Sri Lanka Population Archives - Oruvan.com

இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி
இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறுவர் மட்டத் தொகை 40 தொடக்கம் 42 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தொகை 20 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு, திருமண தாமதம் மற்றும் உயர்கல்வியில் பங்கேற்பு அதிகரிப்பு ஆகியவை சிறுவர் மட்டத் தொகை குறைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

மேலும், சிறுவர் மட்டத் தொகையில் ஏற்படும் சரிவு எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் விரிவாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி appeared first on Oruvan.com.

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது.

2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாடுபூராகவும் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது.

2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர்.

இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது.

மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர்.

மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர்.

The post இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம் appeared first on Oruvan.com.