Tamil Archives - Oruvan.com

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.

மேலும், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூடைகள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,  சந்தேகத்திற்கிடமான 16 மூடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் appeared first on Oruvan.com.

இந்திய சட்டசபைத் தேர்தல் – கருத்து கணிப்புகளுக்கு நாளை முதல் தடை
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 07 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 6.30 வரை கருத்து கணிப்புகளை நடத்துவதற்கு மற்றும் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை (9) சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய திபதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய சட்டசபைத் தேர்தல் – கருத்து கணிப்புகளுக்கு நாளை முதல் தடை appeared first on Oruvan.com.

மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள்
மத்திய மாகாணத்தில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி ஆளுநர் செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பீ.எஸ்.அபயகோன் தலைமையில் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது இலங்கை அதிபர் சேவைக்கென 27 பேருக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

The post மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் appeared first on Oruvan.com.

தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு
தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அவரை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை அகில இந்திய காங்கிரஸ் குழுவின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கணேசநாதன் கேதீஸ்வரன் மீது தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இலங்கை தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை தூதுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படாத நிலையில், துணை தூதுவர் ஒருவர் மீது வரலாற்றில் முதன்முறையாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கேதீஸ்வரன், வைதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குள்ள உள்ளூர் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கோரிக்கைக்கமைய, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உறுதியளித்தார்.

இந்த கூட்டம் இலட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வி.பி.ராமலிங்கமும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘X’ சமூக தளத்தில் பவன் கேரா வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தூதர்கள் தலையீடு செய்யக் கூடாது என்று கூறும் வியன்னா தூதரக உறவுகள் ஒப்பந்தத்தை இந்த நிகழ்வில் இலங்கை தூதரின் பங்கேற்பு மீறப்பட்டுள்ளதாக பவன் கேரா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதுகுறித்து தூதரக ரீதியான பதிலை வழங்குவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என  தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு, நேற்று (04) சனிக்கிழமை இரவு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட நள்ளிரவுத் திருப்பலிகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றதுடன், தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி நேற்று இரவு 11.15 க்கு ஆரம்பமானது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இத்திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்ட இத்திருப்பலியின் போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஆலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Oruvan.com.

தங்கத்தின் இன்றைய நிலவரம்
தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,913 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கத்தின் இன்றைய நிலவரம் appeared first on Oruvan.com.

ஈரானில் நிலஅதிர்வு
ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையும், ஈரானின் தெற்குப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேலும் அமெரிக்காவும் இஸ்லாமியக் குடியரசு மீது தாக்குதல்களைத் தொடங்கி மத்திய கிழக்கு முழுவதும் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post ஈரானில் நிலஅதிர்வு appeared first on Oruvan.com.

தங்கத்தின் விலை குறைந்தது
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 376,500 ரூபாவாகக்

குறைந்துள்ளது.

22 கரட் தங்க பவுணொன்றின் விலை நேற்றைய தினம் 388,500 ரூபாவாக காணப்பட்டது.

இதனிடையே நேற்றைய தினம் 420,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 407,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தங்கத்தின் விலை குறைந்தது appeared first on Oruvan.com.