Switzerland Archives - Oruvan.com

சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார், வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா ஸ்கை ரிசார்ட்டில் உள்ளபாரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

மேலும், பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி 01:30 மணிக்கு (00:30 GMT) கான்ஸ்டலேஷன் பாரில் வெடிப்பு நிகழ்ந்தது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத காட்சிகள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பார் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்ஸ்-மொன்டானா என்பது சுவிஸ் தலைநகர் பெர்னிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள சுவிஸ் ஆல்ப்ஸின் மையப்பகுதியில் உள்ள ஒரு அழகிய ஸ்கை ரிசார்ட் நகரமாகும்.

The post சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் appeared first on Oruvan.com.

சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர்
சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சிலின் இரண்டாவது உப தலைவராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரா ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து பெடரல் நாடாளுமன்றத்தில் இத்தகைய உயர்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாரா ரூமி எதிர்வரும் வருடத்தின் ஆரம்பப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு, மருதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த முகம்மது ரூமி மொஹிதீன் மற்றும் இஸ்ஃபியா ரூமி தம்பதியினரின் புதல்வியாவார்.

34 வயதுடைய தாதியரான பாரா ரூமி, வைத்திய நிபுணருமாவார்.

மேலும், கொழும்பு பிஷப் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1998 ஆம் ஆண்டில் இவர், குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 முதல், ரூமி கிரென்சென் நகரத்திற்கான நகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அவர் இயற்கைமயமாக்கல் ஆணையத்தின் உறுப்பினராகவும், ஸ்பைடெக்ஸ் கிரென்சென் வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் ரோடானியா அறக்கட்டளையின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தில் அவரது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் சுகாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை மற்றும் சம வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

The post சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர் appeared first on Oruvan.com.

சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.

1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது.

விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.