Sports News Archives - Oruvan.com

செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்
தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட  தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர்,  நான்கு மாதங்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பயிற்சியின் கீள் விளையாடிய 23 போட்டிகளில் 11இல் மட்டுமே செல்சி அணி வெற்றி பெற்றிருந்தது.

செல்சி அணியின் 114 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கோல் கூட அடிக்காமல் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

பிரைட்டன் அணிக்கு எதிரான 1-0 என்ற கோல் கணக்கில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ரோசெனியர் தனது அணியின் வீரர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அணியின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அணியின் இணைப் பயிற்சியாளர் காலும் மெக்ஃபார்லேன், இந்தப் பருவம் முடியும் வரை இடைக்கால மேலாளராகப் பொறுப்பேற்பார் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரைட்டன் அணியுடன் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து செல்சி அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவுகள் மீண்டும் தகர்ந்துள்ளன.

இன்னும் நான்கு சுற்றுகளே மீதமுள்ள நிலையில், செல்சி அணி 48 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம் appeared first on Oruvan.com.

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி
கராபோ கிண்ண இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது.

வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி  அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் இளம் வீரர் நிக்கோ ஓ’ரெய்லி இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ஆட்த்தின் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை, ஆனால் இரண்டாம் பாதியில் மான்செஸ்டர் சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஓ’ரெய்லி 60வது மற்றும் 64வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

சிறப்பான ஆட்டத்திறனில் இருந்த அர்செனலை, மான்செஸ்டர் சிட்டி தந்திரமான நகர்வுகள் மூலம் ஒரு தீர்க்கமான போட்டியில் தோற்கடித்தது.

ஆட்டம் முழுவதும் கடுமையாகப் போராடிய போதிலும், கோல் அடிப்பதில் ஏற்பட்ட தவறுகளால் ஆர்செனல் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பருவம் முழுவதும் இதுவரை அணியைச் சிறப்பாக வழிநடத்தி வரும் மான்செஸ்டர் சிட்டி அணியின்  தலைவர்  பெர்னார்டோ சில்வா, இந்த வெற்றிஅனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம் என்று விவரித்தார்.

அணியில் உள்ள அனைவருக்கும் இது மிகுந்த பெருமைக்குரிய தருணம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பருவத்தில் சிறப்பாக விளையாடி வரும் அர்செனலை வீழ்த்தி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி appeared first on Oruvan.com.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டக் பிரேஸ்வெல் ஓய்வு!!
நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

எலும்பு காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டக் பிரேஸ்வெல் 28 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் அவர் 74 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 46 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டக் பிரேஸ்வெல் ஓய்வு!! appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், பலர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜேடன் லெனாக்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணியில் அவர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

அவருடன், கிறிஸ் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், நிக் கெல்லி, சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிட்செல் ரே ஆகியோரும் ஒருநாள் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

டி20 போட்டிகளுக்கு மிட்செல் சாண்ட்னர் அணிக்கு தலைமை தாங்குவார்.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோது ரச்சின் ரவீந்திராவுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காயம் காரணமாக நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர் மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோரும் ஒருநாள் தொடருக்குத் தெரிவுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு appeared first on Oruvan.com.

லசித் மலிங்காவிற்கு புதிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லசித் மலிங்காவிற்கு புதிய பதவி appeared first on Oruvan.com.

தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்க இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஐந்துப் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் மூன்றுப் போட்டிகளில் இந்திய அணி இரண்டுப் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருநு்தது.

எனினும், நான்காவது போட்டி மோசமான சூழ்நிலை காரணமாக ஒரு பந்தேனும் வீசப்படாத நிலையில், கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் தொடரை தீர்மானிக்கும் வகையில் இந்த போட்டி தீர்க்கமானதாக மாறியுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவதுடன், இந்திய அணியின் தொடர்ச்சியான 14வது டி20 சர்வதேச தொடர் வெற்றியாகவும் அமையும்.

இதற்கிடையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய தென்னாப்பிரிக்கா முயற்சிக்கும்.

எனவே, இரு அணிகளும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 35 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் 20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!! தொடரை கைப்பற்றுமா இந்தியா? appeared first on Oruvan.com.

இங்கிலாந்து அணிக்கு DRS Review வாய்ப்பை மீண்டும் வழங்க தீர்மானம்
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆஷஸ் (Ashes) டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து அணி இழந்த ஒரு மீளாய்வு (DRS Review) வாய்ப்பை மீண்டும் வழங்க போட்டி நடுவர் தீர்மானித்துள்ளார்.

அடிலெய்டு மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் போது, அவுஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி 72 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜோஷ் டங் வீசிய பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்ததாக இங்கிலாந்து முறையிட்டது.

கள நடுவர் அதனை ஆட்டமிழக்கவில்லை (Not Out) என்று அறிவித்த நிலையில், இங்கிலாந்து அணி அதற்கு மீளாய்வு கோரியது. அப்போது, ‘சினிக்கோ’ (Snicko/RTS) தொழில்நுட்பத்தில் பந்து துடுப்பைக் கடந்து செல்வதற்கு முன்னரே சத்தம் (Spike) கேட்டதால், தொலைக்காட்சி நடுவர் கள நடுவரின் முடிவைச் சரி என அறிவித்தார்.

போட்டி முடிவடைந்த பின்னர், தான் அந்தப் பந்தைத் துடுப்பால் அடித்ததை அலெக்ஸ் கேரி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ‘சினிக்கோ’ தொழில்நுட்பத்தை வழங்கிய பிபிஜி ஸ்போர்ட்ஸ் (BBG Sports) நிறுவனம், தொழில்நுட்பத்தை இயக்கியவர் தவறுதலாக வேறு ஒரு ஒலிவாங்கியை (Stump Mic) தெரிவு செய்ததால் இந்தத் தவறு நிகழ்ந்ததாகக் கூறி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

இதனால் அதிருப்தியடைந்த இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் முகாமையாளர் ஆகியோர் போட்டி நடுவர் ஜெப் குரோவிடம் (Jeff Crowe) பேச்சுவார்த்தை நடத்தினர்.

விதிமுறைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறால் ஒரு மீளாய்வு தடைப்பட்டால் அதனை மீண்டும் வழங்க நடுவருக்கு அதிகாரம் உண்டு. இதன்படி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் அந்த மீளாய்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஆட்டமிழந்திருக்க வேண்டிய அலெக்ஸ் கேரி தொடர்ந்து விளையாடி சதம் (106) கடந்த பின்னரே இந்தத் தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

The post இங்கிலாந்து அணிக்கு DRS Review வாய்ப்பை மீண்டும் வழங்க தீர்மானம் appeared first on Oruvan.com.

துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு சதங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விராட் கோலி குவித்திருந்தார்.

இதன்படி, புதிய தரவரிசையின் படி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ள விராட் கோலி 773 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஒரு இடம் பின் தள்ளப்பட்டுள்ளதுடன், 766 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் முதலிடத்திலும் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் இரண்டாவது நீடித்துள்ளனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் நீடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம் appeared first on Oruvan.com.

புதிய சாதனை படைத்தார் பும்ரா
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல் இருபதுக்கு இருபது போட்டியில் டெவால்ட் ப்ரூயிஸூன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் ஐந்தாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா படைத்துள்ளார்.

இலங்கை அணியின் லசித் மலிங்க, நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி, பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளனர்.

இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ராவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

பும்ரா இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 99 இன்னிங்ஸ்களில் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இருவரை  81 சர்வதேச டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post புதிய சாதனை படைத்தார் பும்ரா appeared first on Oruvan.com.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் குகதாஸ் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை அணி ஐக்கிய அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளது.

இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷூடன் குழு பி இல் இடம்பெற்றுள்ளதுடன், முதல் போட்டியில் 13ஆம் திகதி நேபாள அணிக்கு எதிராக விளையாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு appeared first on Oruvan.com.