Sri Lanka Weather Archives - Oruvan.com

கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம், குருநாகலை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை நான்கு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிரிந்திவெலையில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 244 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவிவரும் கனமழை காரணமாக, மூன்று மாவட்டங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று அதிகாலை 3.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கல பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிக்கு முதல் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை
எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியன் எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனிக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 02.04.2026 முதல் 15.04.2026 வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38-42 பாகை செல்சியஸ் ஆக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக்கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸை்விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் எதிர்வரும் நாட்களில் (02.04.2026 முதல் 15.04.2026)வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்.

-புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

The post சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

The post ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on Oruvan.com.

27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே நாளை முதல் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில்/ இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையும் என்பதனால் இன்று முதல் எதிர்வரும் 27.01.2026 வரை குளிர் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 29.01.2026 முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post 27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்! appeared first on Oruvan.com.

வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடைச் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.

மத்திய, மேல், சபரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் எதிர்வரும் 15.01.2026 வரை மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இரவில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சியும், ஈரப்பதன் மாற்றமும் குளிரான வானிலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது.

– நாகமுத்து பிரதீபராஜா –

The post வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்! appeared first on Oruvan.com.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல்
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) காலை 10.00 மணி நிலவரப்படி, பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (10) மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை இடையே இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல் appeared first on Oruvan.com.

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மண்சரிவுகள் தொடர்பான சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதன்படி, ஈதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அனர்த்த நிலைமை காரணமாக நடைபெறாத உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2086 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், அதிபரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விண்ணப்பதாரர்கள் பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சை எழுதலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள் appeared first on Oruvan.com.

சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள் காட்டி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இதனை தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் கிழக்கு கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, வட மாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் 75 – 100 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

அதேபோல், வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் 50 – 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அவ்வப்போது 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு 75 – 100 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட மேலும் தெரிவித்துள்ளார்.

The post சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 86.00 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

இத் தொகுதி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The post இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் நாளை முதல் கன மழை!
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்ந்து நாளை (08) இலங்கையின் கிழக்கு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், அடுத்த சில நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறும் மெரில் மெண்டிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இதற்கிடையில், இன்று முதல் காங்கன்சதுரை முதல் திருகோணமலை வரையிலும், மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் திரு. மெரில் மெண்டிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post இலங்கையில் நாளை முதல் கன மழை! appeared first on Oruvan.com.