strong Archives - Oruvan.com

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை

மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 முதல் இரவு 11:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்

செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளின் சில பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலையிலும் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்
மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து யாங்கோன் நகரத்திலிருந்தும் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிலும் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

The post மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் appeared first on Oruvan.com.

இவ்வாண்டில் வலுவான மீட்சியில் இலங்கை கவனம் செலுத்தும்
இலங்கை 2024 ஆம் ஆண்டு 5 வீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் இந்த ஆண்டு வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும் எனவும் , இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிக உயர்ந்ததாக இருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கித் தலைவர் பி.நந்தலால் வீரசிங்க இன்று (8) தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் 2022ஆம் ஆண்டில் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் பாதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுதவியை பெற்று, டிசம்பர் மாதத்தில் 25 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைத்த பின்னர் எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்தது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பொருளாதாரம் 5.2 வீத வளர்ச்சியடைந்தது, இது இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 3 வீத மதிப்பீட்டை விட அதிகமாகும் என்று ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையான பகுதியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு CBSL 5 வீத பணவீக்க விகிதத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாலுக்குமான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இவ்வாண்டில் வலுவான மீட்சியில் இலங்கை கவனம் செலுத்தும் appeared first on Oruvan.com.