Tamil News Archives - Oruvan.com

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI
தற்கால உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தப் பின்னணியில், ‘Claude Mythos’ போன்ற மிகவும் முன்னேற்றமடைந்த AI மென்பொருட்கள், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சாதாரணமாக ஒரு கணினி வலையமைப்பில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்கு மனிதர்களுக்குப் பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். ஆனால், இந்த ‘Mythos’ போன்ற புதிய AI தொழில்நுட்பங்கள் மிகக் குறுகிய நேரத்தில், அதாவது சில நிமிடங்களிலேயே பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறிந்துவிடும். இதன் மூலம் எதிரிகள் நமது இராணுவத் தொடர்புகள், ரேடார் அமைப்புகள் மற்றும் தளவாட விநியோகங்களை முடக்கும் அபாயம் உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் தமது டிஜிட்டல் கட்டமைப்பிற்கு அமெரிக்க மென்பொருட்களையும் (Software) மற்றும் சீன வன்பொருட்களையும் (Hardware) தான் அதிகம் நம்பியுள்ளன. இது ஒரு “ஆபத்தான கலவை” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும்போது, அவசர காலங்களில் நமது தகவல்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

தீர்வு என்ன? இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், பின்வரும் நான்கு விடயங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது:

சொந்தத் தயாரிப்பு: வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்காமல், சொந்தமாகவே பாதுகாப்பு மென்பொருட்களை உருவாக்க வேண்டும்.

தொடர்ச்சியான கண்காணிப்பு: இராணுவக் கட்டமைப்பில் உள்ள மென்பொருட்களை AI மூலம் தொடர்ந்து பரிசோதித்து, ஓட்டைகளை உடனுக்குடன் அடைக்க வேண்டும்.

தாக்கும் திறன்: தற்காப்புடன் மட்டும் நின்றுவிடாமல், எதிரிகளின் இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கத் தேவையான முன்னேற்றமடைந்த AI தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும்.

வேகம்: எதிரிகள் தாக்குவதற்கு முன்பே அவர்களைக் கண்டறிந்து தடுக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், கத்திக்குக் கத்தி என்பது போல, எதிரிகளின் AI தாக்குதலைச் சமாளிக்க நாமும் நவீன AI தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

The post பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI appeared first on Oruvan.com.

அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்
அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயல்திட்டப் பணிப்பாளர் ஷெரீன் அதுகொரலா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று ஒரு வழக்கமான அலுவலக நாள் என்பதால், அலுவலக இரயில் சேவைகள் வழக்கம் போல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் உரிய இரயில்கள் சேவையில் இணைக்கபட்டுள்ளதாக இரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

The post அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் appeared first on Oruvan.com.

முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி! யாழில் பல லட்சங்களை பறிகொடுத்த நபர்
யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் பல பகுதிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி செய்யப்படும் பின்னணியில் இந்த சம்பவதும் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோசடிக் கும்பல் உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனியார் தொலைத்தொடர்பு சேவை ஒன்றின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்திற்கு வந்த வங்கியின் கடவுச்சொற்களை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணத்தினைத் திருடியுள்ளனர்.

அதேபோன்று முதியவர் ஒருவரிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு அவருக்கும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் எட்டு லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக கூறி அவரது வங்கி தகவல்களை பெற்றதுடன், வங்கியில் இருந்து தொலைபேசிக்கு வந்த கடவுச்சொற்களையும் பெற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை களவாடியுள்ளதாகத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தொலைபேசி இலக்கத்திற்கு வரும் வங்கியின் கடவுச்சொற்களை (OTP) இலக்கங்களை வேறு நபர்களுக்கு பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி! யாழில் பல லட்சங்களை பறிகொடுத்த நபர் appeared first on Oruvan.com.

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் ஏற்கனவே இதுபோன்ற பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணைகளை நெறிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சில விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது
இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

விமானத்தின் முதல் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது முயற்சி விபத்தாக மாறியதாகவும் அது மேலும் கூறியது.

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 737-800 விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறுக்கு பறவை மோதல் காரணமாக சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து காட்சிகளில் இரட்டை எஞ்சின் விமானம் தரையிறங்கும் கியர் இல்லாமல் முவானில் தரையிறங்குவதையும், விமான நிலையத்தின் வெளிப்புற விளிம்பில் உள்ள சுவரில் மோதி வெடித்தமையும் காட்டப்படுள்ளது.

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். யோன்ஹாப்பின் கூற்றுப்படி, இரண்டு பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்ட மூவரை மீட்புக் குழுக்கள் காப்பாற்றியுள்ளனர்.

தென் கொரியாவின் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய பிராந்திய மையமான தென்மேற்கு கடலோர விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

தொடர்ச்சியான அரசியல் நெருக்கடியின் மத்தியில், நாட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட தற்காலிக ஜனாதிபதி சோய் சாங்-மோக், முழு மீட்பு முயற்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியாவில் இந்த பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது.

செச்சென் தலைநகர் க்ரோஸ்னிக்கு செல்லும் வழியில் ரஷ்ய வான் பாதுகாப்பிலிருந்து விமானம் சுடப்பட்டதாகவும், அதை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், நேற்று இரவு செயிண்ட் ஜோன்ஸிலிருந்து கனடாவின் ஹாலிஃபாக்ஸ் வந்த விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால், ஓடுபாதையில் இருந்து சறுக்கி பகுதியளவு தீப்பிடித்ததால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

The post 100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன? appeared first on Oruvan.com.

சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82 (ஏ) பிரிவின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

The post சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே டிக்கெட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய ரயில்வே டிக்கெட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

The post புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட் appeared first on Oruvan.com.