supports Archives - Oruvan.com

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர்.

லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,

“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகளுக்கு ரணில் ஆதரவு
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் திட்ட செயல்முறையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளது.

அரச வைத்தியர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில் பின்வருவன அடங்கும்:

ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 1/80 பங்கை கூடுதல் கடமைப் படியாகப் பராமரிக்கவும், விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 1/20 பங்கைப் பராமரிக்கவும், அதற்கேற்ப அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் முடிவை செயல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

The post அரச வைத்திய அதிகாரிகளுக்கு ரணில் ஆதரவு appeared first on Oruvan.com.