Tamil Nadu Elections - Announcement issued by the Election Commission Archives - Oruvan.com

தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135பி-இன்படி எந்த ஒரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பில் பணிபுரிபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.

இற்காக எந்த பிடித்தமும் செய்யப்படாது. இந்த விதிகளை மீறும் எந்த ஒரு உரிமையாளரும் அபராதத்துக்கு உள்ளாவார் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலை அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது வேலை செய்யும் வாக்காளர்கள், தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தால், வாக்குப்பதிவு நாளன்று தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு எனவும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இதை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.