tamilnadu Archives - Oruvan.com

விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலியில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கே.டி.சி நகர் பகுதியில் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.

பாதுகாப்பு கருதி, 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

The post விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில் appeared first on Oruvan.com.

புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி சட்டமன்ற உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.

The post புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்
சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை அவர் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளா்ச்சிக்காக மத்திய அரசு 150 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், செத்துப்போன மொழியான சம்ஸ்கிருதத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையிர் இந்திய அரசியல் சாசன சட்டத்தை அவமதித்து தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பது துரதிஷ்டவசமானது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

The post சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம் appeared first on Oruvan.com.

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணை தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது.

அவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும், தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க தமிழகம் வருவது என அந்தப் பெண் முடிவெடுத்து உள்ளார்.

இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இரண்டு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார்.

அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.

The post காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு appeared first on Oruvan.com.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலையொன்றை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து சிலை கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மிழக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (02) மாலை திருச்சூரில் உள்ள அண்ணா காலனியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 35 வயதுடையவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களிடம் உள்ள சிலையின் மதிப்பு மில்லியன் கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அந்த சிலை தங்கம், வெள்ளி, ஈயம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஐந்து உலோகங்களால் ஆன ஒரு பழங்கால சிலை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிலையை இலங்கைக்கு கொண்டு சென்று பின்னர் ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதாக தெரியவந்தது.

The post இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலை பறிமுதல் appeared first on Oruvan.com.

நீங்கள் அவமானத்தை ஏற்படுத்தவில்லையா? – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தலைவரும், நடிகருமான விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை, “காவல் நிலைய மரணங்கள்” தொடர்பாக திமுக ஆட்சியை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

“விளம்பர் திமுக சர்க்கார் தற்போது மன்னிப்பு கேட்கும் சர்க்காராக மாறிவிட்டது” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர்,

‘திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரியிருந்தார். நல்ல விஷயம்.

ஆனால், 2021 முதல் திமுக ஆட்சியின் போது காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 24 உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரிடமும் முதலமைச்சர் “ஸ்டாலின் மன்னிப்பு கேட்டாரா” என்று விஜய் கேள்வியெழுப்பியிருந்தார்.

“தயவுசெய்து அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேளுங்கள்; மேலும், பாதிக்கப்பட்ட 24 பேரின் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளித்தீர்களா? தயவுசெய்து அவர்களுக்கும் நிதியுதவி வழங்குங்கள்,” என்று அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே. பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சாத்தான்குளம் வழக்கை அப்போதைய அதிமுக ஆட்சி சிபிஐக்கு மாற்றியபோது, அது தமிழக காவல்துறைக்கு அவமானம் என்று ஸ்டாலின் கூறியதாக விஜய் கூறினார்.

அஜித் குமார் காவல் மரண வழக்கை சில நாட்களுக்கு முன்பு சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, அவமானத்தை ஏற்படுத்தவில்லையா என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் அஜித் குமார் காவல் சித்திரவதை உள்ளிட்ட பல “வன்கொடுமைகள்” வழக்குகள் குறித்து நீதிமன்றம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

“நீதிமன்றம் எல்லாவற்றிலும் தலையிட்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்? அரசாங்கத்தின் நோக்கம் என்ன? முதலமைச்சர் அலுவலகத்தின் நோக்கம் என்ன?”

கேள்விகள் எதுவாக இருந்தாலும், எந்த பதிலும் இருக்காது. அரசாங்கத்திடம் பதில்கள் இருந்தால் மட்டுமே பதில்களை வழங்க முடியும், மேலும் இது தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

“உங்களிடமிருந்து அதிகபட்ச பதில் மன்னிப்பு மட்டுமே. “விளம்பர் திமுக சர்க்கார் தற்போது மன்னிப்பு கேட்கும் சர்க்காராக மாறிவிட்டது” எனவும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

“திறமையற்ற திமுக அரசாங்கத்தின் பதவிக்காலம்” முடிவதற்குள், அது சட்டம் ஒழுங்கு நிலைமையை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், மக்களுடன் இணைந்து, அதைச் செய்ய வைப்போம்” என்று விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நீங்கள் அவமானத்தை ஏற்படுத்தவில்லையா? – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய் appeared first on Oruvan.com.

“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்
விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,

“தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? உயிரைக் குடிக்கும் விஷக் கடைகளை அரசு திறக்கிறது. ஆனால், கள் கடைகளை ஏன் திறப்பதில்லை.

தேசிய பானம் கள்ளுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அனுமதியுண்டு.

கள் மது என்று கூறினால், அப்போது டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது என்ன தீர்த்தமா?

இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதலமைச்சருக்கும் சாராய ஆலை இல்லை. ஆனால் தமிழகத்தில் இருக்கிறது. இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் எப்பொழுதும் பாஸ் மார்க் தான்.

வருடத்துக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில்” இவ்வாறு சீமான் அம் மாநாட்டில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post “டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான் appeared first on Oruvan.com.

200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒரேஞ்ச் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, திருவாரூர், சிவகங்கை காஞசிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர், கன்னியாகுமாரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஒரேஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 115.6 மில்லிமீட்டர் முதல் 201.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

திருவண்ணாமலை, அரியலூர், திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர்,கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் appeared first on Oruvan.com.