வாறாயினும் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்த ஜேவிபி குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க வரிக்குப் பின்னரான சூழலில் இந்தியாவா? சீனாவா? என்ற திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.

அதாவது வர்த்தகச் செயற்பாடுகளில் சீனாவுடன் முழுமையாகச் செல்வாதா அல்லது இந்தியாவை நம்புவதா என்ற பெரும் குழப்பத்துக்குள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

எண்பது வருட இனப் பிரச்சினைக்குரிய நிரந்த அரசியல் தீர்வை முன்வைத்து வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை முன்னேற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற கட்டமைப்பை மாற்றி பன்முகத் தன்மை கொண்ட அரசாக மாற்றாமல் அது சாத்தியமாகது என சிங்கள ஆய்வாளர் அசோன லியனகே 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் இனியாவது உணரத் தலைப்பட வேண்டும்.

அ.நிக்ஸன்

The post அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும் appeared first on Oruvan.com.