Sri Lankans Archives - Oruvan.com

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது .

அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க அவதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தெற்கு இஸ்ரேலிலுள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குறித்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.

இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post இஸ்ரேல் மீதான ஈரானின்  தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம் appeared first on Oruvan.com.

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்கிறார்.

ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று (27) ஜப்பான் சென்றடைந்தார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா(Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கை தூதர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஜப்பானின் ஒசாகாவில் ஏற்பாடு செய்த “எக்ஸ்போ 2025” இலங்கை தின நிகழ்வில் நேற்று (27)ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இன்று (28) காலை Shin- Osaka ரயில் நிலையத்திலிருந்து டோக்கியோவுக்குப் பயணமான

ஜனாதிபதி, இன்று பிற்பகல் டோக்கியோவில்,ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.

தனது விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவை சந்திக்க உள்ளதோடு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா(Shigeru Ishiba) மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

இலங்கை மற்றும் ஜப்பான் வர்த்தக சபைகள் இணைந்து டோக்கியோவில் ஏற்பாடு செய்துள்ள இலங்கை முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்த விஜயத்திற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் டோக்கியோவில் இணைந்து கொள்வர்.

The post ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை  ஜனாதிபதி இன்று சந்திக்கிறார் appeared first on Oruvan.com.

பாகிஸ்தானில் இலங்கையர்கள் இருவர் கைது
பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது , மொத்தமாக 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர் என்பதை பாகிஸ்தானியத் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மோசடி அழைப்பு மையத்தில், அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற போர்வையில் பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு பெரும் தொகை மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வே நாட்டவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குகின்றனர்.

The post பாகிஸ்தானில் இலங்கையர்கள் இருவர் கைது appeared first on Oruvan.com.

சட்டவிரோதமாக தமிழகத்திற்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் செல்ல முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கடனட்டை மற்றும் 46,000 ரூபாய் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மூவரையும் கைதுசெய்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கரையோர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் தமிழகத்திற்குள் சென்று அங்கிருந்து

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவுதத் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

The post சட்டவிரோதமாக தமிழகத்திற்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது appeared first on Oruvan.com.

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு
கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பிடங்களிலேயே இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவசர நிலைமைகளின் போது 109471182587 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியுமென கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

The post கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமடையலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக கூறினார்.

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்கு மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புதுடில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வருகைத்தந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று சனிக்கிழமை (21) இந்த அறிக்கையை வெளியிட்டது.

தற்போது ஈரானில் உள்ள எந்தவொரு இலங்கையரும் வெளியேற விரும்பினால், உத்தியோகப்பூர்வ டெலிகிராம் தளம்  அல்லது பின்வரும் தொலைபேசி எண்கள்

ஊடாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

+98 901 014 4557  ,     +98 912 810 9115,      +98 912 810 9109

மேலும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவும்  தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

+98 939 205 5161,    +98 991 205 7522,  +98 936 636 0260

இதேவேளை, ஈரானில் உள்ள நேபாளம் நாட்டைச் சேர்ந்தோருக்கும் இந்தியா இதே உதவியை வழங்குகிறது.

‘ஆபரேஷன் இண்டஸ்’ திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

The post ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா appeared first on Oruvan.com.

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

The post தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார்.

அங்கு வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜேர்மனியில் வசிக்கும் பல இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மக்களை அன்புடன் வரவேற்று உரையாற்றுகையில், ஒரு வளமான அரசுக்கு நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, சரிந்த அரசை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிலையான ஆரம்பம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

The post ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி appeared first on Oruvan.com.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு
மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது.

விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின் மிசோட்டிலுள்ள தாய்லாந்து இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

The post மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு appeared first on Oruvan.com.