Srikanth Archives - Oruvan.com

நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது,

ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? குழந்தையை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார்.

ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.

திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை.

மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.

மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.

மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது.

இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன.

திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றஞ்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும்.

எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரைக்கும் விற்பனையாகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

ஒரு கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார்.

அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள்.

இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு சுசித்ரா கூறினார்.

தினகரன்

The post நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி appeared first on Oruvan.com.

“நான் தவறு செய்துவிட்டேன்” – போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் நேற்று கைதான ஸ்ரீகாந்த் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன்.

மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஸ்ரீகாந்த் பிணை கோரினார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு ‘கொகைன்’ விநியோகம் செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜோன் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜோன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார்? என்ற பட்டியலை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து பொலிஸார் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஜோன் குறிப்பிட்டிருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் பொலிஸார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post “நான் தவறு செய்துவிட்டேன்” – போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் appeared first on Oruvan.com.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்
பிரபல தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக உள்ள தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் உண்மையிலேயே பிரசாந்திடமிருந்து போதைப்பொருளை பெற்றாரா? எதற்காக ஸ்ரீகாந்த் பெயர் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இரத்த மாதிரிகளின் முடிவு வெளியான பின் இந்த விவகாரத்தில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் appeared first on Oruvan.com.