strike Archives - Oruvan.com

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு வழங்காவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று தான் நினைப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதற்கு செவிசாய்க்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், இன்று முதல் பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இல்லாத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைத்து துண்டுகளை வழங்குவதை நிறுத்துதல்.

வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைப்பதைத் தடுத்தல்.

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் தன்னார்வமாகப் பங்கேற்பதில் இருந்து விலகுதல்.

தேவையான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இன்றி, வைத்தியசாலை கட்டமைப்பில் புதிதாகத் திறக்கப்படும் நோயாளர் விடுதிகள் மற்றும் அலகுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதைத் தடுத்தல்.

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பேணத் தேவையான போதிய வசதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றி நோயாளர்களைப் பரிசோதிப்பதில் இருந்து விலகுதல்.

நிபுணத்துவ வைத்தியர்கள் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் மாத்திரம் சேவையாற்றுவதுடன், நிபுணத்துவ வைத்தியர்கள் இல்லாத ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதில் இருந்து விலகுதல்.

போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, சுகாதார அமைச்சருக்கு தீர்வுகளை முன்வைக்க 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து சாதகமான பதில் எவையும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி கூடிய சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில், இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை தீவிரப்படுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

The post அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்! appeared first on Oruvan.com.

நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி
வைத்தியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், நான்காவது நாளாக அரசு வைத்தியசாலைகளில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (26) காலை 8.00 மணி முதல், அரசு வைத்தியர் அதிகாரிகள் சங்கம் (GMOA) பல வழக்கமான சேவைகளில் இருந்து விலகியது, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அவசர சேவைகள் பராமரிக்கப்பட்டாலும், தினசரி பொது சுகாதார சேவையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் தாமதங்கள், சிரமங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர்.

ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்வுகளை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தத் தவறியதால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வைத்தியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பேசிய, பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி, வைத்தியர்கள் தங்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலந்துரையாடல்களுக்கு அமைச்சகம் திறந்தே இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

The post நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி appeared first on Oruvan.com.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்
அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படாததைக் கண்டித்து, இன்று காலை 08.00 மணி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரியின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அந்த விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரியை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், இடைநிறுத்தப்பட்ட அந்த காலப்பகுதிக்குள் சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே, மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டுள்ளதாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த போராட்டத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.

எவ்வாறாயினும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சை சேவைகள் (Emergency Services) தடையின்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது

The post கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம் appeared first on Oruvan.com.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த சங்கம் நேற்று அறிவித்தது.

அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என கூறிய அவர், தற்போது அரச கல்வி

வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தற்போது கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும்

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம் appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்

43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்த ஒரு நாளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் காசாவில் தனது முக்கிய நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து காசா நகரத்தின் மக்கள்தொகையில்

சுமார் 450,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

காசா மிக மோசமான மரணம் மற்றும் அழிவை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

தெரிவித்துள்ளார்.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்கின.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை அமல்படுத்த தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் ‘சமகி சேவை சங்கமய’வின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.

அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்தார்.

இருப்பினும், தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபால பேசுகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே ஒருங்கிணைந்த கால அட்டவணை உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

இதற்கிடையில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று கூறினார்.

வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், நள்ளிரவில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வழக்கம் போல் தங்கள் சேவைகளைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் appeared first on Oruvan.com.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது.

அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

The post தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.