successful Archives - Oruvan.com

இஸ்ரோவின் ககன்யான் ஏர் டிராப் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்தின் இரண்டாவது கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கல மாதிரியை வளிமண்டலத்திலிருந்து தரையிறக்கும் ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தியது.

இதன்படி இந்திய விமான படையின் சினூக் ஹெலிகொப்டர் மூலம் ஏறத்தாழ 06 டொன் நிறையுள்ள விண்கல மாதிரி 3 கிலோ மீற்றர் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட நிலையில், பாராசூட் உதவியுடன் விண்கல மாதிரி கடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய கடற்படை மூலம் விண்கல மாதிரி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தியது. ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

The post இஸ்ரோவின் ககன்யான் ஏர் டிராப் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன்

டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் இடம்பெற்றதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர வரிகள் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ், இலங்கைப் பொருட்களுக்கு 44 வீதம் வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் குறிப்பாக இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான ஆடைத் துறையைப் பெரிதும் பாதிக்கிறது.

வோஷிங்டனில் இடம்பெற்று வரும் கலந்துரையாடல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

The post அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் கலந்துரையாடல் வெற்றி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் அதன்படி இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இரு கட்சிகளையும் இணைப்பது மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்த வாரத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ருவன் விஜேவர்தன ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கபீர் ஹஷீம் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் கலந்துரையாடல் வெற்றி appeared first on Oruvan.com.