Sunday Archives - Oruvan.com

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கமைய, பொலிஸார் மற்றும்

இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நாடு தழுவிய ரீதியில்

தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு,

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – 12 பேர் விடுவிப்பு
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 02 ஆண் சந்தேக நபர்களையும், 10 பெண் சந்தேக நபர்களையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்து,  பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை மீண்டும் அவர்களுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரினார்.

அதன்படி, அவர்களது பொருட்களை சந்தேக நபர்களுக்கு விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – 12 பேர் விடுவிப்பு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல் appeared first on Oruvan.com.